30.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
hgjhjg
அழகு குறிப்புகள்

சரும கருமையைப் போக்க வீட்டிலேயே ப்ளீச்சிங் செய்ய போறீங்களா?

பொதுவாக ப்ளீச் செய்யப் பயன்படுத்தும் மூலப்பொருட்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை. எனவே இவற்றால் சரும பாதிப்புகள் ஏற்படலாம்.

தற்போது சந்தையில் பல்வேறு நிறுவனங்கள் ப்ளீச் பொருட்களை விற்பனை செய்து வருகின்றன. உங்கள் சருமத்திற்கு சரியான ப்ளீச்சைத் தேர்ந்தெடுக்கும் போது, உங்கள் விரலில் சிறிது அளவு ப்ளீச் எடுத்து காதுக்கு பின்னால் தடவவும். உங்களுக்கு ஏதேனும் எரிச்சல் அல்லது அரிப்பு ஏற்பட்டால் இந்த ப்ளீச் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். சென்சிடிவ் சருமம் உள்ளவர்களுக்கு இந்த சோதனை மிகவும் அவசியம்.

அழகான சருமம் பெறுவதற்காக நீங்கள் ப்ளீச் பயன்படுத்தும் போது பின்பற்ற வேண்டிய சில குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
hgjhjg
பயன்படுத்துவதற்கு சரியான வழி

முகத்திற்கு ப்ளீச் தடவும் போது உங்கள் கைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். இதற்கு மாற்றாக ஒரு மென்மையான ப்ரஷ் பயன்படுத்தி உங்கள் முகத்திற்கு ப்ளீச் தடவவும். இதனால் உங்கள் நகங்கள் மற்றும் கைகள் தூய்மையாக இருக்கும். மேலும் ப்ரஷ் பயன்படுத்தி தடவுவதால் முகம் முழுவதும் ப்ளீச் சீராக பரவும். சீரான சருமம் பெறுவதற்கு உங்கள் கழுத்து பகுதியிலும் ப்ளீச் தடவ மறக்க வேண்டாம். ஏதேனும் எதிர்வினை ஏற்படுவதைத் தவிர்க்க கண்கள் மற்றும் நாசி பகுதிகளில் இதனைத் தடவ வேண்டாம்.

ப்ளீச் செய்வதற்கு முன்னர் முகத்தைக் கழுவவும்

ப்ளீச் பயன்படுத்துவதற்கு முன்னர் முகத்தை நன்றாகக் கழுவவும். சுத்தமான தண்ணீரில் முகத்தைக் கழுவிய பின், ப்ரீ-ப்ளீச் க்ரீம் எடுத்து முகத்தில் தடவி, 10 நிமிடங்கள் முகத்தைக் கைகளால் மசாஜ் செய்யவும். சருமம் மென்மையாகவும் சுத்தமாகவும் மாறும் போது, ஒரு சிறிய கிண்ணத்தில் 1 அல்லது 2 டீஸ்பூன் ப்ளீச்சிங் கிரீம் எடுத்துக் கொள்ளுங்கள். மேலும், 1 முதல் 2 சொட்டு ஆக்டிவேட்டரைச் சேர்க்கவும். ஆக்டிவேட்டர் அளவு அதிகமாக இருக்கக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்; இல்லையெனில், அது சருமத்திற்கு சேதத்தை ஏற்படுத்தும்.

15 நிமிடங்களுக்குப் மேல் அதை வைக்க வேண்டாம்

ப்ளீச் சருமத்தில் மிக அதிகமாக ஊடுருவக்கூடும். எனவே ப்ளீச் முகத்தில் இருக்க வேண்டிய நேரம் குறித்த விழிப்புணர்வு மிகவும் அவசியம். வெறும் 15 நிமிடங்கள் மட்டுமே உங்கள் முகத்தில் ப்ளீச் இருக்க வேண்டும். 15 நிமிடத்திற்கு பின், ப்ளீச் காய்ந்தவுடன் மென்மையான காட்டன் துணியால் அல்லது டிஷ்யூ பேப்பரால் முகத்தை சுத்தம் செய்வது அவசியம். இதன் பிறகு, போஸ்ட்- ப்ளீச் க்ரீம் சிறிதளவு எடுத்து கைகளில் தொட்டு, முகம் மற்றும் கழுத்து பகுதியில் சுழல் வடிவத்தில் மசாஜ் செய்யவும். இதனால் உங்கள் சருமத்திற்கு நல்ல புத்துணர்ச்சி கிடைக்கும். ப்ளீச்சை 15 நிமிடங்களுக்கும் மேலாக வைத்திருப்பது, சரும எரிச்சலுக்கு வழிவகுக்கும். மேலும், அரிப்பு காரணமாக மற்ற தோல் பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கும்.
tyrty

பருக்கள் இருக்கும் போது ப்ளீச் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்

உங்கள் முகத்தில் ஏற்கனவே இருக்கும் பருக்களிலிருந்து ப்ளீச் சிறிது நிவாரணம் வழங்கலாம் என்று நீங்கள் நினைத்தால், ஒன்றிற்கு இரண்டு முறை சிந்தியுங்கள். பருக்கள் அல்லது கட்டிகள் இருக்கும் போது ப்ளீச் பயன்படுத்துவது சருமத்திற்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த சூழ்நிலைகளில் ப்ளீச் பயன்படுத்துவதால் தொற்று பாதிப்பு ஏற்படலாம் அல்லது பாதிப்பு மேலும் மோசமடையலாம். முகத்திற்கு த்ரெட்டிங் அல்லது வாக்சிங் செய்த பின்னர் ப்ளீச் செய்வதைத் தவிர்க்கவும். இல்லையேல் சருமத்தில் எரிச்சல் மற்றும் தடிப்பு ஏற்படும் வாய்ப்பு உண்டாகும்.

Related posts

செட்டிநாடு பீன்ஸ் காலிஃப்ளவர்

nathan

நடிகையை ரகசியமாக துரத்தி துரத்தி காதலித்து வந்த நடிகர் விஜய்..

nathan

ஒருவர் எப்படிபட்ட பெண் ணை மணந்துகொண்டால் அவர் அதிர்ஷ்டசாலியாக வாய்ப்புள்ளது தெரியுமா?

sangika

அழகு குறிப்புகள்:மாசு மருவற்ற முகம் வேண்டுமா?

nathan

தீக்காயங்களுக்கான சிகிச்சை!….

sangika

பேரீச்சம்பழ பேஸ்பேக் -தெரிந்துகொள்வோமா?

nathan

துலாம் ராசிபிறந்தவர்கள் இப்படித்தான் இருப்பார்களாம்?

nathan

உங்களுக்கு தெரியுமா பெண்களின் கருமுட்டை வலி எதனால் ஏற்படுகிறது?.! சரியாக என்ன செய்வது?.!!

nathan

மாசு இல்லாத முக அழகு வேண்டுமா?

nathan