25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
028634
முகப் பராமரிப்பு

மூக்குமேல இப்படி கொஞ்சம் அசிங்கமா இருக்கா? அப்ப இத படிங்க!

சருமத்தில் உள்ள சிறு சிறு சிறு ஓட்டைகள் துளைகள் என்று அறியப்படுகின்றன. இவை எண்ணெய் மற்றும் வியர்வையை வெளியேற்றவும் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ளவும் உதவுகின்றன. இந்த துளைகள் சில நேரங்களில் அடைக்கப்படுகின்றன. அதாவது அதிக அளவு எண்ணெய் உற்பத்தியாகும் போது, சருமத்தில் மாசு அதிகரிக்கும்போது, இறந்த சரும அணுக்கள் கட்டமைக்கப்படும்போது இந்த துளைகள் அடைக்கப்படுகின்றன.

இதன் காரணமாக கரும்புள்ளிகள், வெள்ளைப் புள்ளிகளுடன் கூடிய கட்டிகள், பருக்கள் போன்றவை ஏற்பட்டு, சருமத்தை சோர்வாக மாற்றுகின்றன. சில நேரங்களில் நமது அழகை மேம்படுத்தப் பயன்படுத்தும் மேக்கப் கூட சருமத்தில் கட்டிகளை உருவாக்கக் கூடும்.
மூக்குமேல இப்படி கொஞ்சம் அசிங்கமா இருக்கா? இத அப்ளை பண்ணா உடனே போயிடும்…
சரும துளைகள்

இந்த சரும துளைகள் பல்வேறு அளவுகளில் உள்ளன. குறிப்பாக மூக்கில் காணப்படும் துளைகள் சருமத்தின் இதர பகுதிகளைக் காட்டிலும் மிகப் பெரிதாக உள்ளன. எண்ணெய் சருமமாக இருக்கும்போது, மூக்கின் துளைகள் மிகப் பெரிதாகவும் குறிப்பிட்டுப் பார்க்கும்படியாகவும் உள்ளன.

அதிக எண்ணெய் மற்றும் இறந்த சரும அணுக்கள் முடியின் வேர்கால்களுக்கு அடியில் சேர்க்கப்பட்டு, இதனால் ஒரு முளை உருவாகி வேர்கால்களின் சுவர்களை கடினப்படுத்துகின்றன.

மூக்குமேல இப்படி கொஞ்சம் அசிங்கமா இருக்கா? இத அப்ளை பண்ணா உடனே போயிடும்…
என்ன காரணம்?

துளைகள் அடைக்கப்படுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. சில பொதுவான காரணங்களை இப்போது நாம் அறிந்து கொள்வோம்.

. நீர்ச்சத்து இல்லாத சருமம்.
. அதிக அளவு எண்ணெய் உற்பத்தி
. அதிக வியர்வை
. ஹார்மோன் சமச்சீரின்மை
. அதிகரித்த மன அழுத்தம்
. மோசமான சரும பராமரிப்புப் பழக்கவழக்கம்
. சூரிய ஒளிக்கு வெளிப்படுவது

ஆகவே, ஒரு ஆரோக்கியமான சுத்தமான முறையில் சரும பராமரிப்பு அட்டவணையை மேற்கொள்வதற்கான முதல் படி என்பது ஆரோக்கியமான முறையில் சுத்தமான முறையில் சருமத்தைப் பராமரிப்பது மட்டுமே. ஆகவே உங்கள் சருமத்தை சரியான முறையில் பராமரித்து சருமத்தின் துளைகளை அடைக்க உதவும் சில சிறப்பான தீர்வுகளை நாங்கள் இங்கே கொடுத்துள்ளோம். அவற்றை இப்போது அறிந்து கொள்வோம்.

