காலத்திற்கு ஏற்றார் போல் மனிதனின் உணவு பழக்கங்கள் மாரி வருகின்றன. நமது உடலும் அந்த உணவிற்கு ஏற்றார் போல் செலயல்படுகிறது. ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்கள் நமது உடலில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
இன்று பல பேருக்கு இளநரை பிரச்சனை உள்ளது, மேலும் இதை தடுப்பதற்கான டிப்ஸ் இதோ உங்களுக்காக.
நான்கு ஸ்பூன் மருதாணிப் பொடி, இரண்டு ஸ்பூன் காபி அல்லது டீ டிகாஷன், ஒரு முட்டை, அரை ஸ்பூன் விளக்கெண்ணெய் ஆகியவற்றை கலந்து, தலையில் நன்றாக தேய்த்து, ஒரு மணிநேரம் ஊற வைத்துப் பின் கூந்தலை குளிர்ந்த நீரில் அலசினால் இளநரையானது படிப்படியாக குறையும்.
வெள்ளைப் பூவான கரிசாலையை நன்கு காய வைத்து, அரைத்து பொடி செய்து, ஒரு மாதம் இளநீரிலும், ஒரு மாதம் தேனிலும் கலந்து உண்ண வேண்டும். இதனால் இளநரை மாறும்.
தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெயுடன் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டு கலந்து தலைக்கு பூசி நன்கு மசாஜ் செய்து, குளித்து வந்தால், இளநரையானது போகும். ஆகவே மேற்கூறிய இயற்கையான உணவினாலும், சரியான பராமரிப்பாலும் இளநரையை வராமலும், வந்த இளநரையை போகவும் செய்யலாம்.
நெல்லிக்காயை தினமும் ஒன்று என்று சாப்பிட்டு வர, நமது உடலில் நோய் எதிர்ப்பு பெருகும். மேலும் அதிலுள்ள வைட்டமின் “சி” முடியை கருமையடையச் செய்யும்.
மருதாணி இலையை அரைத்து எண்ணெயில் போட்டு காய்ச்சி பூசி வந்தால், இளநரையானது விரைவில் நீங்கும்.
கறிவேப்பிலையை சமைக்கம் உணவில் அதிகம் சேர்த்து, அதனை சாப்பிட்டால் உடலில் இரும்புச்சத்து அதிகமாகி கூந்தலானது கருமையாக வளரும்.
கறிவேப்பிலையை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து காய்ச்சி, கூந்தலுக்கு தடவி வந்தால் இளநரையானது வராமல் இருக்கும்.