23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
y5trtryr
அழகு குறிப்புகள்

முல்தானி மெட்டியை எப்படி பயன்படுத்துவது முகம் வெள்ளையாவதற்கு?

ஒவ்வொருவருமே அழகிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்போம்.

சிலர் தங்கள் அழகைப் பராமரிப்பதற்கு அழகு நிலையங்களுக்குச் சென்று, அதிக பணம் செலவழித்து பராமரிப்பு கொடுத்து வருவார்கள். அனைவராலும் இப்படி அதிக பணம் செலவழித்து அழகைப் பராமரிக்க முடியாது. எனவே பலர் தங்கள் அழகை வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே பராமரிக்க முயலுவார்கள்.

அழகை அதிகரிக்க உதவும் ஓர் அற்புதமான அழகுப் பொருள் தான் முல்தானி மெட்டி. இதைக் கொண்டு ஒருவர் தங்கள் சருமத்திற்கு பராமரிப்பு கொடுத்து வந்தால், சருமத்தின் நிறம் அதிகரிப்பதோடு, பல்வேறு சரும பிரச்சனைகள் வராலும் தடுக்கலாம். ஏனெனில் முல்தானி மெட்டியில் சரும பிரச்சனைகளைப் போக்கும் பண்புகள் ஏராளமாக நிறைந்துள்ளது.
y5trtryr
பெரும்பாலான அழகு நிலையங்களில் கூட சரும நிறத்தை அதிகரிப்பதற்கு முல்தானி மெட்டி ஃபேஸ் பேக் தான் பரிந்துரைக்கப்படுகிறது. இத்தகைய முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்கை அழகு நிலையங்களுக்குச் சென்று போடுவதற்கு பதிலாக, அந்த பொடியை வீட்டில் உள்ள சில பொருட்களுடன் சேர்த்து மாஸ்க் போட்டு வந்தால், சரும நிறம் அதிகரிப்பதோடு, சரும பிரச்சனைகள் வராமலும் தடுக்கலாம்.

முல்தானி மெட்டி மற்றும் ரோஸ் வாட்டர்

* ஒரு சிறிய பௌலில் முல்தானி மெட்டி பொடியைப் போட்டு, ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள்.

* பின் அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் நீரில் கழுவுங்கள்.

* இப்படி வாரத்திற்கு 3 முறை செய்து வந்தால், முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்கி, முகம் பொலிவோடும் பிரகாசமாகவும் இருக்கும்.
jytyry
முல்தானி மெட்டி, பாதாம், பால்

* ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் பாதாம் பேஸ்ட்டுடன், 1 டேபிள் ஸ்பூன் பால் மற்றும் சிறிது முல்தானி மெட்டி பொடி சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

* பின் முகத்தை நீரால் கழுவி, தயாரித்து வைத்துள்ள கலவையை முகத்தில் தடவி காய்ந்த பின், நீரால் கழுவுங்கள்.

* இப்படி வாரத்திற்கு 2 முறை செய்தால், சருமம் மென்மையாக இருக்கும்.

முல்தானி மெட்டி மற்றும் தக்காளி

* ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் தக்காளி ஜூஸ், 2 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி, 1 டீஸ்பூன் சந்தன பவுடர் மற்றும் 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

* பின் அதை முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவுங்கள்.

* இந்த மாஸ்க்கை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கி, முகம் பளிச்சென்று காணப்படும்.
truruy
முல்தானி மெட்டி மற்றும் தேன்

* ஒரு பௌலில் 3 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி பொடியுடன், 1 டீஸ்பூன் தக்காளி ஜூஸ், 1 டீஸ்பூன் தேன், 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1/2 டீஸ்பூன் பால் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

* பின் அந்த கலவையை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

* இப்படி வாரத்திற்கு ஒருமுறை இந்த ஃபேஸ் பேக்கை போட்டால், முகம் பிரகாசமாகவும் புத்துணர்ச்சியுடனும் காட்சியளிக்கும்.

முல்தானி மெட்டி மற்றும் புதினா

* ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி பொடி, 1 டேபிள் ஸ்பூன் புதினா பொடி மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

* பின் இந்த கலவையை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

* பின்பு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி அடிக்கடி இந்த ஃபேஸ் பேக்கை போட்டு வந்தால், முகத்தில் உள்ள கருமையான படலத்தைப் போக்கலாம்.

