8ef66bd33f1eb4580f4862b8ee
அழகு குறிப்புகள்

கண்டிப்பா இத பண்ணுங்க.! சருமம் அதிகமா வியர்க்குதா?

வெயிலின் தாக்கம் தாங்காமல் முகத்தில் கரும்புள்ளிகள் ஏற்படும். குறிப்பாக எண்ணெய் பசையான உடம்பு என்றால் முகத்தில் பருக்கள் பாடாய்படுத்தும். கரும்புள்ளிகள் மற்றும் பருக்கள் மறைய பப்பாளிப் பழச்சாறை முகத்தில் தடவவும். எக்காரணம் கொண்டும் பருக்களை கிள்ளக்கூடாது. இதனால் பருக்கள் அதிகமாகும். மேலும், முருங்கைக் கீரையை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.

8ef66bd33f1eb4580f4862b8eeகோடை வெயிலில் நாக்கு மட்டுமல்ல தோல் வறட்சியும் ஏற்படும். இதற்கு பழச்சாறு, காய்கறிச்சாறு, சூப் அடிக்கடி சாப்பிடவும். இதனால் தோல் வறட்சி தடுக்கப்படும். உடம்புக்கு புத்துணர்ச்சி ஏற்படுவதோடு தோல் பளபளப்பாகவும் மாறும். கோடைகாலத்தில் தயிர் சாப்பிடுவதை விட மோராக சாப்பிடுவது நல்லது.

உடம்பில் இருந்து அதிகமான அளவு வியர்வை வெளியேறுவதைத் தடுத்தால் வேர்க்குருவைக் கட்டுப்படுத்தலாம். அதிகமாக வியர்க்கும்போது குளித்தால் உடலுக்கு ஒத்துக் கொள்ளாது. வியர்வை நின்ற பிறகே குளிக்க வேண்டும்.

அதிக அளவு சோப்புகளையும் கோடைகாலத்தில் பயன்படுத்த வேண்டாம். அதிகமாக வியர்க்கும்போது பவுடர் பூச வேண்டாம். நன்றாக கழுவி துடைத்த பிறகே பவுடரை பூச வேண்டும்.

கோடைகாலத்தில் அதிகம் பாதிக்கப்படுவது சருமம் தான். வெள்ளரி, தர்பூசணி, இளநீர் போன்றவற்றை அதிகமாக சேர்த்துக்கொள்வது நல்லது. குறிப்பாக சிறிது சீரகத்தை நீரில் போட்டுக் காய்ச்சி அந்த நீரை அடிக்கடி பருகலாம். இதனால் கோடையில் சருமம் மங்காமல், செழுமை அடையும்.

வெயிலில் வெளியில் அலைபவர்கள், வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் ஒரே இடத்தில் உட்கார்ந்தபடி வேலை செய்பவர்கள் கண்டிப்பாக அடிக்கடி மோர் மற்றும் இளநீரை குடிக்க வேண்டும். உடல் சூடு குறைவதோடு, உடம்புக்கு புத்துணர்வு கிடைக்கும். கோடைகாலத்தில் எண்ணெய் பதார்த்தங்கள், காரம் முதலானவற்றை தவிர்க்கவும். சுத்தமான குடிநீரையும் அதிகம் குடிக்கலாம்.

வெயில் காலத்தில் நீர்ச்சத்து அதிகம் கொண்ட வாழைத்தண்டு, கீரை போன்றவற்றை உண்ணுவது உடம்புக்கு நல்லது. எக்காரணம் கொண்டும் சிறுநீரை அடக்க வேண்டாம்.

வறண்ட சருமத்தைக் கொண்டவர்கள் வெயில் காலத்தை எண்ணி அதிகம் கவலைக்கொள்ள வேண்டாம். ஏனென்றால் கோடைகாலத்தில் அதிகம் வியர்க்கும். இதனால் வறண்ட சருமத்தைக் கொண்டவர்களுக்கு நன்மையே தவிர, தீமை இல்லை.

கோடைகாலத்தில் எல்லோருக்குமே உடலில் வியர்வை நாற்றம் ஏற்படவே செய்யும். அதற்கு நிறைய தண்ணீர் குடிக்கவும். கீரைகள், ஆரஞ்சுப் பழம், அன்னாசிப் பழம் ஆகியவற்றை நிறைய சாப்பிடுங்கள். இவற்றிலுள்ள நார்ச்சத்து திரவ உற்பத்தியைக் குறைப்பதோடு பாக்டீரியாக்களையும் ஒழிக்கும்.

Related posts

கால்களில் இருக்கும் முடியை அகற்றுவதற்கு இந்த முறையை பயன்படுத்தி பாருங்கள்!…

sangika

அடேங்கப்பா! பிக்பாஸ் அனிதா சம்பத்க்கு அடித்த அதிர்ஷ்டம்

nathan

இயற்கை பொருட்களை பயன்படுத்தினால் உங்களின் முகம் எப்போதும் இளமையாகவும் பொலிவுடனும் இருக்கும்…..

sangika

ஷாப்பிங் மாலில் கூலாக நடந்து வரும் தளபதி விஜய்! கசிந்த புகைப்படம்

nathan

பிளாக் ஹெட்ஸ் மறைந்து சருமம் பளபளக்க இதை செய்யுங்கள்….

sangika

தினமும் ஆயில் புல்லிங்!…

nathan

தொப்பையை குறைக்க உதவும் சலபாசனம்…!

nathan

வெடிப்புகள் இல்லாத அழகான கால்கள் பராமரிப்புக்கு!

nathan

கன்னம் இருந்தால் இளமையாகவும், அதிக கவர்ச்சியாகவும் தோன்றுவார்கள்!….

sangika