ஆல்கஹால் குடிப்பது உடலின் ஸ்டெம்செல்களை தாக்கி மரபணுரீதியான பாதிப்பை ஏற்படுத்துவதோடு புற்றுநோயை உண்டாக்கும் காரணியாகவும் உள்ளது.
?பேச்சு, பார்வை, ஒத்திசைவு, சிந்தனை, நடத்தை இவையெல்லாமே மூளையிலுள்ள நரம்பு செல்களில், அதாவது முக்கிய செல்களில், நடக்கும் படுசிக்கலான இரசாயன தொடர் வினைகளையே சார்ந்திருக்கின்றன.
ஆல்கஹால் மூளையை அடைந்ததும், உடனடியாக உடலின் செயல்திறன் மற்றும் நடத்தையில் மாற்றம் ஏற்படும். நினைவுத் தடுமாற்றம் நினைவு இழப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
ஆல்கஹால் தொண்டை அல்லது உணவுக்குழாயில் புண் மற்றும் புற்றுநோயை ஏற்படுத்தும். வயிற்று சுவரைப் பாதித்து வயிற்றுப் புண்களை ஏற்படுத்தும்.
?தோளிலும் காலிலும் தசை நார் இழப்பு ஏற்படும்உடலில் சர்க்கரை அளவினை சீர்படுத்தும் கணையத்தை பாதிக்கச் செய்யும்.
உயர் ரத்த அழுத்தம், சீரற்ற இதயத்துடிப்பு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதனால் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
? மது குடிப்பதினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு கல்லீரல் இறுக்க நோய் ஏற்படுகிறது. பின்னர் கல்லீரல் புற்று நோய் ஏற்படுவதற்கும் காரணமாகிறது.
? மது அருந்துபவர்களுக்கு உடலில் நோய் எதிர்ப்பு தன்மை குறைவதால் தொற்று நோய்கள் வந்தால் எளிதில் தீராது.