SaiPalla
தலைமுடி சிகிச்சை

உங்களுக்கு தெரியுமா நீளமான கூந்தல் உள்ள பெண்கள் அதில் வல்லவர்களா?

பெண்கள் என்றாலே அழகு தான். ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு தனித்துவம் இருக்கும். சிலருக்கு சிரித்தால் கன்னத்தில் குழி விழும்.

சிலருக்கு வட்டமான முகம் அவர்களது அழகை எடுத்துக் காட்டும். சிலருக்கு உடல் வாகு, பலருக்கு புட்டுன்னு இருக்கும் கன்னம்.ஆனால், பொதுவாக அனைத்து பெண்களையும் அழகாக காட்டும் ஒரு விஷயம் இருக்கிறது எனில் அது அவர்களது கூந்தல் தான்.

பேருந்தில், வகுப்பறையில், மார்பில் மனைவி சாய்ந்திருக்கும் போதென அவர்களது கூந்தல் நறுமணத்தை நாசியின் மூலம் களவாடாத ஆண்களே இல்லை

அழகு

பெண்களுக்கு கூந்தல் தான் மிகப்பெரிய அழகு. அதிலும் அவர்கள் காதோரம் கூந்தலை விரல்களால் கோதிவிட்டுக் கொண்டு, கழுத்தை திருப்பும் அழகை எத்தனை நேரம் வேண்டுமானாலும் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

அழகு

பெண்களிடம் ஓர் செய்கை இருக்கிறது, அமைதியாக முதுகில் பரவிக்கிடக்கும் கூந்தலை, குழந்தையை போல தோளில் அள்ளிப் போட்டுக் கொண்டு, சிறிது நேரத்தில் தலை மிடுக்காக திருப்பி மீண்டும் குழந்தையை தொட்டிலில் போடுவது போல முதுகில் சாய்ப்பது. ஆஹா… எத்தனை அழகு!

மணம்

பெண்களின் கூந்தலில் மணம் இருக்கிறதா இல்லையா என்பது இந்திரன் காலத்தில் இருந்து இன்றைய எந்திரன் காலம் வரை நீடித்துக் கொண்டே தான் போகிறது. ஆனால், அவரவருக்கு பிடித்த பெண்களின் கூந்தல் மணம் ஆண்களின் நாசியிலே குடியிருக்கும் என்பது காதல் மன்னர்களுக்கு மட்டுமே தெரியும்.

அதிலும், என்ன மாயமோ மல்லிகை பெண்களின் கூந்தலில் குடியேறும் போது மட்டும், ஆண்களின் மனது குடை சாய்ந்து விடுகிறது. மணம் எங்கிருந்து வந்தால் என்ன, ஆண்களின் மனம் திருடும் அழகு பெண்களின் கூந்தலுக்கும் இருக்கிறது.

அலங்கார மாளிகை

பெண்களின் கூந்தல் அழகு மட்டுமல்ல, அலங்கார மாளிகையும் கூட. நீளமான கூந்தல் இருக்கும் பெண்களுக்கு தான் பூக்களை வைத்து நிறைய சிகை அலங்காரம் செய்ய முடியும்.

இப்போதெல்லாம், திருமணத்தின் போது மட்டும் சவுரி முடியில் பிளாஸ்டிக் பூக்களை சூடிக் கொண்டு சில மணிநேரத்தில் கட்டி எழுப்பி அந்த அலங்கார மாளிகையை இடித்து நொறுக்கி விடுகிறார்கள்.

பொறாமை

தங்கள் மனைவி அல்லது காதலிக்கு நீளமான கூந்தல் இருந்தால் அழகு என்பதையும் தாண்டி, பத்து பேர் வயிர் எரியும் என்பதும் ஓர் கொசுறு செய்தி. பொதுவாக ஓர் பெண்ணுக்கு நீளமாக கூந்தல் இருந்தால், அது மற்ற பெண்களுக்கு சுத்தமாக பிடிக்காது. சற்று பொறாமைப்படுவார்கள்.

ஏன் இன்றைய காலத்தில் ஆண்களே, இன்னொரு ஆணுக்கு அதிகமாக கூந்தல் இருந்தால் பொறமைப் படுகிறார்கள். மற்றவர்களை பொறாமைப் பட வைக்கவும் கூட சிலர் தங்களுடைய துணைக்கு நீளமான கூந்தல் இருக்க வேண்டும் என விரும்புகிறார்கள்.

புராணம்

புராணம் முதலே பெண்கள் என்றால் அவர்களுக்கு நீளமான கூந்தல் இருக்கும் அது அவர்களுடைய அழகின் மணிமகுடம் என்பது போல உவமை கூறி சென்றுவிட்டனர். இதிலிருந்து வெளியே வர தமிழ் ஆண்களின் மனம் கொஞ்சம் தடுமாற தான் செய்யும்.

ஆனால், வேலை இடம், ஸ்டைல் மாற்றம், ஷாம்பூ செலவு, முடி உதிர்தல் போன்ற காரணங்களை காட்டி இன்றைய பெண்கள் பெரும்பாலும் நீளமாக கூந்தலை வளர்ப்பது இல்லை.

அதில் வல்லவர்கள்

உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? பெண்களுக்கு எவ்வளவு கூந்தல் நீளமாக இருக்கிறதோ, அவ்வளவு அதிகம் அவர்களுக்கு அந்த விஷயத்தில் ஈடுபாடு இருக்கும் என்று பண்டையக் காலம் முதலே கூறப்பட்டு வருகிறது.

கணவன் இறந்த பிறகு, மற்ற ஆண்களின் மீது ஆசை அலைபாயக் கூடாது என்பதற்காக தான் மனைவிக்கு அந்த காலத்தில் மொட்டை அடிக்கப்பட்டது என்றும் சில கூற்றுகள் மூலம் தகவல் தெரிய வருகிறது.

வேறென்ன வேண்டும்

நீளமான கூந்தலை கொண்டுள்ள பெண்கள் மீது ஆண்களுக்கு விருப்பம் அதிகமாக இருக்க இத்தனை காரணங்கள் இருக்கின்றன. இதற்காகவாவது பெண்கள் வீட்டில் விஷேச சமயங்களில் நீண்ட கூந்தலுடன் தரிசனம் தரலாம்.

Related posts

பேன்களை போக்கும் வீட்டு சிகிச்சை

nathan

முடியின் வறண்ட தன்மை, பொடுகுத் தொல்லை மற்றும் முடி உதிர்தல் இவற்றைக் கட்டுப்படுத்தத் தேவையான கூந்தல் சிகிச்சைதான் ‘ஹேர் ஸ்பா’

nathan

பொடுகை அகற்ற

nathan

கூந்தல் பிரச்சனைகளைப் போக்கும் கரிசலாங்கண்ணி எண்ணெய்!

nathan

தலைமுடி பிரச்சனைகளைப் போக்க வேப்பிலையைப் பயன்படுத்துவது எப்படி?hair tips in tamil

nathan

கோடையில் தலைமுடியின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பது எப்படி?hair tips in tamil

nathan

உங்களுக்கு தெரியுமா பொடுகு தொல்லைக்கு சமையலறையில் ஒளிந்திருக்கும் 11 தீர்வுகள்.:

nathan

ஆயில் மசாஜ் செய்தால்தான் முடி வளருமா?

nathan

முடி நன்கு வளர

nathan