24.5 C
Chennai
Thursday, Dec 26, 2024
yhfhgdhg
அசைவ வகைகள்அறுசுவை

ருசியான நாட்டு கோழி குருமா

ருசியான, பாரம்பரியமிக்க முறையில் நாட்டு கோழி குருமா செய்வது பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்: நாட்டுக்கோழி – ஒரு கிலோ, சின்ன வெங்காயம் – 10, தக்காளி – 2, இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன், கரம் மசாலா பவுடர் – ஒரு ஸ்பூன், மஞ்சள் தூள் – கால் ஸ்பூன், மிளகாய்த்தூள் – 3 டீஸ்பூன், தனியா தூள் – ஒரு ஸ்பூன், தேங்காய் – அரை மூடி, கசகசா – ஒரு ஸ்பூன், முந்திரி – தேவையான அளவு, நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: நாட்டுக்கோழியை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். தேங்காய், கசகசா, முந்திரியை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும். சின்ன வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். குக்கரில் நல்லெண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
yhfhgdhg
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் தக்காளியை சேர்த்து குழைய வதக்கவும். தக்காளி குழைய வதங்கியதும் மசாலா பொருட்களை சேர்த்து வதக்கவும்.

மசாலாவின் பச்சை வாசனை போனவுடன் அதில் சுத்தம் செய்து வைத்துள்ள நாட்டுக்கோழியை சேர்த்து நன்றாக வதக்கவும். அடுத்து அதில் அரைத்த தேங்காய் விழுதை சேர்க்கவும். உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி 6 விசில் வேக விட்டு எடுக்கவும். அதில் கொஞ்சம் கொத்தமல்லி தூவி இறக்கவும். சுவையான நாட்டு கோழி குருமா தயார்.

Related posts

சுவையான மட்டன் கடாய்

nathan

சிக்கன் முட்டை பொரியல்

nathan

சூப்பரான காடை முட்டை குழம்பு

nathan

மட்டன் சுக்கா வறுவல்

nathan

சுவையான நீலகிரி சிக்கன் குருமா

nathan

காரசாரமான ஆட்டு மூளை மசாலா

nathan

சுவையான வாழைத்தண்டு பச்சடி எப்படிச் செய்வது?…

sangika

கிராமத்து மொச்சை கருவாட்டு குழம்பு

nathan

ருசியான சோளன் சேர்த்து செய்த கொழுக்கட்டை….

sangika