28.9 C
Chennai
Wednesday, Jan 28, 2026
கூந்தல் பராமரிப்புதலைமுடி சிகிச்சை

கூந்தல் உதிர்வை தடுக்க இரவில் செய்ய வேண்டியவை

கூந்தல் உதிர்வை தடுக்க இரவில் செய்ய வேண்டியவை
தற்போது கூந்தல் பிரச்சனைகள் அதிகரித்துவிட்டதால், பலரும் தங்கள் கூந்தலின் மீது அதிக அக்கறை காட்டுகிறார்கள். இரவில் படுக்கும் போது ஒருசில விஷயங்கள் தவறாமல் பின்பற்றி வந்தால் முடியின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம். அவை என்னவென்று பார்க்கலாம்…எப்போதுமே இரவில் படுக்கும் முன், சீப்பு கொண்டு ஒருமுறை தலையை சீவ வேண்டும். இதனால் ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டம் அதிகரித்து, முடியின் வளர்ச்சி அதிகரிக்கும். மேலும் கூந்தல் உதிர்வதையும் தடுக்க முடியும்.இரவில் படுக்கும் முன், கை விரல்களால் ஸ்கால்ப்பை சிறிது நேரம் (குறைந்தது 10 நிமிடங்கள்) மசாஜ் செய்து விட வேண்டும். இதனால் ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டம் அதிகரிப்பதோடு, மன அழுத்தம், தலை வலி போன்றவையும் நீங்கும். தினமும் இரவில் ஸ்கால்ப்பிற்கு சிறிது எண்ணெய் தடவ வேண்டும். குறிப்பாக கோடையில் இந்த செயலை தவறாமல் செய்ய வேண்டும்.இது கூந்தலுக்கு ஊட்டம் அளித்து முடி உதிர்வு, இளநரை போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கும். இரவில் படுக்கும் போது, முடியை லூசாக விட்டு தூங்குங்கள். ஏனெனில் நாள் முழுவதும் கட்டியவாறு இருந்ததால், மயிர்கால்களால் சரியாக சுவாசிக்க முடியாமல், அதன் ஆரோக்கியம் அழியும்.

ஆகவே இரவில் படுக்கும் போது ப்ரீ ஹேர் விட்டு தூங்கினால், மறுநாள் காலையில் கூந்தல் நன்கு புத்துணர்ச்சியுடன் ஆரோக்கியமாக காணப்படும்.

Related posts

கூந்தல் உதிர்வை உடனடியாக தடுக்கும் ஹேர் ஆயில்

nathan

உங்க முடி ரொம்ப வறண்டு இருக்குதா? இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan

பெண்களே முடி கிடு கிடுனு வளர இதை தடவுங்க…

nathan

நீண்டநேரம் ஹெல்மெட் பயன்படுத்துபவர்கள் முடி உதிர்வைத் தடுக்க

nathan

பேன் தொல்லையை போக்கும் இயற்கை வழி

nathan

செம்பருத்தி பூவின் மகத்தான பலன்கள்…..

nathan

வாரத்திற்கு ஒரு முறையாவது வெந்தய குளியல் முடி வளர்ச்சிக்கு

nathan

25 வயதிற்கு கீழே இருப்பவர்களுக்கு ஏன் முடி சீக்கிரம் உதிர்கிறது தெரியுமா?

nathan

முடி உதிர்வை எப்படி சமாளிக்கலாம் தெரியுமா?

nathan