29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
840819 3591
தலைமுடி சிகிச்சை

தலையில் புண்கள் மற்றும் கட்டிகள் வருவதற்கான காரணம் என்ன? இந்த கைவைத்தியங்கள் சூப்பரா பலன் தரும்!!

தலைப்புண் வரும் இடத்தில் தோல் சிவந்து போய் நமைச்சல் ஏற்படுவதால் எந்த நேரமும் தலை சொரிந்து கொண்டு இருக்க தோன்றும். இதை குணப்படுத்த சரியான நேரத்தில் சிகிச்சை எடுத்துக்கொள்வது அவசியம்.
தலைப்புண்களுக்கு இயற்கையான முறையிலும் நிவாரணம் பெறலாம். இவை பல காரணங்களினால் மோசமான கொப்புளங்களாக சிரங்கு போல மாறிவிடும்.

இதற்கு முக்கிய காரணம் தலையின் தோலில் அதிகப்படியான எண்ணெய் சுரப்பது மற்றும் அழுக்கு தலை சருமத்தின் நுண்ணிய துளைகளை அடைத்துக் கொள்வதும் தான்.

தலைப்புண் ஏற்பட்டால் சிலர் இந்த கொப்புளங்களுக்கு எண்ணெய் தடவுவார்கள், இதனால் சற்றே வலி குறைந்தாலும், தலைப்புண் பிரச்சினையை அதிகமாக்கி விடும்.
தலைப்புண்ணுக்கு இஞ்சி சாறும் ஒரு நல்ல மருந்து. இது பாக்டீரியாக்களை கொள்கிறது. மேலும் சமையலுக்கு பயன்படுத்தும் பேக்கிங் சோடா தலைப்புண்களை குறைக்க உதவுகிறது. இது தலையில் மயிர்கால்களில் தடவி மசாஜ் செய்து கழுவி விட சீக்கிரம் குணமாகும்.

இஞ்சியை நன்றாக சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கி அரைத்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவி வர நிவாரணம் கிடைக்கும்.

தலைப்புண்களுக்கு வெந்தயத்தை இரவு முழுவதும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையில் தடவி 30முதல் 40 நிமிடங்கள் ஊறிய பிறகு கழுவி விடவும். இதை ஒவ்வொரு வாரமும் செய்ய நல்ல பலன் கிடைக்கும்.

சோற்றுக் கற்றாழை மற்றும் புதினா இலை இரண்டும் தலைப்புண்களுக்கு சிறந்த மருந்தாகின்றது. புதினா இலைகளை 15 நிமிடம், தண்ணீரில் கொதிக்க வைத்து அதில் சோற்று கற்றாழையை சேர்த்து அப்படியே தலைப்புண் பாதிக்கப்படுள்ள இடங்களில் தடவவும். தினமும் இப்படி செய்து வர ஒரிரு வாரங்களில் குணமாகும்.840819 3591

Related posts

தெரிஞ்சிக்கங்க…இளநரையா ? குழப்பமா இருக்கா? இந்த பதிவு உங்களுக்காக…!!!

nathan

உங்க முடியின் அடர்த்தி குறைகிறதா

nathan

உங்களுக்கு தலை முழுதும் பொடுகா? இதோ விரைவில் போக்கும் இயற்கை வைத்தியங்கள்!!

nathan

பாட்டி வைத்திய முறையை பயன்படுத்தலாம் வாங்க! இளநரை மற்றும் செம்பட்டையிலிருந்து முடி கருப்பாக மாற வேண்டுமா?

nathan

கோடை காலத்தில் கூந்தல் வறட்சியை போக்கும் இயற்கை வழிகள்

nathan

குளிக்காலத்துல உங்க தலைமுடி கொட்டாம இருக்கவும் அதிகமா வளரவும் என்ன செய்யணும் தெரியுமா?தெரிஞ்சிக்கங்க…

nathan

சூப்பர் டிப்ஸ் முகத்தை பொலிவாக்க பேஷியல் செய்ய குளிர்காலம் மிகவும் ஏற்றது

nathan

உங்க தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க வேண்டுமா? அப்ப இத படிங்க!

nathan

ஆண்களே, உங்களின் தலை முடி துர்நாற்றம் அடிக்கிறதா..? அப்ப இத படிங்க!

nathan