26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
625.0.560.350.160.30
அசைவ வகைகள்

செட்டிநாடு மட்டன் கிரேவி செய்வது எப்படி?

செட்டிநாடு சமையல் என்பது தென்னிந்தியாவில், தமிழ்நாட்டில் செட்டிநாடு என்ற பகுதியில் வழக்கத்தில் உள்ள சமையல் மரபு ஆகும்.

செட்டிநாட்டு சமையலில், இறைச்சி உணவு சமைக்கும் போது பயன்படுத்தப்படும் பல்வகை வாசனைச் சரக்குகள், வழமையான உணவுக்கு சுவை கூட்டுவது, அவ்வப்போது அரைத்துச் சேர்க்கும் காரமும் நெடியும் நிறைந்த மசாலாக்கள் பிரபலமானவை ஆகும்.

அதில் தற்போது மட்டன் கிரேவி எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.
தேவையான பொருட்கள்

மட்டன் – 1 /2 கிலோ
பெரிய வெங்காயம் – 1
கறிவேப்பில்லை – 2 கொத்துகள்
இஞ்சி பூண்டு விழுது – 2 டேபிள் ஸ்பூன்
தனியா தூள் – 3 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
சின்ன வெங்காயம் – 50 கிராம்
தக்காளி – 1 (பெரியது)
தேங்காய் துருவல் – 3 டேபிள் ஸ்பூன்
செட்டிநாடு மசாலா தூள் செய்ய
தனியா – 2 டேபிள் ஸ்பூன்
மிளகு – 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
சோம்பு – 1 டேபிள் ஸ்பூன்
பிரிஞ்சி இலை – 1
கல் பாசி – 2
கறிவேப்பிலை – 5 கொத்துகள்
காய்ந்த மிளகாய் – 6 (அல்லது காரத்திற்கேற்ப)625.0.560.350.160.30

செய்முறை

வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

மட்டனை நன்றாக சுத்தம் செய்து குக்கரில் போட்டு அதனுடன் தனியா தூள், உப்பு சேர்த்து 5 – 6 விசில் விட்டு வேக வைத்துக்கொள்ளவும்.

செட்டிநாடு மசாலாவிற்கு கொடுத்துள்ள பொருள்களை நல்லெண்ணெய் விட்டு மிதமான சூட்டில் வறுத்துக்கொண்டு, ஆறவைத்து மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.

கிரேவிக்கு கொடுத்துள்ள பொருள்களை, ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி நன்றாக வதக்கி, ஆற வைத்து அரைத்துக்கொள்ளவும்.

ஒரு கடாயை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் விட்டு சூடானதும் கடுகு போட்டு தாளித்த பின்னர் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பில்லை போட்டு வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

இஞ்சி பூண்டு விழுது நன்றாக வதக்கிய பின், அரைத்து வைத்த கிரேவியை சேர்த்து 2 நிமிடம் கொதித்த பிறகு, வேக வைத்த மட்டன் துண்டுகளை சேர்த்து, நன்றாக கிளறவும்.

பிறகு, அரைத்து வைத்துள்ள செட்டிநாடு மசாலா தூளை சேர்த்து, தேவைக்கேற்ப தண்ணீரும் சேர்த்து அடிபிடிக்காமல் கிளறவும். 5 முதல் 10 நிமிடங்கள் கழித்து இறக்கி வைக்கவும்.

Related posts

ரம்ஜான் ஸ்பெஷல்: ஸ்பைசி சிக்கன் ஆப்கானி

nathan

புதினா இறால் குழம்பு

nathan

சுவையான முட்டை பட்டர் மசாலா

nathan

முப்பதே நிமிடத்தில் சூப்பரான சிக்கன் -தேன் சூப் செய்ய தெரியுமா? -ரம்ஜான் ஸ்பெஷல்!!

nathan

மட்டன் தலைக்கறி வறுவல்

nathan

நண்டு மசாலா

nathan

மீன் மிளகு மசாலா செய்வது எப்படி?

sangika

சுவையான கிராமத்து மீன் குழம்பு

nathan

ப்ரைடு சிக்கன்

nathan