27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
ytjytiuyk
அழகு குறிப்புகள்

சூப்பர் டிப்ஸ்..முகத்தில் சுருக்கம் வருவதை தடுக்கும் பேஸ் வா‌‌ஷ்

முகத்தில் உள்ள சருமத்தின் தன்மையும், மற்ற பாகங்களின் சருமத்தின் தன்மையும் வேறு வேறாக இருக்கும்.

முகத்தின் சருமம், உடலின் மற்ற பகுதிகளில் உள்ள சருமத்தைவிட மென்மையானது. உடம்புக்கு உபயோகிக்கிற அதே சோப்பையே முகத்துக்கும் பயன்படுத்துவதால் முகத்தின் சருமம் வறண்டு போகும். அதனால் தான் முகத்துக்கு ‘பேஸ் வா‌‌ஷ்’ உபயோகிக்க வேண்டும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

இதில் அவரவர் முகத்தின் தன்மைக்கு ஏற்ப பேஸ் வா‌‌ஷ் சந்தைகளில் கிடைக்கிறது. எண்ணெய் பசையான சருமம் உள்ளவர்களுக்கு ‘ஆயில் ப்ரீ பேஸ் வா‌‌ஷ்’ நல்லது. பருக்கள் இருப்பவர்களுக்கு ‘சாலிசிலிக் ஆசிட்’ உள்ள பேஸ் வா‌‌ஷ் நல்ல நிவாரணம் அளிக்கும். வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு பால், க்ரீம் கலந்த பேஸ் வா‌‌ஷ், காம்பினே‌‌ஷன் சருமம் உள்ளவர்களுக்கு டி ஸோன் பகுதியை கவனத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்ட பிரத்யேக பேஸ் வா‌‌ஷ்.

ytjytiuyk
சென்சிட்டிவ் சருமம் உள்ளவர்களுக்கு பாரபின் மற்றும் வாசனை சேர்க்காத பேஸ் வா‌‌ஷ். முதுமையைத் தள்ளிப்போடவும், சுருக்கங்களை தவிர்க்கவும் ஆன்ட்டி ஏஜிங் பேஸ் வா‌‌ஷ், சரும நிறத்தை மேம்படுத்த ஸ்கின் லைட்டனிங் பேஸ் வா‌‌ஷ் என்று ஏராளமான பேஸ் வா‌‌ஷ் வந்துவிட்டன. பேஸ் வா‌‌ஷ் உபயோகிப்பதற்கும் முறைகள் உண்டு. முதலில் முகத்தை ஈரப்படுத்திவிட்டு, பேஸ் வா‌ஷில் சிறு துளியை எடுத்து முகத்தில் தடவி, மேல்நோக்கி மென்மையாக மசாஜ் செய்து, கழுவ வேண்டும்.

பேஸ் வா‌‌ஷ் உபயோகிக்கும் போது சருமத்தில் லேசான பிசுபிசுப்புத்தன்மை இருக்கும். அது பற்றி கவலை வேண்டாம். வெளியில் சென்று விட்டு வந்த உடனேயும், இரவில் படுக்க செல்வதற்கு முன்பும் பேஸ் வா‌‌ஷ் உபயோகித்து முகத்தைச் சுத்தப்படுத்த வேண்டியது மிக அவசியம். இதனால் சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். ஒவ்வாமை இருப்பவர்கள் வாசனையோ, அதிக நுரையோ, சோடியம் லாரைல் சல்பேட் போன்ற ரசாயனம் கலந்த பேஸ் வா‌‌ஷ்களை தவிர்க்கவும்.

Related posts

புருவ அடர்த்திக்குகாரணம் என்ன?

nathan

அம்மாடியோவ் என்ன இது ? நடிகர் நடிகைகளுடன் ஃபுல் போதையில் தலைக்கேறிய திரிஷா!

nathan

வயிறு சம்பந்தமான நோய்கள் குணமாக சூப்பர் டிப்ஸ்.

nathan

கழுத்துப் பகுதியில் உள்ள‍ கருமைநிறத்தை போக்க‍ சூப்பர் டிப்ஸ்!..

sangika

குழந்தைகளின் மூளை நரம்புகள் வலிமை பெற்று நினைவாற்றல் அதிகரிக்க இதை செய்யுங்கள்….

sangika

பெண்களே தெரிஞ்சிக்கங்க… குழந்தைகள் குண்டாகாம பாத்துக்க சில ஆலோசனைகள்

nathan

சூப்பரான இரும்புச்சத்து நிறைந்த டிரை ஃப்ரூட் மில்க் ஷேக் செய்வது எப்படி?

nathan

முகத்தை பொலிவு பெற செய்யவும், இளமையாக வைத்து கொள்ளவும் இந்த பழம் பெரிதும் உதவும்…….

sangika

ஆண், பெண் இருபாலரையும் பாதிக்கும் முகப்பரு…..

sangika