29.2 C
Chennai
Tuesday, Aug 19, 2025
அழகு குறிப்புகள்

பெண்களே உங்களுக்கான நகையை தேர்வு செய்வது எப்படி?

பெண்களே உங்களுக்கான நகையை தேர்வு செய்வது எப்படி?
தங்க ஆபரணங்களை தனித்தனி பெட்டிகளில் பாதுகாப்பாக வைக்க வேண்டும். ஒரே பெட்டியில் ஒன்றோடு ஒன்றாக பலவற்றை சேர்த்தால் நகைகளில் கீறல்கள் ஏற்பட்டுவிடும் வாய்ப்பு அதிகம். அதனால் பெறுமதி குறைவதோடு நிறமும் மங்கி விடும்.நீண்ட கழுத்து, வட்ட முகம், நீண்ட காது மடல் என்று கழுத்து, காது பகுதிகளின் அமைப்பை வைத்தே என்னென்ன நகை பொருத்தமாக இருக்கும் என்பதைத் தெளிவாக சொல்லிவிடமுடியும். உங்கள் முக வடிவமைப்பு, கழுத்தின் நீள அகலத்தை பொருத்து நகைகளைத் தேர்ந்தெடுங்கள்.பொதுவாகவே ஒல்லியும், உயரமுமாக இருப்பவர்களுக்கு கழுத்து சற்று நீளமாகத்தான் இருக்கும். அகலமான நெக்லஸ், சோக்கர், குந்தன் ஜூவல்லரி ஆகியவை அணியலாம். கூடவே ஒரு நீளமான செயின் அணியுங்கள். குட்டை கழுத்து பகுதி உள்ளவர்கள் ஒற்றைக்கல் நெக்லஸ் அல்லது தடிமனான சங்கிலியில் டாலர் வைத்து அணியலாம்.

குண்டாகவும், குள்ளமாகவும் இருப்பவர்களுக்கு கழுத்து நீளம் குறைவாக இருக்கும். பட்டையான நெக்லஸ், சோக்கர் போட்டால் அது கழுத்தை இன்னும் அகலமாகக் காட்டுவதுடன் இருக்கிற கொஞ்சநஞ்ச இடத்தையும் அடைத்துக் கொள்ளும். மெல்லிய சங்கிலி, சின்ன சைஸ் முத்து, மெல்லியதான பீட்ஸ் இவற்றை ப்ளெய்ன் ஆகவோ அல்லது சிறிய டாலருடனோ அணிந்து கொண்டால் எடுப்பாக இருக்கும்.

மெல்லிய, நீண்ட செயின்கள் நிச்சயம் உங்களுக்கு அழகுதான். டாலர் இல்லாமல் அணிந்தால் இன்னும் அழகாக இருக்கும். கழுத்தைச் சுற்றி செயின் படர்ந்திருக்கும் பகுதிகளில் அதிக கற்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.

கழுத்துக்கு கீழே தொங்கும் செயின் பகுதியில் கற்கள் பதித்திருந்தால் தப்பில்லை. அதிக நகைகள் போடாமல் மெல்லிய செயின், சிறிய காதணிகள் போட்டால் அம்சமாக இருக்கும். அகலமான நகைகளைத் தவிர்த்துவிடுங்கள். உடலின் நிறத்துக்கு ஏற்ப உடை மற்றும் நகைகளைத் தேர்ந்தெடுங்கள்.

சிவப்பு நிறம் உள்ளவர்கள்:

ரூபி, பச்சை, நீலம் போன்ற கற்கள், மணிகள் உள்ள நகை அணியலாம்.

கறுப்பு நிறம் உள்ளவர்கள்:

வைர நகைளை அணிந்தால் அவ்வளவு அழகாக இருக்கும்!

முத்து வகைகள், வெள்ளை, பிளாக் மெட்டல் நகைகள் உங்களுக்கு மிகமிக அழகாக பொருந்தும். அதிகப்படியான நகைகளை அணியவேண்டாம். சின்னதாக ஐந்து கல் பதித்த அமெரிக்கன் டயமண்ட் தோடு, மெலிதான செயினில் பதக்கம், ஒரு துளி தெறித்தது போன்ற ஒற்றைக் கல் மூக்குத்தி போன்றவை உங்கள் முக அழகை பிரகாசமாகக் காட்டும்.

முத்து செட்டும் அம்சமாக இருக்கும். தங்கத்திலும் பட்டை பட்டையாக இல்லாமல் மெல்லிய நகைகள் அணியுங்கள். ஒல்லியானவர்கள நிறைய வளையல் அணிந்து கொள்ளுங்கள். பட்டையான ஜரிகை போட்ட புடவைகள் அணிந்து கொண்டால், நகை சற்று சிம்பிளாக இருக்க வேண்டும். சிம்பிள் புடவையாக இருக்கும்பட்சத்தில் குந்தன், டெம்பிள் போன்ற நகைகள் அணியலாம்.

இது எல்லோருக்குமே பொருந்தும். டல் ஒயிட், க்ரே, ஸ்கை ப்ளூ, பேபி பிங், அல்ட்ரா லைட் ப்ரவுன் போன்றவை எந்த டிசைன் நகைகளுக்கும் பொருத்தமான ஆடை வண்ணங்கள்.

Related posts

நம் கூந்தலை ஆரோக்கியமாகவும் அழகாகவும் மாற்றவும் தேன் உதவுகிறது

sangika

நம்ப முடியலையே…5 நடிகைகளுடன் சர்ச்சைக்குரிய தொடர்பில் கமல்ஹாசன்.. யாரை திருமணம் செய்து கொண்டார் தெரியுமா?

nathan

பெ‌ண்களு‌க்கான அழகுக்குறிப்புகள்

nathan

நம் உதட்டின் இயற்கையான நிறத்தை பெறுவது எப்படி?

nathan

முயன்று பாருங்கள்.. கரும் புள்ளிகளை அகற்றுவதற்கான வழிகள்!

nathan

சர்வைவரில் ஆபத்தில் சிக்கிய போட்டியாளர்! அலறி ஓடி ஆக்‌ஷனில் குதித்த அர்ஜூன்…

nathan

சூப்பர் டிப்ஸ் பாதவெடிப்பு ஏற்படாமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்

nathan

வருஷம் ஆனாலும் வயது ஏறாது இளமைக்கு 25 வழிகள்!,tamil beautytips ,beauty tips tamil ,25 beauty tips tamil

nathan

தன்னம்பிக்கை தருது மேக்கப்,tamil beauty tips

nathan