மூக்குமேல இப்படி கொஞ்சம் அசிங்கமா இருக்கா? இத அப்ளை பண்ணா உடனே போயிடும்…
ஸ்ட்ரிப்

சரும துளைகளை அடைக்கும் முளைகளை போக்க பசையுள்ள பேட் (adhesive pad) அல்லது ஸ்ட்ரிப் (strip) போன்றவற்றைப் பயன்படுத்தலாம். இவை தேர்வு செய்யப்பட்ட பிணைப்பு முகவர்களால் செய்யப்பட்டு, காந்தம் போல் வினை புரிந்து சரும துளைகளுக்குள் உள்ள அழுக்கு மற்றும் தூசி கட்டமைப்பை வெளியில் இழுத்து விடுகிறது.

தேவையான பொருட்கள்

போர் ஸ்ட்ரிப் (pore strip) அல்லது பசையுள்ள பேட்

செய்முறை

1. இந்த ஸ்ட்ரிப்பை ஈரமாக்கிக் கொண்டு மூக்கில் வைத்துக் கொள்ள வேண்டும்.
2. பத்து நிமிடம் அப்படியே விட வேண்டும்
3. பிறகு மென்மையாக இந்த ஸ்ட்ரிப்பை மூக்கில் இருந்து எடுக்க வேண்டும்.
4. இந்த ஸ்ட்ரிப்பின் கழிவுகள் மூக்கில் இருந்து முழுவதும் வெளியேற வெதுவெதுப்பான நீர் கொண்டு அந்த இடத்தை நன்றாகக் கழுவவும்.
5. ஒரு வாரத்திற்கு ஒரு முறை இதே வழியைப் பின்பற்றவும்.

மூக்குமேல இப்படி கொஞ்சம் அசிங்கமா இருக்கா? இத அப்ளை பண்ணா உடனே போயிடும்…
நீராவி பிடிப்பது

முகத்திற்கு நீராவி பிடிப்பதால் அடைக்கப்பட்ட துளைகள் திறக்கப்பட்டு சருமத்தில் உள்ள அழுக்குகள் வெளியேறுகிறது. இது ஒரு எளிய மற்றும் விலை குறைந்த வழி முறையாகும். இந்த முறையை வீட்டிலேயே எளிதாக பின்பற்றி சரும துளைகளைத் திறக்க முடியும்.

தேவையான பொருட்கள்

. கொதிக்க வைத்த நீர்

செய்முறை

1. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு அதனை அடுப்பில் வைத்துக் கொதிக்க விடவும்.
2. நன்றாகக் கொதித்தவுடன் அடுப்பில் இருந்து இறக்கி வைக்கவும்.
3. அந்த பாத்திரத்தை கீழே வைத்து, உங்கள் முகத்தில் அந்த நீரில் இருந்து வெளிப்படும் ஆவி படும்படி முகத்தைக் காட்டவும்.
4. உங்கள் தலை முழுவதும் ஒரு போர்வையால் போர்த்திக் கொள்ளவும்.
5. 15 நிமிடங்கள் இந்த நீராவி உங்கள் முகத்தில் படுமாறு பார்த்துக் கொள்ளவும்.
6. பின்பு முகத்தைத் துடைத்து மென்மையான மாய்ச்ச்சரைசர் பயன்படுத்தவும்.
7. ஒரு வாரத்தில் இரண்டு முறை இதனைப் பின்பற்றவும்.

மூக்குமேல இப்படி கொஞ்சம் அசிங்கமா இருக்கா? இத அப்ளை பண்ணா உடனே போயிடும்…
சர்க்கரை ஸ்க்ரப்

சர்க்கரை இயற்கையான முறையில் மேல்படலப் பிரிப்பை மேற்கொள்ளும் ஒரு முகவராக உள்ளது. இதனால் அடைக்கப்பட்ட துளைகள் திறக்கப்படுகின்றன.

தேவையான பொருட்கள்

. இரண்டு ஸ்பூன் சர்க்கரை
. ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு

செய்முறை

1. ஒரு கிண்ணத்தில் சர்க்கரை மற்றும் எழுமிச்சை சாறு சேர்த்து ஒரு அடர்த்தியான பேஸ்ட் போல் செய்து கொள்ளவும்.
2. இந்த பேஸ்டை உங்கள் மூக்கில் தடவி மென்மையாக சுழல் வடிவத்தில் மசாஜ் செய்யவும்.
3. ஐந்து நிமிடங்கள் தொடர்ந்து மசாஜ் செய்த பின்னர், முகத்தைக் கழுவவும்.
4. பின்பு ஒரு மென்மையான மாயச்ச்சரைசர் தடவவும்.
5. இந்த வழிமுறையை வாரத்திற்கு ஒரு முறை பின்பற்றவும்.

