25.5 C
Chennai
Sunday, Dec 22, 2024
tryrtyrt
அழகு குறிப்புகள்

முயன்று பாருங்கள்…பெண்களுக்கு முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை அகற்ற உதவும் கஸ்தூரி மஞ்சள், கோரைக்கிழங்கு பொடி

முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை அகற்றும் கஸ்தூரி மஞ்சளின் பயன் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

பெண்களுக்கு முகத்தில் உள்ள தேவையற்ற முடியை நீக்க கஸ்தூரி மஞ்சள், கோரைக்கிழங்கு இரண்டும் வரப்பிரசாதம். இவற்றை எப்படி பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

வழவழப்பான, பொலிவுடன் கூடிய முகத்தை பெறத்தான் விதவிதமான கிரீம்கள் சந்தைக்கு விற்பனைக்கு வந்த வண்ணம் உள்ளது. ஆனால் ஹார்மோன் குளறுபடி மற்றும் பிற காரணங்களால் பெண்களில் சிலருக்கு முகத்தில் முடி வளர்வது ஒரு பெரிய பிரச்சினையாக இருக்கும். அதனை எப்படி நீக்குவது என்று பலவிதமான கிரீம்களை வாங்கி உபயோகப்படுத்தினாலும் ஒரேயடியாகத் தீர்ந்து விடாது.

இயற்கை பொருட்களில் கஸ்தூரி மஞ்சள், கோரைக்கிழங்கு இரண்டும் வரப்பிரசாதம்.கஸ்தூரி மஞ்சள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இதனை வாங்கி அத்துடன் கொஞ்சம் பச்சைப் பயறு சேர்த்து வெயிலில் உலர்த்தி மெஷினில் கொடுத்து நைசாக அரைத்து வைத்துக்கொண்டு தினமும் குளிக்கும்போதும், முகம் கழுவும்போதும் முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து தேய்த்துக் குளிக்கவேண்டும்.

உடனடியாக முடி நீங்கி விடாது, தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் மட்டுமே நாளடைவில் போகும். ஆனால், புதிதாக முடிகளை வளரவிடாது, சந்தையில் கிடைக்கும் ஹேர் ரிமூவர் லோஷன்களைப் போட்டு, இந்த தேவையற்ற முடிகளைப் போக்கிய பின்னர், தினந்தோறும் விடாமல் கஸ்தூரி மஞ்சள் தூளை முகத்தில் பூசிக் குளித்து வந்தால், நல்ல வழுவழுப்பான முக அழகைப் பெறலாம்.
tryrtyrt
தோல் நோய்கள் தீர கஸ்தூரி மஞ்சள் தூளை வெந்நீரில் குழைத்து மேல் பூச்சாகப் பூசிவர வேண்டும் அல்லது கஸ்தூரி மஞ்சள், உலர்ந்த துளசி பவுடர் சம அளவாகச் சேர்த்து, அரைத்து, உடலில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து, வெந்நீரில் குளிக்க வேண்டும்.

நாட்டு மருந்து கடைகளில் கோரைக்கிழங்கு பொடி கிடைக்கும் அதனை வாங்கி வந்து கை, கால்களில் நீரில் கலந்து தேய்த்து வந்தால் தேவையற்ற முடிகள் நீங்கும். நாளடைவில் முடி வளர்ச்சி மட்டுப்படும்.

Related posts

பெண்களே நீங்கள் பயன்படுத்தும் தண்ணீர் எப்படிப்பட்டது!…

sangika

அடேங்கப்பா! சன் மியூசிக் Vjவை திருமணம் செய்த மகேஷின் மகளா இது

nathan

முகம் வழுவழுப்பாக இருக்க!

nathan

லி‌ப்‌ஸ்டி‌க் வா‌ங்கு‌‌ம் போது

nathan

மழைக்காலத்தில் உடல் பராமரிப்பு

nathan

பொங்கல் வாழ்த்து கூறிய பிரித்தானிய பிரதமர்! தமிழர்கள் அனைவருக்கும் நன்றி… வீடியோ..

nathan

உட்காரும் இடத்தில் பருக்கள் உண்டாக இவை தான் காரணம்!…

sangika

நயன்தாராவிற்கு நடிகை நமிதாவிற்கும் இடையே சண்டையா..

nathan

கட்டியணைத்து கதறும் தங்கை! அக்கா தங்கை பாசத்திற்கு நிகர் இந்த உலகில் எதுவும் இல்லை!

nathan