29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
அம்மை தழும்பை நீக்க
முகப் பராமரிப்பு

அம்மைத் தழும்புகளை செலவும் இல்லாமல் மறையச் செய்துவிட முடியும்.

அம்மை தழும்புகள் மறையாது என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அம்மைத் தழும்புகளை நம்முடைய வீட்டில் உள்ள சில எளிய பொருள்களை வைத்தே எந்த செலவும் இல்லாமல் மறையச் செய்துவிட முடியும். அது எப்படி என்று இங்கு காணலாம்.

அம்மை தழும்பை நீக்க

தேவையான பொருள்கள்

கசகசா – 2 ஸ்பூன்
கஸ்தூரி மஞ்சள் – 2 துண்டு
கறிவேப்பிலை – இரண்டு கொத்து

செய்முறை

கசகசாவை எடுத்து தண்ணீரில் நனடகு ஊறவைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் மஞ்சளையும் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளுங்கள். சிலர் கசகசாவை அப்படியே ஊற வைக்காமல் பொடியாக அரைத்துக் கொள்வார்கள். அப்படியும் செய்யலாம். ஆனால் ஊற வைத்துப் பயன்படுத்தினால் சருமத்தில் நன்கு இறங்கும்.

கறிவேப்பிலையையும் சிறிது தண்ணீர் தெளித்து நன்கு நைசாக அரைத்துக் கொள்ளுங்கள். அதில் ஏற்கனவே அரைத்து வைத்திருக்கும் கசகசா மஞ்சள் கலவையை அதில் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

பயன்படுத்தும் முறை

கசகசாவை முகத்தில் அப்ளை செய்து வந்தால் சருமம் பளபளக்கும். இந்த கலவையை அம்மை தழும்பு உள்ள இடத்திலோ அல்லது முகம் முழுவதுமோ அப்ளை செய்யலாம். குளிக்கச் செல்வதற்கும் அரை மணி நேரத்திற்கும் முன்பாக அப்ளை செய்துவிட்டு உலரவிட்டு, பின் குளிக்கலாம்.

இது காலையில் மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் என்பது கிடையாது. இரவு நேரத்தில் கூட பேஸ்பேக் போல இதை போட்டு உலரவிட்டு, பின் குளிர்ந்த நீரால் கழுவலாம். மிக வேகமாகவே முகத்தில் உள்ள அம்மை தழும்புகள் நீங்கிவிடும்.

பப்பாளி பால் கூட தழும்புகளைப் போக்குவதற்கு மிகச்சிறந்த மருநுதாகப் பயன்படும். இரவு தூங்கச் செல்லும் முன் பப்பாளி பாலை பஞ்சில் தொட்டு, தழும்புகள் உள்ள இடத்தில் வைத்துவிட்டு, பின் காலையில் வெதுவெதுப்பான நீரால் கழுவி விட வேண்டும். இதை அதிகமாகவும் பயன்படுத்தக் கூடாது.

Related posts

இந்த ஒரு காய் போதும் உங்க முகத்த கலராக்க… எப்படினு தெரிஞ்சிக்கணுமா..?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கருவளையங்களைப் போக்குவதற்கான சில எளிய இயற்கை வழிகள்!!!

nathan

முகத்தில் எண்ணெய் வடியுதா? இந்த ஃபேஸியல் செய்யலாம். !

nathan

உங்களுக்கு தெரியுமா சரும சுருக்கத்தை தடுக்கும் கேரட் பீட்ரூட் ஜூஸ்

nathan

நடுத்தர வயது பெண்களின் அழகு பராமரிப்புக்கு.

nathan

முக அழகுக்கு ஆதாரம்-ஆவாரம்..

nathan

முகம் உடனடியாக ஜொலிக்க இந்த 5 வழிகளை யூஸ் பண்ணுங்க !!

nathan

முகம் பார்க்க மிகவும் வறண்டு காணப்படுகிறதா..? அப்போ இத செய்யுங்கள்!…

sangika

தெரிஞ்சிக்கங்க…மீசை போல் உதட்டிற்கு மேல் வளரும் முடியை நீக்க அருமையான வழிகள்!!!

nathan