25.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
dftgfgf
அழகு குறிப்புகள்

இதோ எளிய நிவாரணம் கருப்பா இருந்தாலும் களையாக இருக்கணுமா?

கருப்பான சருமம் என்பது இந்தியர்களை பொருத்தவரை இரண்டாம் பட்சமாகவே பார்க்கப்படுகிறது.

இதற்கு காரணம் சிவந்த மேனி கொண்டவர்களுக்கு அளிக்கப்படும் முன்னுரிமைதான். கருப்பு என்பது வெறுக்கத்தக்க நிறமில்லை.

சிறிதளவு தேன், சிறிதளவு பாலேடு, சிறிது வெள்ளரிச்சாறு, கொஞ்சம் கடலை மாவு எல்லாவற்றையும் நன்றாகக் குழைத்து முகத்தில் தடவி பதினைந்து நிமிடங்கள் அப்படியே விட்டு பிறகு கழுவலாம். இதனால் கருப்பான சருமம் களையாகும்.

ஆயுர்வேதக் கடைகளில் சுத்தமான குங்குமாதி தைலம் கிடைக்கும். அதை வாங்கி கொஞ்சம் பாலுடன் கலந்து வாரம் ஒரு முறை முகத்துக்கு தடவி வர வேண்டும். இவ்வாறு தடவிய பிறகு அரைத்த சந்தனத்தில் பால் கலந்து மீண்டும் தடவ வேண்டும்.
dftgfgf
இதனால் முகம் நிச்சயம் பொலிவாகும். வெயிலில் வாகனங்களில் செல்கிற போது ‘சன் ஸ்கிரீன்’ உபயோகிக்கலாம். அதேபோல் கைகளுக்கு தற்காப்பு கவச துணி அணிவது சருமத்தை பாதுகாக்கும்.

சூடான பாலில் குங்குமப் பூவைப் போட்டு கால் மணி நேரம் அப்படியே ஊறவிட வேண்டும். அது வெதுவெதுப்பாக மாறி, மஞ்சள் நிறத்துக்கு வரும்போது குடிப்பது தான் பலன் தரும். இதனால் சரும நிறத்தில் பொலிவு கூடும்.

அதேபோல் பச்சைக் காய்கறிகள், பழங்கள், இளநீர், பால், தயிர் சாப்பிடுவது போன்றவையும் நிறத்தை மேம்படுத்த நினைப்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.

Related posts

சருமம் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்க அற்புத அழகு குறிப்புகள்…!!பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

சருமம் பளபளக்க, காண்போரை வசீகரிக்க‍ சில எளிய மருத்துவ முறை!…

sangika

இவ்வாறான பெண்களுடனான உறவில் சிறந்து விளங்குவார்களாம்……

sangika

இயற்கை வழி முறைகளை பயன்படுத்தி முடி வளர்ச்சியை அதிகரிக்கவும், கருமையாக்கவும் இத படிங்க!

sangika

பருவால் உண்டான வடு மறைய ஃபேஸ் பேக்

nathan

மஞ்சள் பூசிக்கொள்வதால் பயன் உண்டா?

nathan

மதுரை ஆதீனம் மடாதிபதியாக நித்யானந்தா!

nathan

கண்ணழகையே கெடுத்து விடும் கருவளையம்…..

sangika

இரவு படுக்கைக்குச் செல்லும்முன் இருபது நிமிடங்கள் இதற்கு ஒதுக்கினாலே போதுமானது!…

sangika