iyiujilklp
சரும பராமரிப்பு

பிரசவ தழும்புகளை மறைய இயற்கையாக மறைய…

எலுமிச்சையானது தழும்புகளை மறைய வைக்கும் முக்கியமான பொருளாகும். எலுமிச்சையை சின்ன சின்ன துண்டுகளாக கட் செய்து வைத்துக் கொண்டு சிசேரியன் செய்த காயத்தழும்பின் மீது தேய்க்கவும்.

6 மாதங்கள் வரை தொடர்ந்து இவ்வாறு செய்து வர தழும்புகள் மறைந்து விடும். எலுமிச்சை சாறு காய்ந்த உடன் 5 நிமிடத்திற்குள் குளிர்ச்சியான தண்ணீரை விட்டு கழுவிவிடுங்கள். வறண்ட சருமத்தினர் எலுமிச்சையை தவிர்க்கவும்.

• தக்காளியை தோல் உறித்து அதை மிக்ஸியில் போட்டு நன்கு அரைக்கவும். அந்த பேஸ்ட்டை எடுத்து சிசேரியன் தழும்பு உள்ள பகுதிகளில் அப்ளை செய்யவும். இரவு நேரத்தில் தக்காளி சாஸ் அப்ளை செய்து விட்டு காலையில் எழுந்து குளிர்ந்த நீரில் கழுவி விடலாம். தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு இந்த தக்காளி சாஸ் தடவி வர பலன் தெரியும்.
iyiujilklp
• சோற்றுக்கற்றாழை மிகச்சிறந்த இயற்கை மருந்தாகும். சோற்றுக்கற்றாழையை நன்றாக உரித்து அதன் ஜெல்லினை எடுத்து காய தழும்புள்ள இடத்தில் தடவலாம். இரவில் தடவி வைத்திருந்து பகலில் குளிர்ந்த நீரைக் கொண்டு கழுவிவிட்டு நன்றாக துடைத்து விடவும். அதன் பின்னர் பேபி லோசனை அந்த இடத்தில் அப்ளை செய்யலாம். தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு இவ்வாறு செய்து வர தழும்புகள் மறையும்.

• ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீரில் சிறிதளவு ஆப்பிள் சிடர் வினிகர் கலந்து சிசேரியன் தழும்பு உள்ள இடத்தில் பூசவும். 20 நிமிடம் கழித்து காய்ந்த உடன் அதன் மேல் வெதுவெதுப்பான நீரை ஊற்றி கழுவவும். இது சில மாதங்களிலே காயத்தழும்பை மறையச் செய்து விடும்.

Related posts

முகத்தில் உள்ள அழுக்குகளை முற்றிலும் வெளியேற்ற உதவும் பொருட்கள்!

nathan

பெண்கள் முகத்தில் முளைத்திருக்கும் முடிகளை நீக்க…

nathan

சீன பெண்கள் அழகாக இருப்பதற்கான 6 ரகசியங்கள்!

nathan

சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க வேண்டுமா?

nathan

நீங்கள் உருளைக்கிழங்க இப்படி பயன்படுத்தி பாத்திருக்கீங்களா?அப்ப இத படிங்க!

nathan

கவலை வேண்டாம். இதப்படிங்க … ‘கருவளையம்’ இல்லாம பாத்துக்குறது ரொம்ப முக்கியம்!!!

nathan

பால் பவுடரை வெச்சே எப்படி உங்க கலரை பளீச்னு பால் போல மாத்தறதுன்னு பார்க்கலாம்…

sangika

மஞ்சளை எப்படியெல்லாம் பயன்படுத்தினால், என்ன பிரச்சனை நீக்கும்……

sangika

கச்சிதமாக இருப்பதே அழகு!

nathan