முல்தானி மெட்டி மற்றும் சந்தன பவுடர்

* ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி பொடியுடன், 1 டேபிள் ஸ்பூன் சந்தன பவுடர் மற்றும் பால் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

* பின்பு இந்த கலவையை முகம் முழுவதும் தடவி 20 நிமிடம் நன்கு ஊற வைத்து, பின் நீரால் கழுவ வேண்டும்.

* இந்த மாஸ்க்கை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தி வந்தால், முகத்தில் வழியும் அதிகப்படியான எண்ணெய் வெளியேறி, முகம் பளிச்சென்று வெள்ளையாக காணப்படும்.

முல்தானி மெட்டி மற்றும் பப்பாளி

* 1 டேபிள் முல்தானி மெட்டி பொடி, 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் பப்பாளி கூழ் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

* பின் அதனை முகத்தில் சரிசமமாக தடவி, நன்கு காய வைத்து, பின் நீரால் கழுவ வேண்டும்.

* இந்த மாஸ்க்கை வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தினால், விரைவில் வெள்ளையாகலாம்.

முல்தானி மெட்டி மற்றும் முட்டை வெள்ளைக்கரு

* ஒரு பௌலில் 1/4 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி பொடியுடன், 1 டேபிள் ஸ்பூன் தயிர் மற்றும் 1 முட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

* பின் அந்த கலவையை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.

* இந்த மாஸ்க்கை வாரத்திற்கு ஒரு முறை போட்டு வந்தால், வெயிலால் கருமையான சருமத்தை வெள்ளையாக்கலாம்.

முல்தானி மெட்டி மற்றும் கேரட்

* ஒரு டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி பொடியுடன், 1 டேபிள் ஸ்பூன் கேரட் கூழ் மற்றும் 1 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

* பின் அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி, நன்கு ஊற வைக்க வேண்டும்.

* பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இந்த மாஸ்க்கை வாரத்திற்கு குறைந்தது 2 முறையாவது பின்பற்றினால் தான், நல்ல பலனைப் பெற முடியும்.

முல்தானி மெட்டி மற்றும் இளநீர்

* ஒரு பௌலில் முல்தானி மெட்டி பொடியுடன், 1 டேபிள் ஸ்பூன் இளநீர் மற்றும் 1 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

* பின்பு அந்த கலவையை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி நன்கு ஊற வைக்க வேண்டும்.

* பின் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

* இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

முல்தானி மெட்டி மற்றும் எலுமிச்சை சாறு

* ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி பொடியுடன், 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

* பின் அதை முகத்தில் தடவி, 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.

* இந்த மாஸ்க்கை தொடர்ச்சியாக பயன்படுத்தும் போது, சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்கி, முகப்பரு வருவது தடுக்கப்படும்.

அனைவருக்கும் பகிருங்கள்! இது போல பயனுள்ள அழகு, மருத்துவ குறிப்புகள் பெற எங்கள் பக்கத்தை லைக் செய்யவும்.

Related posts

இந்த அற்புத பொடி பயன்படுத்தி பாருங்க.. முகம் ஜொலிக்க இழந்த பொலிவை திரும்ப பெறலாம்….

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…சரும நிறம் சீராக இருக்க இதை செய்யலாம்…

nathan

சரும பிரச்சனைகளை போக்க சில வழிமுறைகள்……

nathan

16 வயதில் தனியாக நிற்கும் நடிகையின் மகள்!

nathan

வெயில் காலத்தில் முகத்தில் வரும் கரும்புள்ளிகள் மறைய டிப்ஸ்

nathan

பிச்சை எடுப்பேன்னு அம்மா நினைச்சாங்க!

nathan

பிரமாதமான‌ கண்களை பெற‌ 5 சூப்பர் அழகுக் குறிப்புகள் … அதுவும் ஒப்பனை எதுவும் இல்லாமல்!

nathan

Beauty tips .. அழகுக்கு அழகு சேர்க்க!!!! இந்த ஒரு மாத்திரை போதும்….

nathan

இதை நீங்களே பாருங்க.! தலைமுடி எல்லாம் கலரிங் செய்து ஆளே மாறிய நடிகை மீனாவின் மகள்

nathan