30.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
arWE
அழகு குறிப்புகள்

முயன்று பாருங்கள்..சருமத்தை எப்படியெல்லாம் பாதுகாக்கலாம் ஐஸ்கட்டியை கொண்டு..?

* நாள் பூராவும் வெளியில் வெயிலில் அலைந்து திரிந்து கொண்டிருப்பவர்கள் உடனடியாக முகத்தை பொலிவாக காட்ட வேண்டுமென்றால் ஐஸ் க்யூப் பயன்படுத்தலாம்.

* ஐஸ் க்யூப்பை கையில் எடுத்து முகத்தில் வட்டவடிவமாக தேய்த்திடுங்கள்.பெரிய வட்டத்திலிருந்து ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக சிறிதாக வர வேண்டும். இவை சருமத்துளைகளில் உள்ள அழுக்களை நீங்கச் செய்யும்.
* வெயில் காலங்களில் மேக்கப் போட்டால் சிறிது நேரத்துலேயே வியர்த்து மேக்கப் கலைந்திடும். இவற்றை தவிர்க்க மேக்கப் போடுவதற்கு முன்னதாக ஐஸ் க்யூபைக் கொண்டு முகத்தை சுத்தம் செய்திடுங்கள். இப்படிச் செய்வதால் மேக்கப் நீண்ட நேரம் இருக்கும்.
* முகத்திற்கு ஐஸ் பேக் போடுவதால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால் சருமம் பொலிவாக காணப்படும்.ஐஸ் பேக் போட முடியாதவர்கள் குளிர்ந்த நீரில் முகம் கழுவலாம்.
* இளம்பெண்களின் முக்கிய அழகுத் தேடல்களில் ஒன்று முகத்தில் தோன்றும் பருவை எப்படி விரட்டுவது என்பது தான். இவர்களுக்கு ஐஸ் க்யூப் மிகச்சிறந்த நிவாரணி.
arWE
நன்மைகள்:
* ஐஸ் க்யூபை முகத்தில் தேய்ப்பதால், சருமத்துளைகள் விரிவடைந்து அழுக்குகள் வெளியேறும். இதனால் முகத்தில் கரும்புள்ளிகள் தோன்றாது.பருக்களையும் குறைத்திடும்.

* அதிக எண்ணெய்ப் பசையுள்ள சருமம் உள்ளவர்கள் ஐஸ் க்யூபை கொண்டு முகத்திற்கு மசாஜ் செய்து வர எண்ணெய் சுரப்பது கட்டுப்படுத்தப்படும்.இதனால் சருமத்தில் வேறு எந்த பாதிப்புகளும் ஏற்படாமல் நாம் பாதுக்காக்க முடியும்.

* சூரிய ஒளியினால் சருமம் கருப்பாகும். சில நேரங்களில் அரிப்பு, எரிச்சல் போன்றவற்றையும் ஏற்படுத்திடும். உடனடி தீர்வு வேண்டுமென்றால் மெல்லிய காட்டன் துணியில் மூன்று ஐஸ் க்யூபினை சேர்த்து கட்டி அவற்றைக் கொண்டு எரிச்சல் உள்ள இடங்களில் தேய்த்திடுங்கள்.

* கழுத்துப்புகுதியில்,கண்களின் ஓரத்தில், நெற்றியில் என முகத்தில் பல இடங்களில் சுருக்கங்கள் தோன்றும். இவை ஏற்படாமல் இருக்க ஐஸ் க்யூப் மசாஜ் செய்திடுங்கள்.தினமும் இப்படிச் செய்து வருவதால் சருமம் பொலிவாவதுடன் சருமம் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

* கண்கள் மிகவும் சோர்வாகவோ அல்லது தூக்கமின்றி , அதிக தூக்கம் போன்ற காரணத்தால் கண்கள் வீங்கியிருந்தால் இதனை முயற்சிக்கலாம். க்ரீன் டீ பேக் கியூப் ட்ரேயில் வைத்து தண்ணீர் ஊற்றிடுங்கள். அவை கட்டியானதும் க்ரீன் டீ க்யூப் எடுத்து கண்களுக்கு ஒத்தடம் கொடுத்தால் உடனடி ரிசல்ட் கிடைக்கும்.

* சருமத்தில் தோன்றும் பல்வேறு பிரச்சனைகளுக்கு முக்கிய காரணமாக இருப்பது சருமத்தில் போதிய அளவு தண்ணீர் சத்து இல்லாமல் வறட்சி ஏற்படுவது தான். இதனைத் தவிர்க்க ஐஸ் க்யூப் மசாஜ் செய்யலாம்.
இவை முகத்தில் உள்ள திசுக்களை சுறுசுறுப்பாக்கும். அதோடு சருமத்தில் உள்ள டெட் செல்களையும் உடனடியாக நீக்கிடும் என்பதால் சருமம் மிகவும் பொலிவாக காணப்படும்.

Related posts

வழுக்கை வராமல் தடுக்க

nathan

இந்த பருவ காலத்தில் சில எளிய வீட்டு பராமரிப்பு முறை

sangika

சுக்குநூறாகிய கார்! விபத்தில் சிக்கிய பிரபல நடிகர்: ரசிகர்கள் பிரார்த்தனை

nathan

என்றென்றும் இளமையாகவும், அழகாகவும் இருக்க டிப்ஸ்

nathan

இந்த டிப்ஸ பாலோ பண்ணுங்க ! சருமம் அழகாக மின்னனும்

nathan

பித்த வெடிப்பு வராமல் தவிர்க்க

nathan

மஞ்சளின் முழு பலனையும் பெற வேண்டுமானால் பேஸ் பேக் போடும் போது செய்யக்கூடாதவை

nathan

beauty tips.. ஆயில் முகத்திற்கு ரோஜா பூ

nathan

ஆண்களுக்கான சில எளிய அழகுக்குறிப்புகள்!…..

sangika