மூக்குமேல இப்படி கொஞ்சம் அசிங்கமா இருக்கா? இத அப்ளை பண்ணா உடனே போயிடும்…
முல்தானிமிட்டி

முல்தானி மிட்டி ஒரு ஸ்பான்ச் போல் செயல்புரிந்து, சருமத்தில் உள்ள கிருமிகள், எண்ணெய், அழுக்கு மற்றும் சருமத்தை அடைக்கக் காரணமாக உள்ள இதர பொருட்களை வெளியில் இழுத்து வர உதவுகிறது.

தேவையான பொருட்கள்

. ஒரு ஸ்பூன் முல்தானி மிட்டி
. ஒரு ஸ்பூன் தண்ணீர்
. ஒரு ஸ்பூன் ஓட்ஸ்

செய்முறை

1. ஒரு கிண்ணத்தில் சிறிதளவு முல்தானி மிட்டி, தண்ணீர் மற்றும் ஓட்ஸ் சேர்த்து ஒரு பேஸ்ட் போல் செய்து கொள்ளவும்.
2. இந்த கலவையை உங்கள் முகத்தில் குறிப்பாக மூக்கில் தடவி 5-10 நிமிடங்கள் ஊற விடவும்.
3. பிறகு தண்ணீரால் முகத்தைக் கழுவவும்.
4. ஒரு வாரத்திற்கு ஒரு முறை இந்த வழிமுறையைப் பின்பற்றவும்.

மூக்குமேல இப்படி கொஞ்சம் அசிங்கமா இருக்கா? இத அப்ளை பண்ணா உடனே போயிடும்…
பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா இயற்கை முறையில் மேல்படல பிரிப்பை மேற்கொண்டு சரும துளைகளைச் சுத்தம் செய்ய உதவுகிறது. இதனால் கரும்புள்ளிகள் தோன்றுவது தடுக்கப்படுகிறது. பேக்கிங் சோடாவில் கிருமி எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் பருக்களை உண்டாக்கும் கிருமிகளை கொல்ல சிறந்த முறையில் உதவுகிறது.

தேவையான பொருட்கள்

. இரண்டு ஸ்பூன் பேக்கிங் சோடா
. ஒரு ஸ்பூன் தண்ணீர்

செய்முறை

1. ஒரு கிண்ணத்தில் பேக்கிங் சோடா மற்றும் தண்ணீர் சேர்த்து ஒரு பேஸ்ட் போல் செய்து கொள்ளவும்.
2. இந்த பேஸ்டை உங்கள் மூக்கில் தடவி 5 நிமிடங்கள் ஊற விடவும்.
3. ஐந்து நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவவும்.
4. இந்த செய்முறையை வாரத்தில் ஒரு முறை பின்பற்றவும்.

மூக்குமேல இப்படி கொஞ்சம் அசிங்கமா இருக்கா? இத அப்ளை பண்ணா உடனே போயிடும்…
முட்டை வெள்ளை கரு

எண்ணெய் சருமத்திற்கு சிறப்பான தீர்வைத் தர முட்டையின் வெள்ளைக் கரு உதவுகிறது. இது சருமத்தின் துளைகளைச் சுருக்கவும் சருமத்தை இறுக்கமாக மாற்றவும் உதவுகிறது. மேலும் முட்டையின் வெள்ளைக் கரு சருமத்தில் உள்ள அழுக்குகளை அகற்றி சருமத்தின் தரத்தை உயர்த்துகிறது.

