27.8 C
Chennai
Tuesday, Jan 27, 2026
helmet 10 1457602770
தலைமுடி சிகிச்சை

நீண்டநேரம் ஹெல்மெட் பயன்படுத்துபவர்கள் முடி உதிர்வைத் தடுக்க

`ஹெல்மெட் அணிவது உயிர்ப் பாதுகாப்பு. கட்டாயம் அனைவரும் டூவீலரில் செல்லும்போது ஹெல்மெட் அணியவேண்டும். சிலருக்கு, நீண்டநேரம் ஹெல்மெட் அணிவதால் தலைவலி, கழுத்துவலி, தலைமுடி உதிர்தல், வியர்வையால் தலையில் அழுக்கு சேர்தல் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். இந்தப் பிரச்னைகளுக்குப் பல்வேறு காரணங்கள் இருந்தாலும், ஹெல்மெட் அணிவதும் ஒரு முக்கியக் காரணமாக இருக்கிறது.

இவற்றுக்கு அஞ்சி ஹெல்மெட் அணியாமல் சென்று விலைமதிப்பில்லாத உயிரை இழக்கிறார்கள்.
இந்தப் பிரச்னைகளுக்கு வீட்டில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் இயற்கையான பொருள்கள் மூலமே தீர்வு காணலாம்.

ஹெல்மெட் அணிவதால் வரக்கூடிய உடற்சூடு, தலைச்சுற்றல் போன்ற பிரச்னைகளைப் போக்கும் தன்மை சீரகத்திற்கு உண்டு. தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய்யில் சீரகத்தைச் சேர்த்து இரண்டு நாள்கள் சூரிய ஒளியில் வைத்துவிடவேண்டும். அதன் பிறகு அந்த எண்ணெய்யைத் தலையில் தேய்த்துக் குளிக்கப் பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.

முடக்கத்தான் கீரையை அரைத்துத் தலையில் தேய்த்து சிறிது நேரம் ஊறவைத்தபின் குளித்தால் உடல் சூடு குறைவதோடு, தலையில் தேங்கியுள்ள அழுக்குகள் நீங்கும்.
helmet 10 1457602770
எலுமிச்சைச் சாறு, தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை தலா இரண்டு டேபிள் ஸ்பூன் எடுத்து நன்றாகக் கலந்து கொள்ளவும். இந்தக் கலவையை தலைமுடியில் மசாஜ் செய்வது போல தேய்த்து, 20 நிமிடங்கள் வரை ஊற வைக்க வேண்டும். பிறகு தலையை அலசிவிடவேண்டும். தேங்காய் எண்ணெய் முடிக்கு ஊட்டமளிக்கும். எலுமிச்சைச் சாறு பொடுகுத் தொல்லையை நீக்குவதுடன் முடி வளர்ச்சிக்கும் உதவும்.

2 ஸ்பூன் வெந்தயத்தை ஊறவைத்து அரைத்து தலையில் தேய்த்து அரைமணி நேரம் கழித்துக் குளிக்க வேண்டும். இது உடற்சூட்டைக் குறைக்கப் பயன்படும். முடியின் வளர்ச்சிக்கும் உதவும்.

தயிரைத் தலையில் தேய்த்து அரை மணிநேரம் கழித்து, குளிக்கலாம். தயிர், உடற்சூட்டைக் குறைப்பதுடன், முடிக்கும் பளபளப்பை அளிக்கும். அதிகம் புளித்த தயிரைப் பயன்படுத்தக் கூடாது.

சிறிதளவு வேப்பிலைகளை எடுத்து அரைத்துக் கொள்ளவேண்டும். இதைத் தலையில் தேய்த்து ஊற வைத்துக் குளிக்கவேண்டும். இதன் கசப்பு தன்மையானது, தலையில் உள்ள பாக்டீரியா போன்ற நுண்ணுயிர்களை அழித்துவிடும்.

