26.6 C
Chennai
Sunday, Nov 17, 2024
uhiuhijn
அழகு குறிப்புகள்

மருத்துவர் கூறும் தகவல்கள் தொடர்ந்து படியுங்கள்..பெண்கள் `ஆஸ்டியோபொரோசிஸ்’ பாதிப்பிலிருந்து தப்பிப்பது எப்படி?

பெண்கள் சராசரியாக 50 வயதில் மெனோபாஸ் நிலையை அடைய வேண்டும். ஆனால் 40, 45 வயதிலேயே மெனோபாஸ் நிலையை அடைந்துவிட்டால் உடலில் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனின் சுரப்பு குறைந்துவிடும்.

இந்த ஹார்மோன்தான் உடலில் கால்சியத்தைச் சேகரிக்க உதவுகிறது. இதுபோன்ற நிலையில் இருப்பவர்களுக்கும் கர்ப்பப்பையை நீக்கியவர்களுக்கு கால்சியம் குறைபாடு எளிதில் ஏற்படும். இதனால் எலும்பின் அடர்த்தி குறைந்து எலும்புப்புரை நோயாக (Osteoporosis) மாறும். பெண்களே இந்தப் பிரச்னையால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

பெண்கள்

இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கவனக்குறைவால் கீழே விழுந்தாலோ, எதிலும் மோதிக்கொண்டாலோ எலும்பு முறிவு ஏற்படும் வாய்ப்பு அதிகம். இந்த நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபர் 20-ம் தேதி உலக ஆஸ்டியோபொரோசிஸ் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
uhiuhijn
எலும்புப்புரையால் பாதிக்கப்பட்டு, அதை எதிர்கொண்டு வாழ்க்கையில் ஜெயித்து வரும் டயட்டீஷியன் அம்பிகா சேகர், தன் அன்பவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

“எனக்கு நாற்பத்தைந்து வயது இருந்தபோது கர்ப்பப்பை, அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. அதற்குப் பிறகு மூன்று ஆண்டுகள் ஹார்மோன் சிகிச்சை எடுத்துக்கொண்டேன். சிகிச்சை எடுத்துக்கொண்ட வரையில் எந்தப் பிரச்னையும் இல்லை. 48-ம் வயதில் கொஞ்ச நாள்கள் ஹார்மோன் சிகிச்சை எடுத்துக்கொள்வதை நிறுத்திவிட்டேன். அதன்பிறகு எலும்பு இணைப்புகளில் வலி, தசைகளில் விரைப்புத் தன்மை என்று பல பிரச்னைகள் வர ஆரம்பித்தன.
uihu
ஆஸ்டியோபொரோசிஸ் இருப்பவர்கள், கீரை வகைகளை வாரத்திற்கு 3 அல்லது 4 முறை எடுத்துக்கொள்ள வேண்டும்.

டயட்டீஷியன் அம்பிகா சேகர்

ஆர்த்ரைட்டிஸ் பிரச்னையாக இருக்குமோ என்று பயந்து மருத்துவரை அணுகினேன். மருத்துவர் எலும்பின் அடர்த்தியைப் பரிசோதிக்கும் டெக்ஸா (DEXA) ஸ்கேன் எடுக்கும்படி அறிவுறுத்தினார். அந்தப் பரிசோதனையில்தான் எனக்கு ஆஸ்டியோபோரோசிஸ் இருப்பது தெரியவந்தது. இந்த நோய் வருவதற்கு முக்கியக் காரணம் உடலில் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன், கால்சியம், வைட்டமின் டி குறைபாடு ஆகும்.
uihuiui
ஆஸ்டியோபொரோசிஸ்

எனக்கு கர்ப்பப்பையுடன் சினைப்பையையும் எடுத்துவிட்டதால் ஈஸ்ட்ரோஜென் சுரப்பது குறைந்து இந்தப் பிரச்னை ஏற்பட்டது. ஹார்மோன் சிகிச்சை, அசிடிட்டி பிரச்னை ஆகிய காரணங்களால் எலும்புப்புரைக்கான மருந்துகள் எனக்கு ஏற்றுக்கொள்ளவில்லை.

எலும்புப்புரை என்பது தீவிரமான நோய் அல்ல என்பதால் அதிகம் பயப்பட வேண்டாம்.

டயட்டீஷியன் அம்பிகா சேகர்

கால்சியம் மாத்திரைகள் அதிகம் உட்கொண்டால் ரத்தத்தில் கால்சியம் அதிகம் சேர்ந்து இதயத்தை பாதிக்கும் என்பதால், மாதத்தில் 15 நாள்கள் மட்டுமே மாத்திரைகள் எடுத்துக்கொண்டேன். அதன்பிறகு கால்சியம் மாத்திரையுடன் உணவுமுறையிலும் மாற்றம் செய்தேன். புரதம், கால்சியம் , ஈஸ்ட்ரோஜென் சத்துகள் நிறைந்த உணவு முறைக்கு மாறினேன். தற்போது அந்தப் பிரச்னையை நிர்வகித்து வெற்றிகரமாக வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
huiui
உடற்பயிற்சி

