பழைய பாரம்பரிய மருத்துவத்தை எல்லோரும் திரும்பி பார்க்கும் காலமாக இருக்கிறது. ஆனாலும், எப்படி உடனடியாக முதலுதவி செய்வது என்பது தெரியாமல் எல்லோரும் தவிக்கிறார்கள். கூட்டுக் குடும்பங்களில் இருந்து தனிக்குடித்தனங்கள் வர ஆரம்பித்து இப்போது அப்பார்ட்மெண்ட்களில் தனிக்குடித்தனங்களும் சிதறுண்டு, சிங்கிள் பேரண்ட் என்று பெருமையாக சொல்லும் காலத்தில் வாழ்கிறோம்.
நாம் உட்கார்ந்து கொண்டிருக்கும் போதோ அல்லது தூங்கிக் கொண்டிருக்கும் போது நம்மை அறியாமல் நம் காதிற்குள் ஏதாவது பூச்சிகள் புகுந்து விட்டால் உடனடியாக என்ன செய்வது?
காதுக்குள் சென்ற பூச்சி முதலில் சாகடிக்க வேண்டும்… இல்லையெனில் காதுக்குள் எங்கேயாவது பயத்தில் அது கடித்து வைத்து விடும். காதில் பூச்சி புகுந்தால் உடனே தேங்காய் எண்ணெய் அல்லது உப்பை கரைத்து அவற்றை காதினுள் ஊற்ற வேண்டும். இவ்வாறு காதில் ஊற்றுவதினால் என்ன நிகழும் என்றால் பூச்சியால் சுவாசிக்க முடியாமல் மூச்சுத் திணறி வெளியே வர முயற்சிக்கும் அல்லது உள்ளேயே இறந்து மேலே வந்து விடும். இன்னும் பலர் தண்ணீரை ஊற்றுவார்கள் இவை மிகவும் தவறான ஒன்று. ஏனெனில் தண்ணீரில் பூச்சி வாழ்வதற்குத் தேவையான பிராண வாயு உண்டு. எனவே அந்த பிராணவாயுவை உபயோகப்படுத்திக் கொண்டு பூச்சி கடித்து கொண்டு தான் இருக்குமே தவிர வெளியே வராது,
இன்னும் சிலர் பூச்சியின் உடம்பைப் பிடித்து வெளியே இழுக்க முயற்சி செய்வார்கள் அவ்வாறு செய்யும் பொழுது பூச்சியின் உடல் மட்டுமே நம் கையில் வருமே தவிர அதன் தலை நம் காதில் உள்ள பகுதியை கடித்தவாறு காதுக்குள் தலை மாட்டிக் கொள்ளும். ஆகவே பூச்சியை முதலில் சாகடித்து விட வேண்டும் பிறகு அப்புறப்படுத்த வேண்டும்.