29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
maxresdefault 1
கூந்தல் பராமரிப்புதலைமுடி சிகிச்சை

முடியில் ஸ்பிலிட் எண்ட்ஸ் (பிளவு முனைகள்) இதற்கான காரணங்களும் தீர்வுகளும் இதோ…

முடியில் ஸ்பிலிட் எண்ட்ஸ் (பிளவு முனைகள்) மிகவும் பொதுவான பிரச்சினைகளில் ஒன்றாகும். காலநிலை விளைவை தவிர்த்து தினசரி அடிப்படையில் நாம் செய்யும் சில விஷயங்களும் இந்த நிலைக்கு காரணமாக அமையலாம்.

நாம் வெயில் காலத்தில் தான் வெயில் அதிகமாக இருப்பதால் முடி வறட்சி அதிகமாகும்.
வெடிப்பு தோன்றும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் இந்த பிரச்சினை வெயில் காலத்தை விட குளிர்காலத்தில் மிக அதிகமாக உண்டாகிறது. இதற்கான காரணங்களும் தீர்வுகளும் இதோ…
தேன்: குளிர்காலத்தில் ஸ்பிலிட் எண்ட்ஸ் பிரச்சினைக்கு சிகிச்சை அழிக்கும் வழிகளில் ஒன்று தேன் ஆகும். தேனை தயிருடன் கலந்து அதை உங்கள் தலைமுடியில் தேய்க்க வேண்டும் குறிப்பாக முனைகளில். பின்னர் 20 நிமிடங்கள் கழித்து தண்ணீர் கொண்டு தலைமுடியை கழுவவும்.
maxresdefault 1
முட்டை: இது குளிர்காலத்தில் ஸ்பிலிட் எண்ட்ஸ் பிரச்சினைக்கு சிகிச்சை அழிக்கும் வழிகளில் ஒன்று ஆகும். ரோஸ்மேரியை முட்டையுடன் அடித்து அந்த கலவையை உங்கள் தலையில் மசாஜ் செய்து பிறகு ஷாம்பு போட்டு கழுவவும்.
பப்பாளி: ஒரு பழுத்த பப்பாளி பழத்துடன் தயிர் சேர்த்து அதை உங்கள் தலையில் போட்டு நிமிடம் கழித்து தலையை கழுவவும். வைட்டமின் ஏ பப்பாளியில் அதிக அளவில் இருப்பதால் தலைமுடிக்கு தேவையான போஷாக்கையும் இது வழங்குகிறது.
அவகேடோ : இது உங்கள் முடியை மென்மையாக்கும். ஆனால் நீங்கள் உங்கள் முடி ஈரமானதாக இருக்கிறதா என்று உறுதி செய்ய வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து தலைமுடியை கழுவவும்.

ஆலிவ் எண்ணெய்: ஆலிவ் எண்ணெய் தலைமுடியை ஈரப்பதமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. ஆலிவ் எண்ணெயை சூடாக்கி, அதை தலைமுடிதனில் மசாஜ் செய்யவும். அரை மணி நேரம் கழித்து ஷாம்பூவை பயன்படுத்தி தலைமுடியை கழுவவும்.
தேங்காய் எண்ணெய்:

இது சிறந்த குளிர்கால முடி பராமரிப்பு குறிப்புகளுள் ஒன்றாகும். எக்ஸ்ட்ரா வெர்ஜின் தேங்காய் எண்ணெய் அதிகப்படியான பிரச்சினைகள் இல்லாமல் அனைத்து முடி பிளவுகளையும் சரி செய்கிறது. இந்த எண்ணெய் முடியை, ஈரப்படுத்த மற்றும் முடியை வலுப்படுத்த உதவுகிறது.

Related posts

முடி உதிர்தல், வழுக்கை போன்றவற்றிற்கு இந்த குறிப்புகள் நன்கு உதவுகின்றன!…

sangika

பெண்களே தெரிஞ்சிக்கங்க…இயற்கை ஷாம்பு வீட்டிலே தயாரிக்கலாமே..

nathan

இதோ எளிய நிவாரணம்! தலையில் ஏற்படும் பருக்களை போக்குவதற்கான எளிய வீட்டு வைத்திய குறிப்புகள்!

nathan

முடியின் வேர்கள் வலுவடைய இயற்கை வைத்தியங்கள்

nathan

கூந்தலுக்கு ஊட்டச்சத்தையும் கொடுக்கும் செம்பருத்தி எண்ணெய்

nathan

கலாக்காய் பயன்படுத்துவதால் சருமம் மற்றும் கூந்தலுக்கு கிடைக்கும் நன்மைகள்!….

sangika

க்ரே முடியை இயற்கையாகவே கருமையாக்க உதவும் 5 கருப்பு தேநீர் ரெசிப்பி பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

nathan

பொடுகு தொல்லை இனி இல்லை, இந்த இயற்கை ஷாம்பூ பயன்படுத்துங்க!

nathan

உங்களுக்கு தெரியுமா மெலிந்த முடியை அடர்த்தியாக்கும் ஆயுர்வேத குறிப்புகள்…

nathan