கறிவேப்பிலை,வெண்ணெய் இரண்டையும் சங்கு கொண்டு அரைத்து முகத்தில் தடவி குளித்து வர முகப்பரு குறையும்.சின்ன வெகாயத்தை எடுத்து பாலில் வேகவைத்து மையாக அரைத்து பருக்கள் மீது தடவி வந்தால் பருக்கள் குறையும்.
வெண்டைக்காய் செடியின் இலைகளை அரைத்து போட முகப்பரு குறையும் .சீரகத்தை எரும்மைப் பால் விட்டு மைய அரைத்து தடவ முகப்பரு மறையும். சிறுகீரையுடன் முந்திரிப் பருப்பு மஞ்சள் சோ்த்து அரைத்து முகப்பருக்கள் மீது தடவ முகப்பரு குறையும்.
மஞசள்,சந்தனம்,வாகை,புளியாரைச்செடி ஆகியவற்றை சிறிது தண்ணீா் சோ்த்து அரைத்து முகத்தில் அழுத்தி தடவி வர முகத்தில் உள்ள பரு குறையும்.சுக்கை அரைத்து விழுதை முகப் பருக்களின் மீது அடிக்கடி தடவி வர முகப் நீங்கி குணம் காணலாம்.
வேப்ப இலையை பொடியாக்கி, நீா் கலந்து பசையாக்கி முகத்தில் தடவி வர, முகப்பருகள் குறையும்.பாசி பயறு மாவு, எலும்மிச்சைசாறு சோ்த்துத் தடவ வர முகப்பரு நீங்கும்.
நல்லெண்ணெயோடு மிளகுப்பொடி சோ்த்து முகப் பருக்கள் மீது பூசினால் முகப்பரு குறையும்.
கடலை மாவு,வெந்தயம் அடிக்கடி தேய்த்து வந்தால் பருக்கள் நீங்கும். முட்டை கோஸ்,தக்காளி,கேரட் இவற்றை பச்சையாக அடிக்கடி சாப்பிட்டு வந்தால் பருக்கள் போகும்.
பருக்களின் மேல் துளசி சாறு பூசி வந்தால் பருக்கள் மறையும். வெள்ளைப் பூண்டையும் ,துத்தி இலையையும் நறுக்கி நல்லெண்னையில் போட்டு காய்ச்சி பத்திரப்படுத்தி தினசரி பரு மீது தடவி வர முகப்பரு நீங்கும்…