25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
53.800.668.160.90
முகப் பராமரிப்பு

உங்க முகத்தில் உள்ள மேடு பள்ளங்களை எளிதில் மறைக்க வேண்டுமா? அப்ப இத படிங்க!

பொதுவாக சிலருக்கு முகத்தில் குழிகள் மேடு பள்ளமாகவும் அதிகம் காணப்படும்.

இவை முக அழகை கெடுப்பதோடு, பல்வேறு சரும பிரச்சனைகளான வெள்ளைப்புள்ளிகள், கரும்புள்ளிகள், முகப்பரு போன்றவை அதிகம் வருவதற்கு வழிவகுத்து விடுகின்றது.

முகத்தில் குழிகள் அதிகம் இருந்தால் அவர்களது முகத்தில் எண்ணெய் அதிகம் வழிவதோடு, அழுக்குகளும் அதிகம் சேரும்.

அந்தவகையில் இதிலிருந்து எளிதில் விடுபட கீழ் குறிப்பிடப்பட்டுள்ள முறைகளில் ஒன்றை பயன்படுத்தினாலே போதும். தற்போது அவற்றை பார்ப்போம்.

 

  • ஐஸ் கட்டிகளைக் கொண்டு தினமும 10 நிமிடம் மசாஜ் செய்தால், சரும செல்கள் குளிர்ச்சியடைவதோடு, சருமத்துளைகளும் சுருங்க ஆரம்பிக்கும்.
  • தயிரை முகத்தில் தடவி மசாஜ் செய்து, 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இதனால் சருமத்துளைகளில் உள்ள அழுக்குகள் முழுமையாக வெளியேறுவதோடு, சருமத்துளைகளும் சுருங்கும்.
  • ஒரு பௌலில் சிறிது பேக்கிங் சோடா சேர்த்து தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 10 நிமிடம் உலர வைத்து பின் கழுவ வேண்டும். இதனால் சருமத்தின் நிறம் அதிகரிப்பதோடு, சருமத் துளைகளும் சுருங்கும்.
  • முட்டையின் வெள்ளைக்கருவை ஒரு பௌலில் எடுத்துக் கொண்டு, அத்துடன் சிறிது எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ, முகத்தில் உள்ள அழுக்குகள் முழுமையாக வெளியேற்றப்பட்டு, சருமத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்கி, சருமத்துளைகள் சுருங்கும்.
  • ஆப்பிள் சீடர் வினிகர் கூட சருமத் துளைகளை மூட உதவும். அதற்கு அதனை சிறிது நீரில் கலந்து முகத்தில் தடவி, 10 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இதனால் சருமத்தின் பொலிவும் மேம்படும்.
  • வெள்ளரிக்காயை சாப்பிடுவதுடன், அதன் சாற்றினை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ, சருமத் துளைகள் சுருங்க ஆரம்பிக்கும்.
  • ஒரு பௌலில் களிமண்ணை போட்டு, அதனை ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இதனால் சருமத் துளைகளில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை மற்றும் அழுக்குகள் உறிஞ்சி வெளியேற்றி, சருமத்துளைகளை சுருங்கச் செய்யும்.
  • முகத்தில் மேடு பள்ளங்களுடன், கரும்புள்ளிகளும் இருந்தால், எலுமிச்சை சாற்றில் சர்க்கரை சேர்த்து, முகத்தில் தடவி ஸ்கரப் செய்து, கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், முகத்தில் உள்ள மேடு பள்ளங்கள் விரைவில் மறையும்.53.800.668.160.90

 

Related posts

இரண்டே மாதங்களில் தோல் சுருக்கங்கள் நீங்கி, மேனி பளபளப்பாகிவிட சூப்பர் டிப்ஸ்!….

sangika

உங்க முகத்தில் உள்ள சுருக்கங்களை முழுமையாக போக்க தினமும் செய்யுங்க…

nathan

முட்டைகோஸ் பேஷியல்(home facial)

nathan

எண்ணெய் வடியாத சருமம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? தீர்வுகள் இங்கே

nathan

டீன் ஏஜ் பெண்களுக்கான அழகு குறிப்புகள்

nathan

பலன்தரும் இயற்கை ஃபேஸ் பேக்…!

nathan

பெண்களுக்கு உண்டாகும் அழகு சார்ந்த பிரச்சனைகள்

nathan

உங்க உதடு கன்னங்களில் உண்டாகும் கருமையை போக்குவது எப்படி தெரியுமா?

nathan

கரும்புள்ளி, முகப்பரு, சுருக்கங்கள், கருமை போன்றவற்றைப் போக்க வேண்டுமா? இத ட்ரை பண்ணுங்க.!

nathan