pimple
முகப் பராமரிப்பு

உங்களுக்கு தெரியுமா மழைக்காலத்துல ஏன் அதிகமாா பரு வருது?அப்ப இத படிங்க!

எண்ணெய் சருமம் கொண்டவர்களுக்கு ஈரப்பதம் காரணமாக சருமத்தில் எண்ணெய்த்தன்மை அதிகமாகக் காணப்படும். இதனால் சருமத்தில் பல்வேறு தொந்தரவுகள் ஏற்படக்கூடும்.

அதில் குறிப்பாக ஏற்படுக்கூடிய ஒரு தொந்தரவு பருக்கள். இவற்றிற்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாத பட்சத்தில் முகத்தில் தழும்புகள் ஏற்படக்கூடும். இவற்றைப் போக்குவதில் மருத்துவ சிகிச்சையை நம்பிக் கொண்டிருப்பதைக் காட்டிலும் எளிய முறையில் வீட்டில் இருக்கக் கூடிய பொருட்களைக் கொண்டு சிகிச்சை அளிப்பதால் சிறந்த முறையில் பருக்களைப் போக்க முடியும். பருக்கள் இல்லாத சருமம் பெற இந்த ளிய முறைகளைப் பின்பற்றுங்கள்.

pimple1

வேப்பிலை பருக்கள் பற்றிய சிந்தனையில் மூழ்கி உங்கள் தூக்கம் தொலைகிறதா? கவலையை விடுங்கள். எளிய மற்றும் சிறந்த முறையில் பருக்களைப் போக்க ஒரு வழி வேப்பிலை. வேப்பிலையை மட்டும் விழுதாக அரைத்து உங்கள் முகத்தில் தடவுவதால் பருக்கள் மறையலாம். அல்லது வேப்பிலை விழுதுடன் சேர்த்து ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் பால் ஆகியவற்றை கலந்து ஒரு முகத்தில் தடவலாம். தொடர்ந்து சில நாட்கள் இதனை பின்பற்றுவதால் பருக்களுக்கு நிரந்தரமாக குட் பை சொல்ல முடியும்.

நீராவி நீராவி பிடிப்பதை வழக்கமாக்கிக் கொள்வதால் பருக்களை சிறந்த முறையில் விரட்ட முடியும். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம், தினமும் சிறிது நேரம் ஸ்டீமர் கொண்டு முகத்திற்கு நீராவி காட்டுவது மட்டுமே. இப்படிச் செய்வதால் முகத்தின் துளைகள் திறக்கப்பட்டு, பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் குறையும். இன்னும் சிறந்த விளைவுகளைப் பெற அந்த நீரில் வேப்பிலை சிறிதளவு சேர்த்துக் கொள்ளலாம்.

பழுப்பு சர்க்கரை பருக்களை மென்மையான முறையில் போக்க பழுப்பு சர்க்கரை ஒரு சிறந்த தேர்வாகும். ஒரு ஸ்பூன் தேன் மற்றும் மூன்று ஸ்பூன் பழுப்பு சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ளவும். ஒரு ஸ்க்ரப் போல் இந்த விழுதை முகத்தில் தடவி பதினைந்து நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவவும்.pimplenewfeatimage

உருளைக் கிழங்கு உங்கள் பருக்கள் தொடர்பான தொந்தரவுகளுக்கு நீங்கள் உருளைக் கிழங்கைப் பயன்படுத்தலாம். உருளைக் கிழங்கை பயன்படுத்துவதில் இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று அதனை மெலிதாக நறுக்கி பயன்படுத்தலாம் அல்லது உருளைக் கிழங்கு சாறு தயாரித்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவலாம். இப்படி செய்வதால் உங்கள் பருக்கள் விரைவில் மறையும். மது அருந்துவது மற்றும் காரசாரமான உணவுகள் சாப்பிடுவது ஆகியவற்றை தவிர்ப்பது கூட மழைக் காலங்களில் பருக்கள் தொந்தரவுகளைக் குறைக்கும் ஒரு வழியாகும்.

இயற்கையான வழி இயற்கையான முறையில் பருக்களைப் போக்க எளிய வழிகள் உள்ளன. பழங்கள் மற்றும் காய்கறிகள் உட்கொள்வது, போதுமான அளவு தண்ணீர் பருகுவது போன்றவை அவற்றுள் சில. காலையில் காபி பருகும் பழக்கம் உள்ளவர்கள் காபிக்கு மாற்றாக மூலிகை தேநீர் தயாரித்துப் பருகலாம். இதனால் பருக்கள் தொடர்பான தொந்தரவுகள் குறையும். ஆகவே பருக்கள் பிரச்சனை இல்லாத ஒரு மழைக் காலத்தை வரவேற்க தயாராக இருங்கள் வாசகர்களே!

Related posts

முகத்துக்கு ஆவி பிடிக்கலாமா?

nathan

இந்த வீடியோவில் ஒரு சூப்பரான நைட் கிரீம் தயாரிக்கும் முறையை பற்றி பார்க்கலாம்.

nathan

இதோ சூப்பர் டிப்ஸ்! முகப்பருவை நிரந்தரமான போக்கனுமா?

nathan

முகத்தில் சேர்ந்துள்ள அழுக்குகளை நீக்க இதை செய்யுங்கள்!…

sangika

உங்க முகம் எப்போதும் எண்ணெய் வழிந்தவாறு அசிங்கமாக இருக்கிறதா?

nathan

இயற்கையான முறையில் முகத்தை பிரகாசமாக்க வேண்டும் என்றால் இத செய்யுங்கள்!…

nathan

முகத்தில் உள்ள முகப்பருக்கள் முதல் கரும்புள்ளிகள் வரை அனைத்துமே குணமாக முயன்று பாருங்கள்!….

sangika

முகம் பளிச்சிட சில டிப்ஸ்

nathan

20 நிமிடத்தில் கருமை நீங்கி முகம் ஜொலிக்க வேண்டுமா? அப்ப இத செய்யுங்க.

nathan