23.6 C
Chennai
Friday, Dec 12, 2025
face2 1
முகப் பராமரிப்பு

சூப்பர் டிப்ஸ்! உங்கள் முகம் பளபளக்க வேண்டுமா? இதோ பத்து பயனுள்ள அழகு குறிப்புகள்

முகம் பளபளக்க எத்தனையோ வழிகள் இருந்தாலும் இயற்கை அழகே சிறந்தது என கருதப்படுகின்றது.

அந்தவகையில் எந்தவித பக்க விளைவுகளும் இல்லாமல் நமது சருமத்தை பளிச்சென்று மாற்றுவதற்கு, இயற்கையில் உள்ளது சூப்பரான டிப்ஸ் இதோ!

  • ஆரஞ்சு பல தோலை காய வைத்து ஒரு கப் எடுத்துக்கொள்ளவும், அதனுடன் சம அளவு காய்ந்த ரோஜா இதழ்களை சேர்த்து மிக்சியில் போட்டு நன்றாக பொடியாக்கி அதோடு கடலைமாவு -2கப் சேர்த்து கலந்து தினமும் இந்த கலவையிலிருந்து 2 ஸ்பூன் எடுத்து, அதோடு சிறிதளவு பால் ஆடை சேர்த்து நன்கு குழைத்து பேஸ்ட் போல் செய்து முகத்தில் தடவி, காய்ந்ததும் பச்சை தண்ணீரில் சோப்பு போடாமல் கழுவி விடவும். இவ்வாறு செய்வதால் முகப் பளபளப்பு அடையும்.
  • பாலை காய்ச்சும் போது அதிலிருந்து வரும் ஆவியில் முகத்தை காட்டி , அந்த வியர்வை துடைக்காமல் காயவிட்டு , அரை மணி நேரம் கழித்து முகம் கழுவினால் முகம் பளபளப்பாகும்.
  • தக்காளியை மிக்சியில் போட்டு அதனை ஜூஸாக்கி அதை முகத்தில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கடலைமாவு போட்டு கழுவினால் முக பளபளப்பு அடையும்.
  • சிறிதளவு வெண்ணை எடுத்து நன்கு குழைத்து முகத்தில், முழங்கை, கழுத்து போன்றவற்றில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கடலை மாவு போட்டு கழுவினால் மேனி மிருதுவாகும். கண்ணுக்கு கீழ் உள்ள கருவளையம் மறையும்.
  • நன்கு கனிந்து தூக்கி எறியும் நிலையில் உள்ள வாழை பழத்தை கூழாக்கி அதை முகத்தில் தேய்த்து ,அரை மணி நேரம் கழித்து முகம் கழுவினால் முக பளபளப்பு கூடும்.
  • பெண்கள் கஸ்தூரிமஞ்சள், பூலாங்கிழங்கு, ஆகிய இரண்டையும் அரைத்து முகத்தில் பூச முகம் பளபளப்பாக இருக்கும்.
  • தோல் மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருக்க வேண்டும் என்றால், கொத்தமல்லி இலையில் சாறு எடுத்து அதில் சிறிதளவு கஸ்தூரி மஞ்சள்தூளைக் கலந்து தோல் மீது தடவி வந்தால் தோல் மிருதுவாகவும் பளபளப்பாகவும் மாற ஆரம்பிக்கும்.
  • பாதாம் பருப்பை அரைத்து தேன், எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவிவர முகம் பளப்பளப்பாகும்.
  • உருளைக்கிழங்கு சாறுடன் கடலைமாவையும் சேர்த்து முகத்தில் தேய்த்து வந்தாலும் முகம் பொலிவு பெறும்.
  • கஸ்தூரி மஞ்சள் தூளை பன்னீரில் கலந்து வெயிலில் வைத்து சூடாக்கி, அதை முகத்தில் தேய்த்து வந்தால் முகப்பருக்கள் மற்றும் அவை வந்த அடையாளங்கள் மாயமாகிவிடும்

Related posts

முயன்று பாருங்கள் எளிய முறையில் மூக்கின் அழகை பராமரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.

nathan

சூப்பர் டிப்ஸ்..முகத்தில் ஏற்படும் சில பிரச்சனைகளுக்கான கை வைத்தியங்கள்..

nathan

அழகுபராமரிப்பிற்கும் உதவும் துளசி!…

sangika

வீட்டிலேயே செய்யப்படும் ஃபேஷியல் டிப்ஸ்

nathan

உங்க முகத்தில் உள்ள மேடு பள்ளங்களை எளிதில் மறைக்க வேண்டுமா? அப்ப இத படிங்க!

nathan

அழகான முகத்திற்கு ஆலோசனைகள்

nathan

புருவங்கள் அழகாக தெரிய இந்த குறிப்புகளை பின்பற்றுங்கள்!

nathan

கழுத்து கருப்பா இருக்கா? பளிச்சென மாற்ற சூப்பர் பேக்குகள்,

nathan

மூக்கை சுற்றியுள்ள கரும்புள்ளிகளை நீக்குவது எப்படி?

nathan