25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
facetrt
அழகு குறிப்புகள்

மஞ்சளின் முழு பலனையும் பெற வேண்டுமானால் பேஸ் பேக் போடும் போது செய்யக்கூடாதவை

மஞ்சளின் முழு பலனையும் பெற வேண்டுமானால், சரியான பொருட்களுடன் கலந்து பயன்படுத்த வேண்டும். அதுவும் ரோஸ் வாட்டர், பால் மற்றும் தண்ணீர் தான் மஞ்சளுடன் கலந்து பயன்படுத்துவதற்கான சிறந்த பொருட்கள். இப்பொருட்களில் ஏதேனும் ஒன்றுடன் மஞ்சளைக் கலந்து பயன்படுத்தினால், முழு பலனையும் பெறலாம்.

# மஞ்சளைக் கொண்டு ஃபேஸ் பேக் போட்டால், அதனை மணிக்கணக்கில் ஊற வைக்கக்கூடாது. எப்போதுமே மஞ்சள் ஃபேஸ் பேக் போட்டால், 20 நிமிடத்திற்கு மேல் வைக்காதீர்கள். இல்லாவிட்டால், அது மஞ்சள் நிற கறைகளை சருமத்தில் ஏற்படுத்தும்.

# மஞ்சள் கொண்டு ஃபேஸ் பேக் போட்ட பின்னர், குளிர்ந்த நீரினால் முகத்தை நன்கு கழுவி, பின் துணியால் தேய்த்து துடைக்காமல் ஒற்றி எடுக்க வேண்டும்.
facetrt
# ஃபேஸ் பேக் போடும் போது பலரும் முகத்திற்கு மட்டும் தடவி, கழுத்தை மறந்துவிடுவோம். இதனால் கழுத்துப் பகுதி மட்டும் வித்தியாசமான நிறத்தில் இருக்கும். எனவே எப்போதும் மாஸ்க் போடும் போது, கழுத்துப் பகுதியிலும் மறக்காமல் பயன்படுத்துங்கள். இதனால் முகம் மற்றும் கழுத்து ஒரே நிறத்தில் இருக்கும்.

# எத்தனைப் பொருட்களைக் கொண்டு மஞ்சளை முகத்திற்கு பயன்படுத்தினாலும் நீரைக் கொண்டு பயன்படுத்துவதற்கு ஈடாகாது. ஏனெனில் நீரைக் கொண்டு பயன்படுத்தும் போது தான், உண்மையிலேயே மஞ்சளின் முழு நன்மையையும் பெற முடியும்.

# முதலில் முகத்திற்கு மஞ்சளைப் பயன்படுத்திய பின், சோப்பைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இதனால் சோப்பானது கஷ்டப்பட்டு முகத்தில் போட்ட ஃபேஸ் பேக்கினால் கிடைக்கும் நன்மைகளைக் கெடுத்துவிடும். எனவே முதலில் அதைத் தவிர்க்க வேண்டும்.

# பேஸ் பேக் போடும் போது, அதை ரொம்ப நேரம் காய வைத்து நன்றாக காய்ந்ததும் கழுவினால் கூடுதல் அழகு பெறலாம் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் இது முற்றிலும் தவறான ஒன்று… முகத்தில் சிறிதளவு ஈரப்பதம் இருக்கும் போதே முகத்தை ஸ்கிரப் செய்வது போல செய்து அந்த மாஸ்க்கை கழுவி விட வேண்டும்.

Related posts

பழங்கள் அதிகமாக சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா?அறிந்து கொள்ளுங்கள்

nathan

பார்லர் போறீங்களா?

nathan

சற்றுமுன் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சூப்பர் சிங்கர் புகழ் சௌந்தர்யா!

nathan

சுடிதார் ஸ்பெஷல்

nathan

வறண்ட சருமத்திற்கேற்ற முகப் பூச்சுக்கள்

nathan

2022 இல் இந்த 6 ராசிக்கும் திருமணம் நடக்கும் அதிர்ஷ்டம் இருக்காம்…

nathan

பட்டான அழகிய சருமத்தை பெறுவது மிகவும் கடினமான காரியம் அல்ல!..

sangika

இரத்தசோகை ஏற்படாமல் இருக்க இதனை உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம்….

sangika

கண்களைச் சுற்றியுள்ள கருவளையங்களைப் போக்க!…

sangika