தலையில் பொடுகு காரணமாகச் சிலருக்குப் புண்கள் ஏற்பட்டுவிடும். சிலருக்குத் தலையின் ‘ஸ்கால்ப்’ பகுதியில் பருக்கள் வரும்.

சோற்றுக்கற்றாழையின் மேல்தோலை நீக்கி உள்ளிருக்கும் ஜெல் பகுதியைத் தேய்த்துக் குளித்தால் இதற்கு நல்ல பலன் கிடைக்கும்.
கரிசலாங்கண்ணி இலைகளை அரைத்து, தலையில் தேய்த்துக் குளிக்கலாம். அல்லது தேங்காய் எண்ணெய்யில் அந்த இலைகளைச் சேர்த்து சூடுபடுத்தி ஆறவைத்துக்கொள்ளவேண்டும். அந்த எண்ணெய்யைத் தேய்த்த பின் 10-15 நிமிடங்கள் கழித்து தலைமுடியை அலச வேண்டும் .

வியர்வைக் காரணமாக தலையில் ஏற்படும் பிரச்னைகளுக்கு இன்னோர் எளிய மருந்து, மாங்கொட்டை. மாம்பழத்தின் கொட்டையிலிருக்கும் பருப்பை அரைத்து தலையில் தேய்த்துக்குளிக்கலாம். நெல்லிக்காய் விதைக்குள் இருக்கும் பருப்பையும் பயன்படுத்தலாம்.
201807060324
தொடர்ந்து நீண்டநேரம் ஹெல்மெட் பயன்படுத்துபவர்கள், திரிபலா மூலிகை கஷாயத்தைக் கொண்டு தலையை அலசிவரலாம்.
தினமும், ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனைப்படி ‘நஸ்யம்’ என்னும் மூக்கில் மருந்து விடும் சிகிச்சை மேற்கொள்ளலாம். இதன்மூலம் கழுத்து வலி வருவதைத் தடுக்கலாம்.

வில்வ இலைகளுடன் துளசி அல்லது நொச்சி இலைகளைச் சேர்த்து தண்ணீரில் கொதிக்கவைத்து அதில் குளிக்கலாம். நீண்டதூரம் ஹெல்மெட் அணிந்து செல்பவர்களுக்கு ஏற்படும் தலைவலியைப் போக்கஉதவும். தலைவலி, சைனஸ் பிரச்னை உள்ளவர்களுக்கும் இது நல்ல மருந்து…” என்றார்.

Related posts

உங்களுக்கு தெரியுமா வாரத்திற்கு இரண்டு முறை இந்த எண்ணெயை தேய்ச்சா தலைமுடி நரைக்காதாம்!

nathan

முடி வளர்ச்சியைத் தரும் தும்மட்டி பழங்கள் !! முடியை மீண்டும் வளர வைக்கும். இள நரையைப் போக்கும்.

nathan

உங்கள் டல்லான கூந்தலில் பூக்கள் மாஸ்க் செய்யும் மேஜிக் பற்றி தெரியுமா?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…முடி கொட்டுதலை குறைக்க… உங்க வாழ்க்கையில இந்த விஷயங்கள மட்டும் மாத்துனா போதுமாம்…!

nathan

உங்களுக்கு தெரியுமா பொடுகை ஒழிப்பதற்கு வேகமாகவும் சிறப்பாகவும் செயல்படும் 7 எளிய வீட்டு சிகிச்சைகள்!!!

nathan

கூந்தல் வளர்ச்சியை ஷாம்பு அதிகப்படுத்துமா?

nathan

ஆண்களுக்கு 20 வயதிலேயே தலை சொட்டையாவதற்கான காரணங்கள்!

nathan

தலை அரிப்பை போக்கும் ஆப்பிள் சிடர் வினிகர்

nathan

இந்த எண்ணெயை யூஸ் பண்ணா போதுமாம்…! உங்கள் முடி உதிர்வதை குறைக்க உதவும்…

nathan