26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
jnkjk
அழகு குறிப்புகள்

முயன்று பாருங்கள் அனைத்து சரும பிரச்சனைகளுக்கும் தீர்வு தரும் உருளைக்கிழங்கு!!

சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகள், கருவளையம், வெயினால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு, வறண்ட சருமத்திற்கு, கரும்புள்ளிகளுக்கு, ஆயில் சருமத்திற்கு என அனைத்து பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் ஒரே பொருள் உருளைக்கிழங்கு.

சிலருக்கு சருமத்தில் எப்போதும் எண்ணெய் வழிந்துகொண்டே இருக்கும். இதன் காரணமாக சருமம் பொலிவிழந்து காணப்படும். இதற்கு உருளைக்கிழங்கு தீர்வாகிறது.

உருளைக்கிழங்கு சாறுடன் இரண்டு ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து கொள்ளவும், பின்பு இவற்றை ஒரு காட்டன் பஞ்சியில் நனைத்து முகத்தில் தடவ வேண்டும். பிறகு 20 நிமிடம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ, முகத்தில் இருக்கும் தேவையற்ற எண்ணெய் பசை நீங்கி, சருமம் பொலிவுடன் காணப்படும்.

உருளைக்கிழங்கை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, அவற்றை குளிர்ந்த நீரில் ஒரு மணிநேரம் வரை ஊறவைக்கவும். பின்பு இந்த உருளைக்கிழங்கு துண்டுகளை உங்கள் கண்களில் வைத்து 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ கருவளைய பிரச்சனை சரியாகும்.

சிலருக்கு வெயிலின் தாக்கத்தினால் ஏற்படும் கருமையை போக்க, உருளைக்கிழங்கு சாறு எடுத்து, அதை காட்டனில் நனைத்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவினால் வெயில் தாக்கத்தினால் ஏற்பட்ட கருமை நீங்கி, சருமம் பொலிவுடன் காணப்படும்.
jnkjk
சிலருக்கு கண்களில் வீக்கங்கள் ஏற்படும் அப்போது உருளைக்கிழங்கை அரைத்து, அதனுடன் இரண்டு ஸ்பூன் வெள்ளரிச்சாறு மற்றும் ஒரு ஸ்பூன் ஆலிவ் ஆயில் ஆகியவற்றை நன்றாக கலந்து முகத்தில் தடவி 30 நிமிடம் வரை வைத்திருந்து, பின்பு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ கண்களில் ஏற்படும் வீக்கங்கள் சரியாகும்.

உருளைக்கிழங்கு சாறுடன், இரண்டு ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து கரும்புள்ளி இருக்கும் இடத்தில், இந்த கலவையை தடவி 15 நிமிடம் வரை வைத்திருந்து, பிறகு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ கரும்புள்ளி பிரச்சனை சரியாகும்.

Related posts

கால்களை அழகாக்க இத செய்யுங்கள்!…

sangika

ஆண்கள் ஏன் மனைவியரை விட்டு விலகிப் போக ஆரம்பிக்கிறார்கள் என்று தெரியுமா..!

sangika

சருமத்துக்கு எளிமையான ஃபேஸ்பேக்! இதோ உங்களுக்காக டிப்ஸ்.!

nathan

உடலை எப்போதும் உற்சாகமாக வைத்திருக்க சில எளிய வழிகள்.

nathan

பனிக்கால தொந்தரவுகளுக்கு துளசி!

nathan

அழகு குறிப்புகள்,அழகுடன் திகழணுமா?,beauty tips tamil

nathan

கை விரல்களை கவணியுங்கள்!

nathan

சர்வைவரில் ஆபத்தில் சிக்கிய போட்டியாளர்! அலறி ஓடி ஆக்‌ஷனில் குதித்த அர்ஜூன்…

nathan

புரதச்சத்து மாவினை உட்கொள்வதால் கிடைக்கும் பிற நன்மைகளை பற்றியும், மற்றும் நீங்கள் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பற்றியும் அறிந்து கொள்ள மேலும் படியுங்கள்.

nathan