25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
guiui
சரும பராமரிப்பு

பல்லை ஆரோக்யமாக வைப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

சிறு வயதில் இருந்தே பல்லை ஆரோக்யமாக வைப்பதில் கவனம் செலுத்த வேண்டும். பல்லின் தன்மைக்கு தகுந்த பிரஷ்ஷை தேர்வு செய்வதும் அவசியம். குளிர்ச்சியான மற்றும் அதிக சூடான பொருட்கள் சாப்பிடுவதை தவிர்க்கலாம்.

பல்லின் இடுக்குகளில் உணவுப் பொருள்கள் படியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு சிக்கிக் கொண்டால் வாய் கொப்பளித்து உடனடியாக பல்லை சுத்தம் செய்ய வேண்டும்.
சத்துக் குறைபாடான உணவுகள் மற்றும் உடலில் ஏற்படும் சர்க்கரை உள்ளிட்ட மற்ற நோய்களின் காரணமாகவும் பல் ஆரோக்கியம் விரைவில் கெட்டுவிட வாய்ப்புள்ளது.
பல் சொத்தை பெரிதாக வளர்ந்து பல்லின் வேரை தாக்கும்போது தான் வலி ஏற்படுகிறது. இந்த வலியை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டால் பல்லின் வேர்ப்பகுதி முழுவதும் பாதிக்கப்பட்டு பல்லை முழுமையாக இழக்கும் நிலை ஏற்படும்.
guiui
பூண்டு, வெங்காயத்தை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
ஆலமர விழுதுகளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி காய வைக்கவும். இத்துடன் படிகாரம் சேர்த்து அரைத்து வைத்து கொண்டு, அதில் பல் துலக்கினால் பல் தொடர்பான பாதிப்புகள் குறையும்.
ஆலமர பட்டையில் கஷாயம் வைத்து வாய் கொப்பளித்தால் பல் வலி குறையும். நல்லெண்ணெய்யை சிறிது வாயில் ஊற்றி அடக்கி இருபது நிமிடம் கழித்து வாய் கொப்பளித்து துப்பினால் வாயில் ஏற்படும் கிருமித் தொற்று குணமாகும்.

கிராம்பு, கொட்டைப்பாக்கு இரண்டையும் சம அளவில் எடுத்து பொடி செய்து பல் துலக்கினால் பல்வலி குணமாகும். ஈறுகள் பலப்படும்.

கொய்யா இலையை மென்று தின்று வெந்நீரில் வாய் கொப்பளித்தால் பல் கூச்சம் விலகும். கொய்யா இலை, கருவேலம்பட்டை, உப்பு மூன்றையும் சம அளவில் எடுத்து பொடி செய்து பல் துலக்கி வந்தால் பல் வலி உள்ளிட்ட அனைத்து நோய்களும் விலகும்.

Related posts

வேனிட்டி பாக்ஸ்: பாடி வாஷ்

nathan

நீங்கள் முதுகையும் கொஞ்சம் கவனிங்க!

nathan

இதை முயன்று பாருங்கள்..வாழைப்பழத்தை வைத்து சருமத்தை அழகாக்குவது எப்படி…?

nathan

சரும சொர சொரப்பை போக்கும் சர்க்கரை ஸ்கரப்

nathan

வெளியே அழகு… உள்ளே ஆபத்து!

nathan

அக்குள் கருமையை போக்கும் அரிசி ஸ்கரப்

nathan

நிரந்தமான முடியை நீக்க வேக்சிங் செய்வதே சிறந்தது

nathan

சரும வறட்சியை போக்கும் பீர் ஃபேஷியல்

nathan

வயதானலும் அழகை கூட்ட வழிகள்

nathan