தேவையான பொருட்கள்

. ஒரு முட்டையின் வெள்ளைக் கரு மட்டும்
. ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு

செய்முறை

1 . முட்டையை நுரை வரும் வரை நன்றாக அடித்து கிளறிக் கொள்ளவும்.
2. 5 நிமிடங்கள் பிரிட்ஜில் வைக்கவும்.
3. 5 நிமிடம் கழித்து, பிரிட்ஜில் இருந்து வெளியில் எடுத்து, அதில் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
4. இரண்டையும் நன்றாகக் கலக்கவும்.
5. பின்பு இந்தக் கலவையை மூக்கில் தடவி, காய விடவும்.
6. பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
7. ஒரு வாரத்தில் இரண்டு முறை இந்த வழிமுறையைப் பின்பற்றவும்.

மூக்குமேல இப்படி கொஞ்சம் அசிங்கமா இருக்கா? இத அப்ளை பண்ணா உடனே போயிடும்…
தேன்

சருமத்தில் அதிகமாக எண்ணெய் கட்டமைப்பு உருவாக்கத்தைத் தடுக்க தேன் உதவுகிறது. மேலும் சருமத்திற்கு ஈரப்பதத்தைத் தந்து, சரும துளைகளை இறுக்கமாக மாற்றுகிறது.

தேவையான பொருட்கள்

. ஒரு ஸ்பூன் தேன்

செய்முறை

1. உங்கள் மூக்கில் சிறிதளவு தேன் எடுத்து தடவி, மென்மையாக சில நொடிகள் மசாஜ் செய்யவும்.
2. பிறகு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவவும்.
3. ஒரு வாரத்தில் இரண்டு முறை இதே வழிமுறையைப் பின்பற்றவும்.

மூக்குமேல இப்படி கொஞ்சம் அசிங்கமா இருக்கா? இத அப்ளை பண்ணா உடனே போயிடும்…
எலுமிச்சை

எலுமிச்சையில் சிட்ரிக் அமிலம் உள்ளது. இது ஒரு மென்மையான முறையில் மேற்படலப் பிரிப்பை செயல்படுத்துகிறது. சரும துளைகளை அடைக்கும் எண்ணெய் மற்றும் அழுக்குகளைப் போக்க உதவுகிறது.

தேவையான பொருட்கள்

. ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு
. சிறிதளவு வெதுவெதுப்பான நீர்

செய்முறை

1. உங்கள் மூக்கில் எலுமிச்சை சாறு எடுத்து தடவவும்.
2. மென்மையான முறையில் அந்த இடத்தை ஐந்து நிமிடங்கள் தடவவும்.
3. பிறகு வெதுவெதுப்பான நீரால் கழுவவும்.
4. இதே வழிமுறையை வாரத்தில் இரண்டு முறை பின்பற்றவும்.

மூக்குமேல இப்படி கொஞ்சம் அசிங்கமா இருக்கா? இத அப்ளை பண்ணா உடனே போயிடும்…
பப்பாளி பழம்

பப்பாளியில் காணப்படும் ஒரு கூறு சருமத்தை சுத்தம் செய்யும் ஒரு சிறந்த முகவராக செயல்புரிந்து, சருமத்தின் துளைகளைத் திறக்க உதவுகிறது.

தேவையான பொருட்கள்

. ஒரு பப்பாளிப் பழம்

செய்முறை

1. ஒரு பப்பாளிப் பழத்தை வெட்டி, அதன் துண்டுகளைக் கொண்டு மூக்கில் தடவவும்.
2. பின்பு வெதுவெதுப்பான நீர் கொண்டு முகத்தைக் கழுவவும்.
3. ஒரு வாரத்தில் மூன்று முறை இதே வழிமுறையைப் பின்பற்றவும்.

மூக்குமேல இப்படி கொஞ்சம் அசிங்கமா இருக்கா? இத அப்ளை பண்ணா உடனே போயிடும்…
பெண்ட்டோனைட் களிமண்

சருமத்தில் உள்ள அழுக்குகளை அகற்றி சருமத்தைப் புத்துணர்ச்சியுடன் வைக்க பெண்ட்டோனைட் களிமண் உதவுகிறது.