எலும்புப்புரை என்பது தீவிரமான நோய் அல்ல என்பதால் அதிகம் பயப்பட வேண்டாம். நம்மை எவ்வளவு சுறுசுறுப்பாக வைத்துக் கொள்கிறோமோ அவ்வளவு நல்லது. தசைகளை வலுப்படுத்தும் உடற்பயிற்சிகள், நடைப்பயிற்சி, யோகா ஆகியவற்றில் ஈடுபடலாம். மனஅழுத்தம் ஏற்படாமல் பார்த்துக்கொள்வதும் அவசியம். இந்தப் பிரச்னை உள்ளவர்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட வாய்ப்பு அதிகம் என்பதால் நடக்கும்போதும் படியில் ஏறி இறங்கும்போதும் கவனமாக இருக்க வேண்டும்” என்கிறார்.
ll
மூட்டுகளுக்கு வலுச்சேர்க்கும் எலும்பு சூப்!
ஆஸ்டியோபொரோசிஸ் இருப்பவர்கள், ஈஸ்ட்ரோஜெனை அதிகரிக்க அவகேடோ பழச்சாற்றை வாரத்திற்கு ஒருமுறை அருந்தலாம்.
– டயட்டீஷியன் அம்பிகா சேகர்
எலும்புப்புரை பிரச்னை இருப்பவர்களுக்கான ஆரோக்கிய உணவுமுறையையும் அவரே விளக்குகிறார்.

“பசும்பாலில் கால்சியம் மற்றும் வைட்டமின் டி சத்துகள் அதிகமாக உள்ளன. எளிதில் ஜீரணிக்கக் கூடியது. பசும்பாலை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். மோரில் புரோபயாடிக் அதிகம் உள்ளதால் பாலைவிட மோரை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். மோரில் கொழுப்புச்சத்து இல்லாதது கூடுதல் சிறப்பு. முளைகட்டிய பயிறு வகைகள், பன்னீர், மட்டன், மீன் ஆகியவற்றில் புரதச்சத்து அதிகம் உள்ளது.

50 வயதுக்கு மேற்பட்டவர்கள் இறைச்சியைக் குறைவாகவும் மீனை அதிகமாகவும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். கீரை வகைகளை வாரத்திற்கு 3 அல்லது 4 முறை எடுத்துக்கொள்ள வேண்டும். ஈஸ்ட்ரோஜெனை அதிகரிக்க அவகேடோ பழச்சாற்றை வாரத்திற்கு ஒருமுறை அருந்தலாம். ஆளி விதை, ஆப்பிள், சோயா, பன்னீர் ஆகியவை ஈஸ்ட்ரோஜெனின் அளவைக் கூட்டக்கூடிய உணவுகள். இவை அனைத்துமே நான் பின்பற்றியவை” எனும் அம்பிகா சேகர்,

ஆஸ்டியோபொரோசிஸ் அறிவோம்!

“வைட்டமின் டி யைப் பெறுவதற்கு கூடுமானவரை வெயிலில் இருக்க முயற்சி செய்வேன். அருகில் இருக்கக்கூடிய இடங்களுக்கு நடந்தே செல்வேன். அப்போதுதான் சூரிய ஒளியிலிருந்து வைட்டமின் டி-யைப் பெற முடியும். நிறைய தண்ணீர் குடிக்கவேண்டும். பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் உணவில் எடுத்துக்கொள்ள வேண்டும். மலச்சிக்கல் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்” என்றார்.

பழங்கள்

இறுதியாக எலும்புப்புரையை நிர்வகிக்க தான் தினமும் குடிக்கும் கஷாயத்தின் ரெசிபியைக் கூறினார்.

“இரண்டு கைப்பிடி முருங்கைக்கீரை, சிறிய துண்டு இஞ்சி, 6 மிளகு, கால் டீஸ்பூன் சீரகம், ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் ஆகியவற்றை 2 டம்ளர் தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். இரண்டு டம்ளர் நீர் ஒரு டம்ளராக வற்றும்வரை கொதிக்க வைத்து தினமும் அருந்தலாம்” என்றார்.

Related posts

உடலில் கொழுப்பு படியாமல் தடுத்து உடல் எடையை சீக்கிரம் குறைக்க வெள்ளரியை இவ்வாறு சாப்பிடுங்க!…

nathan

இளவரசர் ஹரியின் உண்மையான தந்தை யார்?தோழி கூறும் தகவல்

nathan

இரண்டாம் கல்யாணம்.. பிரபல நடிகருடன் ரகசிய காதலில் நடிகை சமந்தா..

nathan

குழந்தைக்கான உணவூட்டல் தொடர்பான அறிவு கட்டாயம் அனைவருக்கும் வேண்டியதே…

sangika

ஆடை அழகாக அணிவது மட்டும் முக்கியமல்ல நம் உடலையும் ஆரோக்கியமாக வைத்து கொள்வது ரொம்ப அவசியமானது!….

sangika

தரையிறக்கத்தின் போது இரண்டாக பிளந்த விமானம் -நீங்களே பாருங்க.!

nathan

உங்களுக்கு தெரியுமா செவ்வாழையில் உள்ள சத்துக்கள் என்ன?

nathan

பலன்தரும் இயற்கை ஃபேஸ் பேக்…!

nathan

உலர் சருமத்திற்கு உகந்த பேஸ் பேக்

nathan