29.8 C
Chennai
Sunday, Nov 17, 2024
0e92a56ed4157cf7
கூந்தல் பராமரிப்புதலைமுடி சிகிச்சை

ஏன் வெயிட் பண்றீங்க… கேரட் எண்ணெய் தயாரித்து தேய்ச்சா முடி ரொம்ப வேகமா வளருமாம்…

நீங்கள் கேரட் எண்ணெய் தயாரித்து பயன்படுத்தலாம். இந்த கேரட் எண்ணெய்யைப் பயன்படுத்துவதால் நீங்கள் இளமையாகவும் தோன்ற முடியும்.
ஏன் நீங்களே தயாரிக்க வேண்டும்?

கேரட் எண்ணெய், வறண்ட சேதமடைந்த கூந்தலுக்கு ஒரு இயற்கையான புத்துணர்ச்சியைத் தருகிறது. மேலும் இதில் பல வித நன்மைகளும் உள்ளன. கேரட் எண்ணெயில் வைட்டமின் ஈ, வைடமின் ஏ, பீட்டா கரோடின் மற்றும் இதர ஊட்டச்சத்துகள் இருப்பதால் சருமத்தில் ஏற்படும் வெடிப்புகள், புண் போன்றவை மறைகின்றது. இந்த பல்வேறு ஊட்டச்சத்துகள் வயது முதிர்விற்கான அறிகுறிகளைக் குறைக்கிறது, பல்வேறு சரும பிரச்சனைகளையும் போக்க உதவுகிறது.

கேரட் எண்ணெய் பயன்படுத்துவதால் பல்வேறு நன்மைகள் உடலுக்குக் கிடைக்கிறது. கூந்தல் மற்றும் சருமத்திற்கு சிறந்த முறையில் பலன் அளிக்க உதவுகிறது. குளிர் காலத்தில் மற்றும் மழைக் காலங்களில் சருமம் வறண்டு இருப்பதால், கேரட் எண்ணெய் பயன்படுத்தி சருமத்திற்கு ஈரப்பதம் அளிக்கலாம்.
0e92a56ed4157cf7
தயாரிக்கும் முறை

குறிப்பாக பாத வெடிப்புகள் மற்றும் தோல் உரிவது போன்றவை மழைக் காலங்களில் அடிக்கடி ஏற்படும் பாதிப்பாகும். இதனைப் போக்க கேரட் எண்ணெய் சிறந்த முறையில் உதவுகிறது. கேரட் எண்ணெய் தயாரிக்கும் முறையை இப்போது பார்க்கலாம் .

தேவையான பொருட்கள்

. வீட்டில் விளைந்த கேரட் அல்லது ஆர்கானிக் கேரட் – 2 அல்லது 3.
. ஆலிவ் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய்
. கேரட் துருவி
. வடிகட்டி
. கிராக் பாட் அல்லது பேன்
. ஒரு சுத்தமான கண்ணாடி ஜார்

செய்முறை

. கேரட்டை தோல் சீவி துருவிக் கொள்ளவும்.
. துருவிய கேரட்டை ஒரு பேன் அல்லது கிராக் பாட்டில் போடவும்.
. உங்களுக்கு விருப்பமான ஆலிவ் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய்யை சேர்க்கவும்.
. கேரட் துருவல் முழுவதும் மூழ்கும் அளவிற்கு எண்ணெய்யை ஊற்றவும்.
. இப்படி செய்வதால் கேரட் முழுவதும் எண்ணெயில் ஊறி அடியில் தங்கி விடும்.
. நன்றாக ஊறியவுடன் கேரட் மிகவும் மென்மையாக மாறி, அந்த எண்ணெய் முழுவதும் ஆரஞ்சு நிறமாக மாறி விடும்.
. அப்போது அடுப்பை நிறுத்திவிட்டு ஆற விடவும்.
. அடுத்த 24 மணி நேரம் இந்த கேரட் எண்ணெயிலேயே ஊறட்டும்.
. ஆறியவுடன், ஒரு வடிகட்டி பயன்படுத்தி எண்ணெய்யை வடிகட்டிக் கொள்ளவும்.
. பிறகு அதனை ஒரு கண்ணாடி ஜாரில் ஊற்றி வைக்கவும்.
. அந்த ஜாரை ஒரு இறுக்கமான மூடி போட்டு மூடி வைக்கவும். குளிர்ந்த இடத்தில் அல்லது தேவைபட்டால் பிரிட்ஜில் கூட இந்த பாட்டிலை வைத்துக் கொள்ளலாம்.
. தேவைப்படும்போது இதனை எடுத்து பயன்படுத்தவும்.

