29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
gyh
சரும பராமரிப்பு

தீபாவளிக்கு நல்லெண்ணெய் குளியல் !சூப்பர் டிப்ஸ்…

நல்லெண்ணெயை குளிர குளிர தேய்த்து வெதுவெதுப்பான வெந்நீரில் குளிப்பது பாரம்பரியம். இதற்கு கங்கா ஸ்நானம் என்று பெயர். நவம்பர் 6 ஆம் தேதியன்று தீபாவளி நாளில் அதிகாலை 3 மணி முதல் 5 மணிவரை சூரிய உதயத்திற்கு முன்பு நல்லெண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.

தீபாவளி பண்டிகை என்றாலே பட்டாசும், பலகாரமும் முதலிடம் பிடிக்கும். கிராமப்புறங்களில் அசைவ உணவு களைகட்டும் இவை அனைத்துக்கும் முன்பாக உடம்பில் குளிர குளிர எண்ணெய் தேய்த்து வெந்நீர் குளியல் போடுவது முக்கியம். சனி நீராடு என்பது பெரியவர்கள் கூறும் முது மொழி. சனிக்கிழமை தோறும் நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பது உடலுக்கு ஆரோக்கியம்.

பெண்கள் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பது உடல் சூட்டை தணிக்கும். பொதுவாகவே நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பதால் இளநரை வராது. சளி, தலைவலி, சைனஸ் தொந்தரவு நீங்கும். ஆரோக்கியமான தூக்கம் கிடைக்கும்.

நல்லெண்ணெய் தீபாவளி நாளில் தலையில், உடம்பில் தேய்க்கும் நல்லெண்ணெயை காய்ச்சுவதே ஒரு கலை அதற்கு தேவையான பொருட்களை முதல்நாளே சேகரித்து வைத்து விடுவார்கள்.

நல்லெண்ணெய் காய்ச்சுவதற்காக ஒரு வாணலியை தயார் செய்து வைத்து விடுவார்கள். அதிகாலையிலேயே அலாரம் வைத்து எழுந்து வானலியில் நல்லெண்ணெ ஊற்றி கொஞ்சம் மிளகு, சீரகம், வெள்ளைப்பூண்டு தோலுடன் தட்டிப்போட்டு கூடவே சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாய் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து புகையாமல் காய்ச்சி ஆற வைப்பார்கள்.gyh

 

தீபாவளி நாளில் தலையில், உடம்பில் தேய்க்கும் நல்லெண்ணெயை காய்ச்சுவதே ஒரு கலை அதற்கு தேவையான பொருட்களை முதல்நாளே சேகரித்து வைத்து விடுவார்கள். நல்லெண்ணெய் காய்ச்சுவதற்காக ஒரு வாணலியை தயார் செய்து வைத்து விடுவார்கள்.

அதிகாலையிலேயே அலாரம் வைத்து எழுந்து வானலியில் நல்லெண்ணெ ஊற்றி கொஞ்சம் மிளகு, சீரகம், வெள்ளைப்பூண்டு தோலுடன் தட்டிப்போட்டு கூடவே சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாய் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து புகையாமல் காய்ச்சி ஆற வைப்பார்கள்.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வரிசையாக அமர்ந்து ஒரு கின்னத்தில் எண்ணெய் ஊற்றி உடம்பில் தேய்த்து ஊறவைத்து வெந்நீரை காய்ச்சி அதில் சிறிதளவு சந்தனம், மஞ்சள் போட்டு குளிப்பது பாரம்பரியம். வெந்நீரில் சந்தனம், மஞ்சள் தூள் போடுவதால் அந்த நீரில் கங்கை எழுந்தருளுவதாக ஐதீகம்.

இன்றைக்கு பித்தமும் உடல் சூடும் அதிகரித்து இருக்கிறது. நல்லெண்ணெய் குளியல் பித்தம், உடல் சூட்டை தணிக்கிறது. தோல் வறட்சி நீங்கும். ரத்த ஒட்டம் சீராக இருக்கும். எண்ணெய் குளியல் மன அழுத்தத்தை நீக்கும் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.

எனவேதான் வாரம் இருமுறை தவறாமல் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் என்கின்றனர் முன்னோர்கள். எண்ணெயில் பூண்டு, சீரகம், சிவப்பு மிளகாய் சேர்த்து பதமான சூட்டில் இதமாக குளிக்க வேண்டும்.

வெது வெதுப்பான நல்லெண்ணெயை உச்சந்தலையில் முதலில் வைக்க வேண்டும். உடல் முழுவதும் தேய்த்து விட்டு உள்ளாங்கால்களில் கடைசியாக தேய்க்க வேண்டும். அரைமணிநேரம் ஊற வைத்து பின்னர் வெது வெதுப்பான நீரில் குளிக்க வேண்டும். குளிப்பதற்கு கலப்படம் எதுவும் இல்லாத அரப்பு, சீயக்காய்தான் பயன்படுத்த வேண்டும்.

இன்றைய பரபரப்பான காலத்தில் இளைய தலைமுறையினர் எண்ணெய் குளியலை மறந்தே விட்டனர். வீக் என்ட் கலாச்சாரத்தில் உள்ளவர்கள் தீபாவளி நாளிலாவது தியேட்டர்களில் போய் அமர்ந்து கொள்ளாமல் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.

தீபாவளி மட்டுமல்லது பொதுவாகவே நல்லெண்ணெய் தேய்த்து குளிக்கும் நாளில் ஓய்வு எடுப்பது அவசியம். குளிர்ச்சியான தயிர், மோர், நீர்க் காய்கறிகள், திராட்சை, வாழைப்பழங்கள், குளிர்ச்சி தரக்கூடிய பொருட்களை தவிர்ப்பது நல்லது.

Related posts

பிரசவத்திற்கு பின் கரீனா கபூர் சிக்கென்று மாறியதன் ரகசியம் தெரியுமா?

nathan

சருமம், கூந்தல் பிரச்சனைகளை தீர்க்கும் விளாம்பழம்

nathan

குளிர்காலம்: சருமத்தை வறட்சியை தடுக்கும் வழிகள்

nathan

பொலிவான சருமத்தையும் பளபளக்கும் கூந்தலையும் பெற

nathan

பெண்கள் தேவையற்ற முடியை நீக்கும்போது கவனிக்க வேண்டியவை

nathan

அழகுக் கட்டுரைகள் – அழகு உள்ளப் பயிற்சி & உடற்பயிற்சி & அழகு ஒப்பனை முறைகள்

nathan

வியர்வை நாற்றத்தைத் தடுக்க, குளிக்கும் நீரில் வெட்டிவேரை ஊறவைத்துக் குளிக்கலாம்.

nathan

இளம்பெண்கள் அழகு தேவதைகளாக வலம் வர இதை செய்து வாருங்கள்!…

sangika

முதல் முறையாக பார்லர் போகும் போது..

nathan