இன்றைய கால கட்டத்தில் சமூக வலைத்தளங்களில் வர கூடிய பலவித சேலஞ்களுக்கு அளவே இல்லாமல் போய் விட்டது. எதற்கெடுத்தாலும் ஒரு சேலஞ்சை போட்டு விட வேண்டியது. பிறகு ஓவர் நைட்டில் அந்த சேலஞ்ச் புகழும் பெற்று விடுகிறது. கீக்கி சேலஞ்ச், 10 இயர் சேலஞ்ச் போல இப்போது ஒரு புதுவித சேலஞ்ச் சமூக வலை தளங்களில் உலவி கொண்டிருக்கிறது.
குறிப்பாக முகநூல், இன்ஸ்டாகிராம், யூ-டியூப் போன்றவற்றில் இந்த சேலஞ்ச் தான் தற்போது டாப் ட்ரெண்டிங்! அதுவும் இந்த சேலஞ்ச் பெண்களை மட்டுமே அதிக அளவில் ஈர்த்து வருகிறது என்கிற தகவலும் வெளியாகி உள்ளது.
இது என்னப்பா புதுசா இருக்கேனு யோசிக்கிற பலருக்கும் இதனை பற்றி தெரிந்து கொண்டால் ஆச்சரியப்படுவீர்கள். இனி 60 நொடி சேலஞ்ச் பற்றி முழுவதுமாக தெரிந்து கொள்ளலாம்.
புதுசா..தினுசா..!
ட்ரெண்டிங் என்கிற ஒற்றை வார்த்தை தான் இன்று நெட்டிசன்கள் இடையே பெரிதும் பயன்படுத்தும் வார்த்தையாகும்.
ஏதாவது ஒரு மீம்ஸ், போட்டோ அல்லது வீடியோ போட்டு விட்டு இது தான் இப்போதைய ட்ரெண்ட் என்கிற மைண்ட் செட்டப்பையும் அவர்களே மக்களிடம் பரப்பியும் விடுகின்றனர்.
பெண்களுக்கு மட்டுமா.?!
இந்த புதுவித சேலஞ்ச் பெரும்பாலும் பெண்கள் மட்டுமே செய்து வருகின்றனர். இதனால் பல ஃபாலோவர்களும் கிடைப்பதாக இந்த பெண்கள் தங்களது பக்கத்தில் பதிவிட்டு உள்ளனர். இதனை 60secondrule என்கிற பெயரில் சேலஞ்சாக செய்து வருகின்றனர்.
என்ன சேலன்ச்..?
60secondrule என்பது இது வரை இல்லாத புதுமையான ஒரு சேலஞ்சாக பெண்களால் கொண்டாடப்படுகிறது.
அதாவது 60 நொடி வரை தங்களது முகத்தை சோப் அல்லது ஃபேஸ் வாஷ் பயன்படுத்தி கழுவி வர வேண்டும். இதை குறைந்த பட்சம் 1 வாரம் முதல் அதிக பட்சம் எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் செய்து வரலாம்.
ப்ரூப்ஃ
இந்த 60secondrule சேலஞ்ச் என்பது முகத்தை கழுவுகிற சாதாரண சேலஞ்ச் தான். ஆனால், இதனால் பலவித பயன்கள் உண்டாகி உள்ளது என இந்த பெண்கள் பதிவாக போட்டும் உள்ளனர்.
1 நிமிடம் வரை எதற்காக இந்த பெண்கள் இப்படி செய்கின்றனர் என ஆரம்பத்தில் பல ஆண்களுக்கு குழப்பமாகவே இருந்தது.
காரணம்..?
இந்த 60secondrule என்கிற சேலஞ்சை செய்வதற்கு மிக முக்கிய காரணம் முகம் தான். முகத்தை 60 நொடிகள் வரை கழுவினால் சருமத்தில் உள்ள எல்லாவித பாதிப்புகளும் படிப்படியாக குறையும் என ஒரு அழகியல் நிபுணர் கூறிய பின்னர் தான் இந்த சேலன்ச் வைரலாக பரவியது.
பெண்கள் மட்டுமா..?
இந்த சேலன்ச் ஆண் பெண் என்கிற பாகுபாட்டில் அந்த அழகியல் நிபுணர் சொல்லவில்லை.
முகத்தை இது போன்று 60 நொடிகள் வரை தினமும் கழுவினால் யாராக இருந்தாலும் முகத்தில் இருக்கும் பருக்கள், கரும்புள்ளிகள், அழுக்கள் போன்றவை மிக விரைவில் நீங்கி விடுமாம்.
எப்போது செய்ய வேண்டும்?
இந்த சேலஞ்சை பெரும்பாலும் ஒரு நாளின் தொடக்கத்தில் அல்லது அந்த நாளின் முடிவில் செய்யலாம்.
இந்த 60secondrule பல பெண்களுக்கு பெரிதும் உதவி உள்ளதாக கூறியுள்ளனர். சில ஆண்களும் இப்போது இந்த வகை சேலஞ்சில் பங்கு பெற்று வருகின்றனர்.