25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
ttyutyu
தலைமுடி சிகிச்சை

சூப்பர் டிப்ஸ்…இவற்றை பேக் போட்டால் பொடுகுத் தொல்லை நீங்கி கூந்தல் நன்றாக வளரும்.

தேங்காய்ப்பால் அரை கப், எலுமிச்சைச் சாறு 4 தேக்கரண்டி மற்றும் ஊற வைத்து அரைத்த

வெந்தயம் இம் மூன்றையும் கலந்து தேய்த்து தலைக்கு குளித்தால் பொடுகுத் தொல்லை நீங்கும். மேலும் கூந்தலின் நுனி வெடிக்காமல் இருக்கும்.

கரிசளாங்கன்னி கீரை, முட்டையின் வெள்ளைக் கரு, எலுமிச்சைச் சாறு, தயிர், துளசி, வேப்பிலை, தேயிலை நீர் இவற்றை பேக் போட்டால் பொடுகுத் தொல்லை நீங்கி கூந்தல் நன்றாக வளரும்.

ஒரு கப் ஆப்பிள் சாறுடன் அரை கப் தண்ணீர் கலந்து தலைமுழுவதும் தேய்த்து 20 நிமிடம் ஊற வைத்து குளிக்க பொடுகுத் தொல்லை நீங்கும்.

 

சிறிது மிளகு, எண்ணெய், தயிர், செம்பருத்தி பூ இவற்றைக் கொண்டு மசாஜ் செய்தாலும் பொடுகுத் தொல்லை நீங்கும். வசம்பை தட்டி சிறிது நல்லெண்ணெய்யில் நன்றாக கருக வறுத்து அதைத் தேங்காய் எண்ணெய்யில் கலந்து பூசி வர பொடுகுத் தொல்லை நீங்கும்.

 

முல்தானி மட்டி, மருதாணி, முட்டையின் வெள்ளைக் கரு மூன்றையும் கலந்து தேய்த்து அரை மணி நேரம் ஊற வைத்து குளித்தால் பொடுகு நீங்கும்.

ttyutyu

தலையில் தயிர் தடவி அரை மணி நேரம் ஊற வைத்துவிட்டு பிறகு குளிக்க, பொடுகு நீங்கும்.

பொடுகுத் தொல்லையை கவனிக்க நேரம் இல்லையே என வருந்துபவர்கள் குளிக்க வைக்கும் வெந்நீரில் வேப்பிலையைப் போட்டு கொதிக்க வைத்து குளித்தால் பொடுகுத் தொல்லை நீங்குவதோடு கிருமி நாசினியாகவும் பயன்படுகிறது.

 

வசம்பு சாறு, பொடுதலைச் சாறு இரண்டையும் கலந்து இரவில் பூசி காலையில் தலைக்கு குளிக்க வேண்டும். பொடுதலையை பொடுகுள்ள தலைக்கு உபயோகித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

 

நாட்டு வெங்காயத்தை உரித்து அரைத்து தலையில் தடவி அரைமணி நேரம் ஊற வைத்து குளித்தால் பொடுகு நீங்கும்.

 

வெள்ளை மிளகு 4 தேக்கரண்டி. வெந்தயம் 2 தேக்கரண்டி இரண்டையும் காய்ச்சாதப் பசும்பாலில் அரைத்து தலைக்கு பேக் போட்டு அரைமணி நேரம் ஊற வைத்து மிதமான வெந்நீரில் குளித்து வந்தால் பொடுகுத் தொல்லை நீங்கும்.

 

தேங்காய் எண்ணெய்யில் வெந்தயத்தைப் போட்டு காய்ச்சி தினமும் தலைக்கு தடவி வர பொடுகு மறையும்.

பசலைக்கீரையை அரைத்து தலைக்கு தேய்த்து குளித்து வர பொடுகு நீங்குவதோடு நல்ல கண்டிஷனராகவும் பயன்படும்.
“அழகு குறிப்புகள்’ என்ற நூலிலிருந்து

Related posts

கூந்தல் எப்போது பாதிப்படைகிறது?

nathan

வேம்பாளம் பட்டை -கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும்

nathan

தலையில அடர்த்தியா முடி வளரணுமா?

nathan

உங்களுக்கு வெள்ளை முடி இருக்கா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

சூப்பர் டிப்ஸ் முகத்தை பொலிவாக்க பேஷியல் செய்ய குளிர்காலம் மிகவும் ஏற்றது

nathan

முடி உதிர்தல், பளபளப்புத் தன்மை இழத்தல் போன்ற பிரச்சனைகளைத் தவிர்ப்பது எப்படி?

nathan

மயக்கும் கூந்தலுக்கு… சில எளிய வழிகள்!

nathan

கூந்தல் நீளமாக இல்லைன்னு வருத்தமா? உங்களுக்கு உதவும் 5 ஆயுர்வேத குறிப்புகள்!!

nathan

வறண்ட கூந்தல் பட்டுப்போல பளபளக்க பத்து டிப்ஸ் -பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan