குளிர்காலத்தில் பெண்களுக்கு சரும வறட்சி பிரச்சனையானது ஏற்படுகிறது.
சருமம் மற்றும் கூந்தலில் நீர்சத்து குறையாமல் “இன்டெக்ரல் லிப்பிட் லேயர்” என்ற படிமம் பாதுகாத்து வருகிறது.
குளிர்கால நேரங்களில் இந்த படிமம் சரும பிரச்சனைகள் பெண்களை வாட்டி வதைக்கிறது. இதனை தடுப்பதற்கு குளிக்கும் நீரில் 3 துளிகள் எலுமிச்சை சாறு விட்டு குளித்து வரலாம். குளித்து முடித்தவுடன் வெண்ணெய் மற்றும் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் தேய்த்து கொள்வதால்., உடலின் ஈரப்பதம் கட்டுக்குள் வைக்கப்படும்.
இளம்சூடுள்ள பாலை முகத்தில் பூசி சுமார் 20 நிமிடங்கள் கழித்த பின்னர் முகத்தை கழுவி வர வேண்டும். எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலவை., துளசி., வேப்ப இலை மற்றும் மஞ்சள் தூள் கலந்த கலவைகளை பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் மீது தேய்க்கலாம்.
நமது உடலிற்கு தேவையான 8 அமினோ அமிலங்கள் முட்டை இருக்கும் காரணத்தால்., தினமும் ஒரு முட்டையை சாப்பிடலாம். முட்டையை வேக வைத்து சாப்பிடுவது நல்லது. மேலும்., கைக்குத்தல் அரிசிகளை இந்த நேரத்தில் சாப்பிடுவது நல்லது.
இதனைப்போன்று வைட்டமின் H அதிகளவு உள்ள வேர்க்கடலை., கோதுமை., மீன்., முட்டை., கேரட்., பாதாம்., அவகோடா மற்றும் வால்நட்., காலிப்ளவர் போன்றவற்றை சாப்பிடலாம். வேப்பஇலை சேர்த்த நீரினை கொண்டு கூந்தலை அலசலாம். சீயக்காய் மற்றும் பச்சை பயிறு மாவை சேர்த்து., சாதம் வடித்த கஞ்சியுடன் கூந்தலில் பேக் போட்டு 20 நிமிடங்கள் கழித்து சுத்தம் செய்யலாம்.