வெயில் காலத்தில் மட்டுமே உபயோகிக்க வேண்டியதல்ல சன் ஸ்கிரீன். குளிர்காலத்திலும் சூரியக் கதிர்களின் தாக்கம் இருக்கும் என்பதால் அந்த நாள்களிலும் சன் ஸ்கிரீன் பயன்படுத்த வேண்டியது அவசியம்.
சன் ஸ்கிரீன் உபயோகிப்பது மட்டுமே வெயிலின் தாக்கத்திலிருந்து சருமத்தைக் காப்பாற்றும் என நினைக்க வேண்டாம். அது ஓரளவுக்கு சருமத்துக்குக் கேடயம்போலச் செயல்படும். முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை நேரடி வெயிலில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும். தினமும் மேக்கப் செய்துகொள்ளும் பழக்க முள்ள பெண்கள் பெரும்பாலும் சன் ஸ்கிரீன் பற்றிக் கவலைப்படுவதில்லை. அவர்கள் மேக்கப் போடுவதற்கு முன் சன் ஸ்கிரீன் பயன் படுத்துவது பாதுகாப்பானது.
முகத்துக்கு மட்டுமன்றி, கழுத்து, கைகால்கள், முதுகு என வெயில் படும் எல்லாப் பகுதிகளிலும் சன் ஸ்கிரீன் தடவிக்கொள்ள வேண்டும். இவ்வளவு ஏன். உதடுகளுக்குக்கூட சன் ஸ்கிரீன் தேவை. வெயில் பட்டால் உதடுகளும் கறுத்துப்போகலாம். எனவே, அல்ட்ரா வயலட் பாதுகாப்புள்ள லிப் பாம் பயன்படுத்துங்கள்.