இப்படி தயாரிக்கும் கேரட் எண்ணெய் கூந்தலுக்கு பல அற்புதங்களை செய்கிறது. தலைக்கு ஷாம்பூ தேய்த்து குளிப்பதற்கு முன்னால் இந்த எண்ணெய்யை தலையில் தடவிக் கொள்ளலாம். இப்படி செய்வதால் உங்கள் கூந்தல் எண்ணெய்யை உறிஞ்சி, தலை முடிக்கு ஈரப்பதம் அளித்து, அழகாக்குகிறது.

இந்த கேரட் எண்ணெயில் உள்ள வைட்டமின் ஈ மற்றும் பீட்டா கரோடின் போன்றவை சிறந்த கண்டிஷனராக செயல்படுகிறது. இதில் இருக்கும் வைட்டமின் ஈ சத்து, உங்கள் கூந்தல் மற்றும் உச்சந்தலையை சேதங்களில் இருந்து பாதுகாக்கிறது. மேலும் இது முடி உதிர்வைத் தடுத்து, கூந்தல் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

நன்மைகள்

1. கேரட் எண்ணெய்யை உங்கள் கூந்தலுக்குப் பயன்படுத்துவதால் அதில் இருக்கும் உயர் வைட்டமின் ஈ சத்து மற்றும் வைட்டமின் ஏ சத்து காரணமாக உங்கள் கூந்தல் புத்துணர்ச்சி பெற்று, மென்மையாகவும், பளபளப்பாகவும் மாறுகிறது. உங்கள் கூந்தல் பலவீனமாக இருந்தால் இந்த எண்ணெய் உங்கள் கூந்தலுக்கு வலிமையைத் தருகிறது. உச்சந்தலைக்கு ஈரப்பதம் அளித்து , நுனி முடி உடைவதைத் தடுத்து, நீளமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

2. சருமத்தில் உள்ள அணுக்கள் புதுப்பித்தலை கேரட் எண்ணெய் ஊக்குவிக்கிறது. இதனால் சருமத்தின் எலாஸ்டிக் தன்மை மேம்பட்டு, சருமம் மென்மையாகவும், இளமையாகவும் மிருதுவாகவும் மாறுகிறது.

3. கேரட் எண்ணெயில் இருக்கும் பீட்டா கரோடினில் இருக்கும் அன்டி ஆக்சிடென்ட் தன்மை, சூரிய ஒளிக் கதிர்களால் உண்டாகும் சேதத்துடன் போராடி, ப்ரீ ரேடிகல் உருவாக்கத்தைக் குறைக்கிறது, இதனால் இளம் வயதில் உண்டாகும் முதிர்ச்சி தடுக்கப்படுகிறது.

4. உண்மையில் இந்த கேரட் எண்ணெய் சருமத்திற்கு ஒரு சன்ஸ்க்ரீன் போல் பயன்படுகிறது . இதில் இயற்கை SPF 38-50 என்ற அளவில் உள்ளது. ரசாயனங்கள் சேர்க்கப்பட்டு தயாரிக்கப்படும் சன்ஸ்க்ரீன் பயன்படுத்துவதில் உங்களுக்கு விருப்பமில்லை என்றால் நீங்கள் கேரட் எண்ணெய்யை ஒரு சன்ஸ்க்ரீன் போல் பயன்படுத்தலாம்.

இவ்வளவு நன்மைகள் கொண்ட காரணத்தினால், பலரும் இன்று கேரட் எண்ணெய்யை தங்கள் அழகு பராமரிப்பு பொருளாகப் பயன்படுத்தி வருகின்றனர். பல்வேறு சரும பராமரிப்பு பொருட்கள் மற்றும் கூந்தல் பராமரிப்பு பொருட்கள் போன்றவற்றின் தயாரிப்பில் கேரட் எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் சந்தையில் இதனுடன் பல்வேறு ரசாயனங்கள் சேர்த்து தயாரிப்பதால், நீங்களே வீட்டில் தயாரிக்கும் இந்த கேரட் எண்ணெய் எந்த ஒரு தீங்கு விளைவிக்கும் ரசாயனங்களும் இல்லாத காரணத்தால் அதிக நன்மையைத் தருகிறது.

