பார்லியை தினமும் உணவில் சேர்த்து கொள்வது உடலுக்கு மிகவும் நல்லது. இன்று பார்லி, காய்கறிகள் சேர்த்து சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
பார்லி – அரை கப்,
வெங்காயத்தாள் – ஒரு பிடி
கேரட் – ஒரு கிண்ணம்
வெள்ளரிக்காய் – ஒரு கிண்ணம்
பீன்ஸ் – ஒரு கிண்ணம்
புதினா, கொத்தமல்லித்தழை – ஒரு பிடி
பூசணி – ஒரு கிண்ணம்
எலுமிச்சைப்பழம் – அரை மூடி
உப்பு – தேவையான அளவு
மிளகு சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன்

கொத்தமல்லி, புதினா மற்றும் வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி வைத்து கொள்ளுங்கள்.
பின்னர் காய்கறிகளை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி வைத்து கொள்ளுங்கள்.
அடுத்து பார்லியை வெறும் வாணலியில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து ஆறியதும் மிக்சியில் போட்டு கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.
குக்கரில் பார்லியுடன் காய்கறிகள், வெங்காயத்தாள், புதினா, கொத்தமல்லித்தழை, அரிசி கழுவிய தண்ணீர் சேர்த்து மூடி, 4 விசில்விட்டு இறக்கவும்.
ஆறியதும் மிளகு சீரகத்தூள், உப்பு, எலுமிச்சைச் சாறு சேர்த்துச் சூடாக அருந்தவும். சுவையான சூப் ரெடி.!