29.8 C
Chennai
Sunday, Nov 17, 2024
sf
கால்கள் பராமரிப்பு

மிருதுவான பாதங்களை பெற இதோ சூப்பர் டிப்ஸ்..!!இத படிங்க!

பொதுவாக சில பெண்களுக்கு முகம், கைகள் வெள்ளையாக காணப்படும். ஆனால் கால்கள் மட்டும் கருப்பாக காணப்படுவது உண்டு.

அதுமட்டுமின்றி சிலருக்கு கருமை படர்ந்த கணுக்கால் வெடிப்பு நிறைந்த பாதம், பழுப்பேறிய நகங்கள், செருப்பு அணிவதால் உண்டான கருமை என பாதங்கள் பலருக்கு பிரச்சனையாகவும் காணப்படும்.

இதற்காக பலரும் நேரத்தை செலவழித்து பியூட்டி பாலர்களுக்கு சென்று பெடிகியூர் செய்வதே வழக்கமாக வைத்திருப்பார்கள்.

இதனை தவிர்த்து எந்த செலவும் இல்லமால் வீட்டில் எளிய முறையில் பாதங்களை வெள்ளையாக்க முடியும். தற்போது அதில் சிலவற்றை பார்ப்போம்.

பாதம் உள்ளங்கால் வறண்டு இருந்தால் 4 சொட்டு கிளிசரின் 4 சொட்டு எலுமிச்சைச்சாறை கலந்து தூங்கச் செல்லும்போது நகம் விரல்கள் பாதம் முழுவதும் தடவி காய்ந்தவுடன் சாக்ஸ் அணிந்து உறங்கவும்.

பாலில் தோய்த்தெடுத்த பஞ்சு கொண்டு நகங்களில் தேய்த்து வந்தால் நகம் உடையாமலும் மினுமினுப்பாகவும் இருக்கும்.

குளிப்பதற்கு முன் கஸ்தூரி மஞ்சளுடன் வெண்ணெயைக் கலந்து நன்றாகத் தேய்த்து வந்தால் சொரசொரப்பான பாதமும் மிருதுவாகி விடும்.

வெதுவெதுப்பான நீர் நிறைந்த பெரிய பாத்திரத்தில் ஷாம்பூ உப்பு மற்றும் ஒரு எலுமிச்சம்பழத்தின் சாறை விட்டு அந்த தண்ணீரில் சில நிமிடங்கள் பாதங்களை அமிழ்த்தி வைத்து ப்யூமிக் கல்லால் தேய்க்க வேண்டும். பிறகு குளிர்ந்த நீரால் கழுவி நன்றாக துடைத்து விடவும்.

சிறிது கற்றாழை ஜெல்லுடன் கடலை மாவைக் கலந்து மிக்ஸியில் அரைத்து 2 நாட்களுக்கு ஒருமுறை உள்ளங்கால் பாதம் கணுக்கால் முழுவதும் தேய்த்துக் கழுவ காயத்தால் ஏற்பட்ட தழும்புகள் கருமை மறைந்து சருமம் இயல்பான நிறத்துக்கு மாறும்.

நான்கு துளி விளக்கெண்ணெயை உள்ளங்கையில் எடுத்துக்கொண்டு நன்றாக சூடு பறக்க தேய்த்து 2 பாதங்களிலும் தேய்த்து வர பாதம் மினுமினுப்பாக மாறும்.

மாதம் இருமுறை வெள்ளை எள்ளை அரைத்து பாதம் நகங்களில் பத்துபோல் போட்டு கழுவவும். இது நகத்தின் இடுக்குகளில் படிந்துள்ள மண் அழுக்குகளை அகற்றி நல்ல பளபளப்பை கொடுப்பதுடன் வெடிப்பு வராமலும் பாதுகாக்கும்.

காலணிகளையும் சரியான அளவில் போட வேண்டும். தரமானதாகவும் சௌகரியமானதாக வாங்கி அணியும்போது பாதம் கருத்துப் போகாமல் இயல்பாய் இருக்கும்.sf

Related posts

வீட்டில் இருந்த படியே நீங்கள் பாதங்களை ரிலாக்ஸ் செய்வது எப்படி தெரியுமா?

sangika

ஹை ஹீல்ஸ் உபயோகிக்கும் பெண்களுக்கு ஏற்படும் முதுகு தண்டு தேய்மானம்

nathan

பாத அழற்சியை சரிசெய்ய சூப்பர் டிப்ஸ்…

nathan

ஆசைகளை எல்லாம் தீர்த்து வைக்கும் மிக சிறந்த நண்பனை கவனிக்காது விடலாமா?..

sangika

கால்களில் உள்ள சுருக்கங்ளை போக்க வேண்டுமா?

nathan

உங்க கால் விரல் நகம் இப்படி அசிங்கமா இருக்கா?அப்போ கட்டாயம் இத படிங்க!

nathan

பெடிக்கியூர் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்!….

sangika

கால்களின் அழகு மீன்களுக்கு தெரியும்

nathan

கால், கை முட்டிப்பகுதி கருமையை போக்கும் வழிகள்

nathan