625.0.56800.668.160.90
சரும பராமரிப்பு

சூப்பர் டிப்ஸ்! கைகளில் உள்ள சுருக்கங்கள் மறைய வேண்டுமா?

பொதுவாக சிலருக்கு கைகளில் சுருக்கங்கள் (Wrinkles Hands) வந்து அவர்களது தோற்றத்தை முதுமையாக காட்டும்.

வெளியே வெயிலில் செல்லும் போது, கைகளில் சூரியக்கதிர்களின் தாக்கம் அதிகம் இருப்பதால், கைகள் கருப்பாக மாறுவதுடன், கைகளில் நீர்ச்சத்தானது குறைந்து சுருக்கங்களை அதிகமாக்குகின்றது.

இதற்காக கண்ட கண்ட கிறீம்களை வாங்கி பூசுவதுண்டு. இதனை எளிய முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு சரி செய்ய முடியும். தற்போது அவற்றை பார்ப்போம்.
தக்காளி

தக்காளியை சரி பாதியாக அறிந்து கொண்டு, அவற்றை தங்களது கை மற்றும் கால்களில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்யுங்கள்

ஒரு 15 முதல் 20 நிமிடங்கள் வரை வைத்திருந்து, பின்பு குளிர்ந்த நீரால் கழுவ கை (Wrinkles Hands) மற்றும் கால்களில் உள்ள கருமை நிறங்கள் மற்றும் சுருக்கங்கள் அனைத்தும் மறையும்.

மேலும் மிகவும் வெண்மையாக காட்சியளிக்கும், இந்த முறையை தினமும் செய்து வர வேண்டும்.
வாழைப்பழம்

வாழைப்பழத்தை தினமும் நன்றாக மசித்து அவற்றை கை மற்றும் கால்களில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய, சிறிது நேரம் கழித்து, குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

இவ்வாறு செய்வதினால் கை மற்றும் கால்களில் உள்ள சுருக்கங்கள் மறைவதுடன், கை (Wrinkles Hands) மற்றும் கால்கள் மிகவும் மென்மையாக இருக்கும்.

இந்த முறையை தினமும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை, இருந்தாலும் வாரத்தில் இரண்டு முறை செய்து வரவும்.625.0.56800.668.160.90
ஆலிவ் ஆயில்

தினமும் ஆலிவ் ஆயிலை தங்களது கை மற்றும் கால்களில் நன்றாக தடவி சுமார் 30 நிமிடங்கள் வரை வைத்திருக்கவும், பின்பு குளிர்ந்த நீரால் கழுவவும்.

இவ்வாறு செய்வதினால் கை (Wrinkles Hands) மற்றும் கால்களில் உள்ள சுருக்கங்கள் மறைய செய்வதுடன், சரும செல்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கின்றது.
அன்னாசி பழம்

அன்னாசி பழத்தை பேஸ்ட் போல் அரைத்து கொண்டு அவற்றை கை மற்றும் கால்களில் நன்றாக தடவி மசாஜ் செய்ய வேண்டும்.

பின்பு 15 நிமிடங்கள் வரை காத்திருக்கவும், அதன்பிறகு குளிர்ந்த நீரால், கைகள் மற்றும் கால்களை கழுவவும்.

இவ்வாறு செய்வதினால் கைகள் (Wrinkles Hands) மற்றும் கால்களில் உள்ள சுருக்கங்கள் மற்றும் கருமையான நிறங்கள் மறைந்துவிடும்.

Related posts

முதிர்ச்சி ஆகியவற்றை தடுக்க அவகாடோ வை இவ்வாறு பயன்படுத்துங்கள்!…

nathan

சருமத்திற்கு அழகு சேர்க்கும் மூலிகை மருத்துவ டிப்ஸ்

nathan

கைவசம் இந்த மூலிகை எப்போதும் இருந்தா போதும்!! எல்லா உடல் பாதிப்புகளையும் போக்கிடலாம் தெரியுமா?

nathan

கன்னத்தின் அழகு அதிகரிக்க……

nathan

சருமத்தை மென்மையாக்கும் சர்க்கரை ஃபேஸ் பேக்!

nathan

கழுத்தின் இளமை ரகசியம்,

nathan

சரும சுருக்கத்தை போக்கும் காபி பவுடர் ஸ்க்ரப்

nathan

காபி மற்றும் தேங்காய் எண்ணெயால் செய்யப்பட்ட களிம்பு ரொம்ப நாளாக மறையாமல் இருக்கும் தழும்புகளை மறைய செய்யும்

nathan

உடல் அசதியைப் போக்கும் வெண் கடுகுக் குளியல்!

nathan