கண்டிப்பாக தலைக்கு எண்ணை தேய்த்துக் குளிக்க வேண்டும்
என்பதே இப் பாடலுக்குக் கூறப்படும் பெருவாரியான கருத்து ஆகும். இதன் பயன்களை பார்ப்போம்
அடர்த்தியான முடி வளரும்.
உடல் சூட்டை தணிக்கும்.
உடல் ரிலாக்ஸ்.
பொலிவான சருமம்.
பொடுகு.
நிம்மதியான தூக்கம்.
கண்களுக்கு நல்லது.
முடி உதிர்தல்.
பாரம்பரியமாக மேற்கொள்ளும் ஒரு செயல் தான் வாரம் ஒருமுறை எண்ணெய் குளியல் எடுப்பது. இது ஒருவகையான ஆயுர்வேத முறை. அதிலும் நல்லெண்ணெய் பயன்படுத்தி தான் எண்ணெய் குளியல் எடுக்க வேண்டுமென்ற ஐதீகம் உள்ளது.
அதில் குறிப்பாக பெண்கள் வெள்ளிக்கிழமையிலும், ஆண்கள் சனி மற்றும் புதன்க்கிழமையிலும் நல்லெண்ணெய் குளியல் மேற்கொள்ள வேண்டும் என்று சொல்வார்கள்.
மேலும் நல்லெண்ணெய் குளியல் மேற்கொள்ளும் போது, அந்த நல்லெண்ணெயில் பூண்டு, மிளகு, சீரகம் மற்றும் சுக்கு ஆகியவற்றை சேர்த்து, வெதுவெதுப்பாக சூடேற்றி, பின் அந்த நல்லெண்ணெயை ஸ்கால்ப்பில் படும்படி நன்கு தேய்த்து குளிப்போம். இந்த முறையெல்லாம் அக்காலத்தில் நம் முன்னோர்கள், பெற்றோர்கள் எல்லாம் தவறாமல் பின்பற்றி வந்திருந்தார்கள். ஆனால் இப்போது அந்த பழக்கமெல்லாம் மறைந்துவிட்டது. இதனால் தான் என்னவோ இன்றைய சந்ததியினருக்கு நோய்கள் அதிகம் வருகிறது. எனவே நீங்கள் நோயின்றி ஆரோக்கியமாக வாழ வாரம் ஒருமுறையாவது நல்லெண்ணெய் குளியல் எடுத்து வாருங்கள். இப்படி எடுப்பதால், நோய்களின் தாக்கம் குறைவதோடு, கூந்தலும் ஆரோக்கியமாக இருக்கும். இங்கு வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் குளியல் எடுப்பதால் கிடைக்கும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
அடர்த்தியான முடி வளரும் -நல்லெண்ணெய் குளியலின் மூலம் மயிர்கால்களுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, முடியின் வளர்ச்சி அதிகரிப்பதோடு, முடி அடர்த்தியாகவும் இருக்கும்.
உடல் சூட்டை தணிக்கும் -நல்லெண்ணெய் கொண்டு வாரம் ஒருமுறை தலைக்கு மசாஜ் செய்து குளித்தால், உடலில் உள்ள அதிகப்படியான வெப்பம் வெளியேறும்.
உடல் ரிலாக்ஸ் -வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் குளியல் எடுத்து வந்தால், உடலில் உள்ள நரம்புகள் ரிலாக்ஸ் ஆகி, உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும்
பொலிவான சருமம் -எண்ணெய் குளியல் என்று சொல்லும் போது, தலைக்கு மட்டுமின்றி, உடலுக்கும் நல்லெண்ணெய் தேய்த்து மசாஜ் செய்து குளித்து வந்தால், சருமம் பொலிவோடு, மென்மையாக இருக்கும்.
பொடுகு -பொடுகுத் தொல்லை இருந்தால், வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் குளியலை மேற்கொண்டால், பொடுகுத் தொல்லை நீங்கும்.
நிம்மதியான தூக்கம் -தூக்கமின்மையால் அவஸ்தைப்படுபவர்கள், வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் தேய்த்து குளித்து வந்தால், தூக்கமின்மை பிரச்சனையில் இருந்து விடுபட்டு, நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம்.
கண்களுக்கு நல்லது -கம்ப்யூட்டர் முன்பு நீண்ட நேரம் உட்கார்ந்து கொண்டே வேலை செய்வதால், கண்கள் சிவப்பாகி, அதன் ஆரோக்கியம் பாழாகும். எனவே வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் குளியல் மேற்கொள்வதன் மூலம், பார்வை மற்றும் கண்களின் ஆரோக்கியம் மேம்படும்.
முடி உதிர்தல் – அதிகம் இருந்தால், நல்லெண்ணெய் குளியலை வாரம் ஒருமுறை மேற்கொண்டு வாருங்கள். இதனால் முடி நன்கு ஊட்டம் பெற்று வலிமை பெறும்.
பாரம்பரிய ஆரோக்கியமான தகவல்கள் ⚜
வைத்தியனுக்கு கொடுப்பதை வாணியனுக்கு கொடு என சும்மாவா கூறினார்கள் பெரியோர்கள்.