24.7 C
Chennai
Saturday, Dec 13, 2025
drtrdt
அழகு குறிப்புகள்

சூப்பர் டிப்ஸ் உங்கள் முகம் பளிச்சிட காபி தூள்..!!!

காபி இல்லாமல் அன்றைய நாளே இல்லை என்று சொல்லலாம். ஏனென்றால் நாம் அனைவரும் காபியை குடித்த பின் தான் மற்ற வேலைகளை செய்ய ஆரம்பிக்கிறோம். சிலருக்கு காபி குடிக்கவில்லை என்றால் தலை வலியே வந்துவிடும்.

எனவே காபி தூள் நம் அனைவரின் வீட்டிலும் கட்டாயம் இருக்கும் ஒரு பொருளாகும். இந்த காபி நமக்கு புத்துணர்ச்சியூட்டும் பானமாக மட்டுமில்லாமல் நம் முகத்தை அழகூட்டவும் பயன்படுகிறது.

என்னடா நம்ம காபி குடிக்க மட்டும் தான பயன்படுத்துவோம் இது என்ன புதுசா இருக்குனு நீங்க யோசிக்கலாம். ஆமாங்க காபி தூள் நம்ம முகத்த அழாக காட்டவும் பயன்படுகிறது.

காபி தூளை வைத்து முகத்தை அழகாக்க சில டிப்ஸ்

காபி தூள் ஒரு கப் , ஏலக்காய் பொடி 2 ஸ்பூன் , தேங்காய் எண்ணெய் 3 ஸ்பூன் மற்றும் சர்க்கரை 1 கப் சேர்த்து நன்கு கலந்துகொள்ளுங்கள். அதை குளிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன் முகம் மட்டுமல்லாது கை கால்களிலும் தேய்த்து சிறிது நேரம் ஊற வைக்கவும். பின்னர் மிதமான நீரில் குளிக்கவும்.
drtrdt
ஒரு கப் காபி பொடியில் இரண்டு ஸ்பூன் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் ஸ்க்ரப் போல் 10 நிமிடங்களுக்கு தேய்த்து விடுங்கள். பின் வெதுவெதுப்பான நீரில் கழுவிவிடவும். இப்படி வாரம் ஒரு முரியா செய்து பாருங்கள் நீங்களே ஆச்சரிய படும் அளவுக்கு உங்கள் முகம் பளிச்சிடும்.

கற்றாழையை ஐந்து ஸ்பூன் எடுத்து மசித்துக்கொள்ளவும். அதோடு காபி பொடி ஒரு கப் கலந்து முகத்தில் 10 – 15 நிமிடங்களுக்கு ஸ்கர்ப் செய்யவும். பின் வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

4 ஸ்பூன் காபி தூளில் ஒரு கப் பால் மற்றும் 2 ஸ்பூன் தேன் கலந்து முகம் கை , கால்கள் , கழுத்து போன்ற இடங்களில் தடவி 10 – 15 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள்.

4 ஸ்பூன் காஃபி தூள், 4 ஸ்பூன் பட்டர், ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கெட்டியான பதத்தில் கலக்கவும். முகத்தில் மட்டுமல்லாது கை கால் , கழுத்து போன்ற இடங்களில் தேய்த்து 10 – 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவிவிடவும்.

Related posts

ஐம்பது வயதிற்கு மேல் ஆனாலும் அழகாக காட்சியளிக்க அருமையான டிப்ஸ்!…

sangika

காலையில் தினமும் வெந்தயத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… குட்டை தலை முடியின் அழகு ரகசியம்

nathan

ஆரோக்கியமான முடி மற்றும் சருமத்தை வழங்க அன்னாசிப்பழம் எவ்வாறு உதவுகிறது மற்றும் அதை எவ்வாறு பயன்படுத்துவது..

nathan

அழகுக் குறிப்புகள்

nathan

நீங்களே பாருங்க.! விவாகரத்து சர்ச்சைக்கு பிறகு மார்ட்ன் உடையில் சமந்தா…

nathan

வீட்டில் கிடைக்கும் பொருட்களை கொண்டே பாத வெடிப்பை போக்கலாம்

nathan

வதந்தி குறித்து கடும்கோபத்தில் கயல் ஆனந்தி கூறிய பதில்..திருமணத்திற்கு முன் காதலா?

nathan

வறண்ட சருமத்திற்கேற்ற முகப் பூச்சுக்கள்

nathan