குளிர்காலம்தான் ஏற்றது… பேஷியல் என்பது உங்கள் முகத்தை பொலிவாகவும் களைப்புடனும் வைத்துக் கொள்ள பயன்படுகிறது.
அதிலும் இந்த குளிர்காலம் பேஷியல் செய்வதற்கு ஏற்றது என்கிறார்கள் அழகியல் நிபுணர்கள். இது உங்களுக்கு ஒரு அழகு விருந்து என்றே அவர்கள் கூறுகிறார்கள்.
இப்படி குளிர் காலத்தில் நீங்கள் பேஷியல் பண்ணும் போது முகத்தில் ஏற்படும் முன்னேற்றத்தை அழகாக காண முடியும். குளிர்காலத்தில் முடிந்த வரை ஆல்கஹால் சேர்க்கப்படாத க்ரீம்களைப் பயன்படுத்துங்கள். இது சரும pH அளவை பராமரிக்க உதவுகிறது. மேலும் சருமத்தை புத்துணர்ச்சி செய்ய பழங்களைக் கொண்டு பேஷியல் செய்து வரலாம். வாழை, தர்பூசணி, கிவி போன்றவை உங்கள் சருமத்திற்கு ஈரப்பத மூட்டி ஜொலிப்பாக்க உதவும்.
குளிர்காலத்தில் குளிர்ந்த காற்று முகத்தில் படும் போது, சருமம் வறண்டு போய் ஈரப்பதமின்றி இருக்கும். இதனால் சருமத்தில் வெடிப்பு, வறட்சி நிலவக் கூடும். எனவே இந்த மாதிரியான சமயங்களில் கூடுதல் பராமரிப்பு தேவைப்படுகிறது.
நாம் என்ன தான் ஏகப்பட்ட க்ரீம்களை தடவினாலும் குளிர்காலத்தில் இருந்து உங்கள் முகத்தை பாதுகாப்பது கடினம். எனவே முக அழகை பராமரிக்க, சருமத்திற்கு சில ஊட்டச்சத்துக்களை வழங்க வேண்டியிருக்கிறது. வைட்டமின்கள், ஆன்டி ஆக்ஸிடன்கள் அடங்கிய அழகு சாதனப் பொருட்கள் தேவைப்படுகிறது.
இது உங்கள் சருமம் வயதாவதை தடுத்தல், சரும அழற்சியை போக்குதல், சூரிய ஒளியால் சருமத்தில் ஏற்படும் பாதிப்பு, சரும பிரச்சனைகள் எல்லாவற்றையும் போக்குகிறது. குளிர்காலத்தில் 4-6 வாரங்களுக்கு ஒரு முறை பேஷியல் செய்து வாருங்கள். ஒரு தடவை செய்த உடனே வித்தியாசத்தை காண இயலாது. படிப்படியாக செய்து வரும் போது நல்ல மாற்றத்தை காண முடியும்.
பேஷியல் செய்யும் போது உங்கள் சரும வகை, சரும நிறம், தன்மையை மனதில் கொண்டு பொருத்தமான முறையை தேர்ந்தெடுங்கள். சருமம் அழகு பெறும்.