தேவையான பொருட்கள்

. ஒரு ஸ்பூன் பெண்ட்டோனைட் களிமண்
. ஒரு ஸ்பூன் ஓட்ஸ்
. தண்ணீர் தேவைக்கேற்ப

செய்முறை

1. மேலே கூறிய எல்லா மூலப்பொருட்களையும் ஒன்றாகக் கலந்து ஒரு பேஸ்ட் போல் செய்து கொள்ளவும்.
2. இந்த பேஸ்டை முகத்தில் தடவிக் கொள்ளவும்.
3. 15 நிமிடங்கள் அப்படியே விடவும்.
4. பிறகு தண்ணீரால் முகத்தைக் கழுவவும்.
5. ஒரு வாரத்திற்கு ஒரு முறை இந்த மாஸ்க் செய்முறையைப் பின்பற்றவும்

மூக்குமேல இப்படி கொஞ்சம் அசிங்கமா இருக்கா? இத அப்ளை பண்ணா உடனே போயிடும்…
கற்றாழை

சருமத்தின் உட்பகுதியில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற கற்றாழை உதவுகிறது . மற்றும் சருமத்திற்கு ஈரப்பதத்தைத் தருகிறது.

தேவையான பொருட்கள்

. ஒரு ஸ்பூன் கற்றாழை ஜெல்

செய்முறை

1. முதல் படியாக முகத்தைக் கழுவிக் கொள்ளவும்.
2. பின்பு உங்கள் மூக்கில் கற்றாழை ஜெல்லைத் தடவி இருபது நிமிடங்கள் அப்படியே விடவும்.
3. பின்பு குளிர்ந்த நீரால் கழுவவும்.
4. இதே வழிமுறையைத் தினமும் பின்பற்றவும்.

மூக்குமேல இப்படி கொஞ்சம் அசிங்கமா இருக்கா? இத அப்ளை பண்ணா உடனே போயிடும்…
தடுக்க சில குறிப்புகள்

உங்கள் சருமத்தின் துளைகள் அடைப்பதைத் தடுக்க சில குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை இப்போது காணலாம்.

. தினமும் சரும பாதுகாப்பிற்கான வழிமுறைகளைப் பின்பற்றவும்.

. சரும துளைகளை அதிகரிக்கச் செய்யாத சரும பராமரிப்புப் பொருட்களைப் பயன்படுத்தவும்.

. உறங்கச் செல்வதற்கு முன் மேக்கப்பைக் கலைத்து விடவும்.

. மூக்கு பகுதியை அதிக நேரம் எக்ச்பாளியேட் செய்ய வேண்டாம்.
. மூக்கில் அதிக முறை மேற்படலப் பிரிப்பை மேற்கொள்வதால் சருமம் வறண்டு சோர்வாக மாறுகிறது.028634

source: boldsky.com

Related posts

எண்ணெய் பசை சருமத்தை உடையவர்கள் பளபளப்பான சருமத்தை பெறுவதற்கான வழிகள்!…..

nathan

க பனியால் சருமம் ரொம்ப வறண்டு போகுதா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

சூப்பர் டிப்ஸ்! கேரட்டை இப்படி காய்ச்சி தேய்ச்சா முடி ரொம்ப வேகமா வளருமாம்…

nathan

காலையில் தூங்கி எழும் போது முகம் பிரஷ்ஷாக இருக்க வேண்டுமா? அப்ப இத ஃபாலோ பண்ணுங்க…

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…பருக்களால் உண்டான தழும்புகளுக்கு வீட்டில் செய்யக்கூடிய வைத்தியம்

nathan

கருப்பாக இருப்பவர்களுக்கான அழகு குறிப்பு

nathan

உங்க முகத்துல கரும்புள்ளிகள் அசிங்கமா தெரியுதா?சூப்பர் டிப்ஸ் !!

nathan

ஜப்பானியர்கள் இவ்வளவு மொழு மொழுனு இருக்க என்ன காரணம்னு தெரியுமா…? எப்படினு தெரிஞ்சிக்கணுமா..?

nathan

வயதாவதை தடுக்கும் பேக் ,tamil beauty tips

nathan