25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
uyiuiui
அறுசுவைசைவம்

கொண்டைக்கடலை மசாலா…

நாண், சப்பாத்தி, பூரிக்கு தொட்டுகொள்ள கொண்டைக்கடலை மசாலா செம சைட்டிஸ்ஸாக இருக்கும். சரி இந்த ரெசிபியை எப்படி செய்வது. இதோ உங்களுக்காக!

தேவையான பொருட்கள்: கொண்டைக்கடலை – 200 கிராம், வெங்காயம், தக்காளி – தலா 2, சாட் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், இஞ்சி, பூண்டு விழுது – 1 டீஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, தேங்காய்ப் பால் – முக்கால் கப், கொத்தமல்லி – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கொத்தமல்லி, வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். கொண்டைக்கடலையை நன்றாக கழுவி ஊற வைத்துக் வேக வைத்து தனியே எடுத்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு போட்டு வெடித்ததும் வெங்காயம் போட்டு வதக்கவும்.
uyiuiui
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். அடுத்து அதில் தக்காளி சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும். தக்காளி நன்றாக வதங்கியதும் சாட் மசாலாத்தூளை சேர்த்து நன்கு கலந்து, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்துக் கலக்கவும்.

ஒரு கொதி வந்ததும் தேங்காய்ப் பால் விட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, கொதிக்க விடவும். நல்ல வாசனை வந்ததும், வேக வைத்த கொண்டைக்கடலையைச் சேர்த்து, லேசாகக் கொதிக்க வைத்து கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.

Related posts

சிக்கன் தோசை செய்வது எப்படி?

nathan

காலிபிளவர் பொரியல்

nathan

அரிசி மாவில் காய்கறிரொட்டி செய்முறை…..

sangika

காளான் பொரியல்

nathan

சைனீஸ் ஃபிரைட் ரைஸ்

nathan

ஐயங்கார் எள் சாதம் செய்வது எப்படி

nathan

சிம்பிளான… காளான் கிரேவி

nathan

காலிப்ளவர் பட்டாணி பனீர் மசாலா

nathan

சூப்பரான ஹைதராபாத் வெஜ் பிரியாணி

nathan