28.9 C
Chennai
Wednesday, Jan 28, 2026
​பொதுவானவை

உங்கள் காதல் உண்மையானதா என்பதை அறிய வேண்டுமா?

 

உங்கள் காதல் உண்மையானதா என்பதை அறிய வேண்டுமா? காதல் என்ற சொல்லே புனிதமானது, அதனை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. காதல் என்பது ஆசை, அன்பு, நட்பு, காமம், விரகம் ஆகிய உணர்வுகளில் ஒன்று அல்லது இவைகள் அனைத்தும் கலந்த ஒரு உணர்வு என்று பெரியார் கூறியுள்ளார்.

தற்போது காதல் செய்து சந்தோஷமாக இருப்பவர்களை விட, காதல் தோல்வியில் கஷ்டப்படுபவர்களின் எண்ணிக்கை தான் அதிகம். இதற்கு காதலிக்கும் நபர் நம்மை உண்மையாக காதலிக்கிறாரா என்று தெரியாமல், கண்மூடித்தனமாக காதலில் விழுவது, காதலித்த பின்னர் அதை மறக்க முடியாமல் தவிப்பது… ஆகியவற்றை முக்கியக் காரணமாக சொல்லலாம். உங்களுடையது உண்மையான காதலா என்பதை கண்டறிய டிப்ஸ்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

* உண்மையாக காதலின் முதல் அறிகுறியே தியாகம் தான், காதலன்/காதலியின் சந்தோஷத்திற்காக எதையும் தியாகம் செய்வது.

* உங்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வதுடன், ஒவ்வொரு நாளும் ஸ்பெஷலாக உணரச் செய்வது, எந்த ஒரு சூழ்நிலையிலும் உங்களை விட்டுக் கொடுக்காமல் இருப்பார்கள்.

* உண்மையான காதலாக இருப்பின், நீங்கள் கஷ்டப்படுவதை அவர்களால் நினைத்துக் கூட பார்க்க முடியாது, நீங்களே எதிர்பாராதவிதமாக கஷ்டப்படுத்தினால் கூட அவர்கள் பதிலுக்கு உங்களை சந்தோஷப்படுத்தவே செய்வர்.

* உங்கள் காதலன் சத்தியம் செய்து கொடுத்து எந்த ஒரு சூழ்நிலையிலும் அதனை மீறாமல் இருந்தால் உங்கள் மீது உயிரையே வைத்துள்ளார்கள் என்று அர்த்தம்.

* கஷ்ட காலத்திலும் உங்களை விட்டு விலகிவிடாமல், ஆறுதலாக இருப்பது, உங்களை சந்தோஷமாக வைத்துக் கொள்ள நிறைய கஷ்டத்தை தாங்கிக் கொள்வார்கள்.

* உங்கள் காதலன் உங்களுக்கு பலவற்றை செய்தும், உங்களிடம் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் பழகி வந்தால், அந்த காதலை மிஸ் பண்ணிடாதீங்க!

Related posts

க‌ணவரை முந்தானையில் முடிந்து கொள்ள‍ பெண்களுக்கு ஆலோசனைகள்

nathan

நவராத்திரி ஸ்பெஷல் காராமணி – கேரட் சுண்டல்

nathan

பைனாபிள் ரசம்

nathan

கம்பு வெஜிடபிள் கஞ்சி

nathan

சத்தான சுவையான உளுந்து கஞ்சி

nathan

காரசாரமாக பாசிப் பருப்பு குருமா

nathan

Kamarajar History in Tamil | காமராஜர் வாழ்க்கை வரலாறு

nathan

கொழுப்பை கரைத்திடும் – கொள்ளு ரசம்

nathan

உங்கள் காதல் உண்மையானதா?

nathan