மற்றொரு முறை

கேரட் எண்ணெய் தயாரிக்க மற்றொரு முறையை இப்போது பார்க்கலாம்

. கேரட்டை துருவி எடுத்துக் கொள்ளவும்.
. துருவிய கேரட்டை எடுத்து ஒரு சுத்தமான கண்ணாடி ஜாரில் போடவும்.
. அந்த கேரட் முழுவதும் மூழ்கும் அளவிற்கு எண்ணெய்யை ஊற்றவும்.
. பிறகு அந்த ஜாரை இறுக்கமாக மூடி, வெப்பமாக இருக்கும் இடத்தில் அதாவது ஜன்னல் போன்ற இடத்தில் ஒரு இரண்டு வாரங்கள் வைக்கவும்.
. அல்லது பிரிட்ஜ் இருக்கும் இடத்தின் பின்புறம் ஓரளவிற்கு சூடாக இருக்கும் என்பதால் அந்த இடத்தில் வைக்கலாம்.
. தினமும் மறக்காமல் அந்த ஜாரை எடுத்து குலுக்கி விட்டு மறுபடி அதே இடத்தில் வைக்கவும்.
. இந்த கேரட்டில் இருக்கும் பீட்டா கரோடின் மற்றும் இதர வைட்டமின்கள் எண்ணெயில் கரைந்து , அந்த எண்ணெய் முற்றிலும் ஆரஞ்சு நிறத்தில் தோற்றமளிக்கும்.
. ஒரு மஸ்லின் துணி அல்லது வடிகட்டி எடுத்து அந்த எண்ணெய்யை வடிகட்டிக் கொள்ளவும்.
. மற்றொரு சுத்தமான ஜாரில் வடிகட்டிய எண்ணெய்யை ஊற்றிக் கொள்ளவும்.
. இந்த ஜாரை இறுக்கமாக மூடி, குளிர்ந்த இடத்தில் வைத்துக் கொள்ளவும்.

கவனிக்க வேண்டியது

கேரட்டில் தண்ணீர் சத்து இருப்பதால், அது கெட்டு விடும் வாய்ப்பு இருப்பதால், அந்த ஜார் முழுவதும் எண்ணெய்யை ஊற்றி ஜாரில் காற்று இல்லாதவண்ணம் பார்த்துக் கொள்ளலாம். இதனால் அந்த எண்ணெய் கெடுவதைத் தவிர்க்க முடியும். பிறகு கேரட் எண்ணெய் முழுவதும் தயாரானவுடன், ஒரு ஈரமில்லாத ஜாரில் ஊற்றி காற்று புகாதவண்ணம் மூடி வைப்பதால் எண்ணெய் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.
(ஜாரை மிகக் குறைந்த வெப்ப நிலையில் சூடாக்கிக் கொள்ளலாம்)

எவ்வாறு பயன்படுத்துவது?

கேரட் எண்ணெய்யை பின்வரும் வழிகளில் பயன்படுத்தலாம்.

1. சரும சுருக்கங்களைப் போக்க கேரட் எண்ணெய்

சிறிதளவு கேரட் எண்ணெய்யை உள்ளங்கையில் ஊற்றிக் கொள்ளவும். மென்மையாக உங்கள் சருமத்தில் தடவவும். இதனால் உங்கள் சருமத்தின் எலாஸ்டிக் தன்மை அதிகரிக்கும். இதே நேரத்தில் உங்கள் சருமத்தில் உள்ள சுருக்கங்களுடன் போராடி அவற்றைப் போக்கும் .

2. கேரட் எண்ணெய் கொண்டு உங்கள் கூந்தலுக்கு மசாஜ் செய்வதால் சேதமடைந்த கூந்தல் வலிமை அடைந்து கூந்தல் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

3. முகத்தில் உண்டாகும் திட்டுக்கள், பருக்கள் மற்றும் கட்டிகளை எதிர்த்து போராடவும் கேரட் எண்ணெய் உதவுகிறது.

இந்த கேரட் எண்ணெய்யை வீட்டில் தயாரிப்பதில் சிறு சிரமங்கள் இருந்த போதிலும், கூந்தல் மற்றும் சருமத்திற்கு பலவித நன்மைகளைத் தரும் இந்த எண்ணெய் தயாரிப்பில் செலவிடப்படும் உங்கள் நேரம் என்பது முற்றிலும் ஒரு மூலதனமே.

Related posts

ஹேர்கலரிங் செய்யும் முன்னர் தெரிந்துகொள்ளவேண்டியவை….

nathan

உடலுக்கு புத்துணர்ச்சி மற்றும் உரோமத்திற்கு வளர்ச்சி.!!

nathan

வலுவான முடி வளர்ச்சிக்கு ஹென்னா முடி எண்ணெய் எவ்வாறு பயன்படுத்துவது

nathan

எங்கேயும் முடி..எதிலும் முடி..!

sangika

சூப்பர் டிப்ஸ்! வழுக்கை விழுந்த இடத்தில் முடி வளர வைக்க வாரத்திற்கு 2 முறை இத தடவினாலே போதும்!

nathan

நம்மால் இழந்த முடியை மீண்டும் பெற கொத்தமல்லி இலை!…

sangika

உங்களுக்கு தெரியுமா பொடுகு, அரிப்பிலிருந்து நிரந்தரமாக விடுதலை தரும் பாட்டி வைத்தியங்கள்!!

nathan

மருதாணியை பேக் போல தலை முடிக்கு பயன்படுத்தி வந்தால் கூந்தல் பிரச்சனைகளுக்கு நிரந்தரமாக தீர்வு காண முடியும்

nathan

வம்சமும், தலை முடியும்

nathan