25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
fgjf
அழகு குறிப்புகள்

சர்க்கரையை கொண்டே சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்ற முடியும்.

சருமத்தில் நாள்தோறும் செல்கள் உருவாவது, இறப்பதும் சாதாரண விஷயம். இறந்த செல்களை சருமம் தனது துவாரத்தின் மூலம் வெளியேற்றிவிடும்.

அந்த துவாரம் முழுவதும் தூசி, அழுக்கு படிந்திருந்தால், இறந்த செல்கள் வெளியேறாமல் அங்கேயே தங்கிவிடும். அதனால் தான் சருமம் கடினமாகி, சொரசொரப்புடன், சீக்கிரம் வயதான தோற்றத்தை பெறும்.

இதற்காக முகத்தை தினமும் கழுவி பராமரித்தால், அழுக்குகள் வெளியேறி சுத்தமாகும். விடாப்படியான இறந்த செல்களை ஸ்க்ரப் மூலம் அகற்றலாம். அவை சருமதில் உள்ளே சென்று அழுக்குகளையும் இறந்த செல்களையும் நீக்கும். ஆனால் ஸ்க்ரப் நாம் கடையில் ஏன் வாங்க வேண்டும். வீட்டிலேயே தயாரிக்கலாம்.

சாதாரணமாக மஞ்சளும், உப்பும் அழுக்குகளை அகற்றி, முகத்தை பளிச்சிட வைக்கும். சர்க்கரையும் அவைகளுக்கு போட்டியாக சருமத்தை காக்கும். இந்த சர்க்கரை ஃபேஸ் பேக்கை எவ்வாறு செய்வது என்பதை பார்ப்போம்.
fgjf
தேவையானவை: சர்க்கரை – 1 டேபிள் ஸ்பூன், ஆலிவ் ஆயில் – 2 சொட்டு, எலுமிச்சை சாறு – 2 சொட்டு.

எலுமிச்சை சாறு முகத்திலுள்ள கருமையை போக்கும். சர்க்கரை இறந்த செல்களை அகற்றும். ஆலிவ் ஆயில் சருமத்திற்கு ஈரப்பதம் அளித்து முகத்தை பொலிவாக்கும். ஆலிவ் ஆயிலுடன் சர்க்கரையையும், எலுமிச்சை சாறினையும் சேர்த்து நன்றாக கலக்கவும். பின் அதனை முகத்தில் போட்டு மெதுவாக மசாஜ் செய்யவும். 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவுங்கள். உங்கள் முகம் பளிச்சிடும்.

Related posts

இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தால் தழும்புகளை காணாமல் போக செய்யும் துளசி பேஸ் பெக் !

nathan

நிமைல் பற்றிய அறிமுகம். என்னை மிகவும் ஆச்சிரியமூட்டிய அறிமுகம்.

nathan

மிளகு உங்கள் சருமத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்!…

sangika

பனிக்காலத்தில் சருமத்தைப் பொலிவாக்க சில டிப்ஸ்!

nathan

ரச்சித்தாவிடம் எல்லை மீறி நடந்துகொண்ட ராபர்ட் மாஸ்டர்

nathan

பியூட்டி – நைட் க்ரீம்

nathan

முகத்தில் எண்ணெய் வடிதலை நிறுத்த இதை செய்யுங்கள்!….

sangika

வீட்டிலேயே நாமாகவே ஃபேஷியல் செய்யும் முறை

nathan

சூப்பர் டிப்ஸ் முழங்கை, முழங்கால்களில் கருமை நீங்க..

nathan