அலங்காரம்முகப் பராமரிப்பு

முகம் ஜொலிக்கணுமா?

ld475

முகத்தை மசாஜ் செய்ய நீங்கள் பார்லருக்குத் தான் போக வேண்டும் என்பதில்லை.

வீட்டிலேயே செய்த கொள்ளலாம். முகத்திலிருக்கும் உயிரற்றுப்போன அணுக்களை நீக்கவும்,

ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், சோர்ந்துபோன தசைகளுக்கு புத்துணர்ச்சி கொடுக்கவும் மசாஜ்
உதவும்.

முகத்தில் கண், மூக்கு, உதடு போன்ற மிருதுவான பகுதிகள் இருப்பதால் முகத்துகு  மசாஜ் செய்ய கூடுதல் கவனம் தேவை.

கண்கள் தவிர பிற பகுதிகளுக்கு கீழிருந்து  மேல்புறமாகத்தான் மசாஜ் செய்யவேண்டும்.

கண்களுக்கு மட்டும் அதை சுற்றியுள்ள பகுதியில் வட்டமாக மசாஜ் செய்ய வேண்டும்.

முகம் மொத்தமாக சேர்த்து 20 நிமிடம் வரை மசாஜ்  செய்யலாம். மாதத்துக்கு ஒருமுறையாவது மசாஜ் செய்யுங்கள்.

பஞ்சில் கிலென்சிஸ் மிக் அல்லது தயிர் தோய்த்து தடவி முகத்தை சுத்தப்படுத்துங்கள்

பேன்ஸி கடைகளில் பல்வேறு பிரண்ட்களில் (Brand) நரிஸிங் க்ரீம் கிடைக்கிறது. உங்களுக்கு பொருந்தும் க்ரீமை தேர்ந்தெடுத்து வாங்குங்கள்.

பால், ஏடு, வெண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்றவற்றையும் உபயோகித்து மசாஜ் செய்யலாம்.

நரிஷிங் க்ரீமை முகம் முழுக்க பரவவிட்டு தடவிக்கொள்ளுங்கள்.

கழுத்தில் தொடங்கி கன்னம், தாடை, கண், மூக்கு என்று  ஒவ்வொரு பகுதிக்கும் நேரம் ஒதுகி மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும்.

ஒவ்வொரு பகுதியையும் நான்கிலிருந்து ஆறு தடவை செய்யலாம். மசாஜ் செய்து முடித்ததும் ஒரு  கைகளாலும் கன்னத்தை லேசாக தட்டுங்கள். (சதை மேல் நோக்கி அழுத்துபடி தட்ட வேண்டும்.)

பிறகு இரு கைகளால் முகத்தை சிறிது நேரம் மூடிக் கொள்ளுங்கள். நம் தோலுக்கு ஊட்டங்களை உறிஞ்சிக் கொள்ளுங்கள்.

நம் தோலுக்கு ஊட்டங்களை உறிஞ்சிக் கொள்ளும் தன்மையிருப்பால் நரிஷிங் க்ரீம், பாலேடு போன்றவற்றிலிருக்கும் ஊட்டங்களை எளிதில் உறிஞ்சிக் கொள்ளும்.

எல்லாம் செய்த பிறகு வெதுவெதுப்பான நீரில் நனைத்த துண்டால் முகத்தை துடையுங்கள்.

பிறகு நொறுநொறுப்பான பேஸ் ஸ்கிரப் அல்லது அரிசிமாவை பால் கலந்து பேஸ்டாக்கி  முகத்தில் ஐந்து நிமிடஙகள் வரை கரகரப்பாக தேய்க்க வேண்டு.

பின் மூக்கின் ஓரங்களில்  இருக்கும் பிளாக் ஹெட்களை அதற்கான உபகரணம் பயன்படுத்தி நீக்க வேண்டும்.

ஆழமாக இருக்கும் பிளாக் ஹெட்களை நீக்கும் முயற்சி வேண்டாம் வேறுவிதமான பாதிப்புகளை  உருவாக்கிவிடும். அதற்கு அழகுக் கலை நிபுணரைத்தான் அணுக வேண்டும்.

மேற்சொன்ன  மசாஜ் முறைகள் உலர்ந்த மற்றும் சாதாரண சருமத்தினருக்கு மட்டும்தான் பொருந்தும்.

முகத்தில் பரு இருக்கும் பெண்கள் சுயமாக மசாஜ் செய்யக்கூடாது.

எல்லாம் முடிந்த பிறகு முகத்தில் முல்தானி மெட்டியில் சிறிது பால் குழைத்து பேஸ்பேக்  தடவி உலர விடுங்கள்.

பத்து நிமிடம் போன பிறகு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவிவிடவும்.

சருமம் மினுமினுப்பதைக் கண்டு பூரித்துப் போவீர்கள்.

Related posts

அழகு அதிகரிக்க நகைகளை வெரைட்டிய போடுங்க…

nathan

ஆண்களே நீங்க எப்பவுமே இளமையா இருக்கணுமா? இதப் படிங்க…

nathan

இதோ எளிய நிவாரணம்! உங்க முகத்துல அசிங்கமா சுருக்கம் இருக்கா? இத செஞ்சா, சுருக்கம் இருந்த இடம் தெரியாமல் போயிடும்…

nathan

கருவளையம், சரும கருமை போன்ற பிரச்சனைகளில் இருந்து விரைவில் விடுபட வேண்டுமா?

nathan

இவ்வாறான ஆண்மகனை தேர்ந்தெடுங்கள் உங்கள் துணையாக!…

sangika

முகத்தில் உள்ள கருமையை நீக்க இனி கிரீம்கள் தேவையில்லை….

sangika

ஒரே வாரத்தில் முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் உள்ள கருமையைப் போக்க வேண்டுமா?

nathan

முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை சீக்கிரமாக போக்க சூப்பர் டிப்ஸ்…

nathan

சூப்பர் டிப்ஸ்! உங்க முகம் ஃபிரெஷ்ஷா, பளிச்சுன்னு இருக்க இந்த ஃபேஸ் ப்ளீச் பயன்படுத்துங்க!

nathan