மொபைல் போன் – கண்டிப்பாக இருக்க வேண்டும். வீட்டு சாவி – கண்டிப்பாக இருக்க வேண்டும். வேலைக்கு செல்லும் பயண நேரத்தில் படிக்க ஒரு புத்தகம் – கண்டிப்பாக வேண்டும். சுவாச புத்துணர்வு மிண்ட்ஸ் – இருக்க வேண்டும். ஆபீசுக்கு செல்லும் பெண்கள் தங்கள் பேக்கில் வேறு என்னென்ன வைத்திருக்க வேண்டும்? சரி, பெண்கள் தங்கள் பேக்கில் வைத்திருக்க வேண்டிய அத்தியாவசிய மேக்கப் பொருட்களை மறந்துவிட்டோமே!
அழகான டோட் பேக் அல்லது சிறிய பேக் இப்படி எதனை நீங்கள் சுமந்து சென்றாலும் அதில் கண்டிப்பாக இருக்க வேண்டிய 7 மேக்கப் பொருட்களை பற்றி இனி காண்போம்.
1. நல்ல தரமான கண்மை: ஸ்மோக்கி, போல்ட் அல்லது பக்கத்து வீட்டு பெண் போன்ற சினேகமான தோற்றம் – இப்படி நீங்கள் எந்த லுக்கை தேர்ந்தெடுத்தாலும் இந்த மேக்கப் ஐட்டமை உங்களால் எளிதில் ஒதுக்கிவிட முடியாது. உங்களது கண்களுக்கு அழகான வடிவத்தையும் அழகினையும் அது ஒரே ஸ்ட்ரோக்கில் தரக்கூடியதாகும். மீட்டிங் ரூமில் அனைவரின் கண்களும் உங்கள் அழகான முகத்தின் மேல் படர்வதை நீங்கள் வேண்டாம் என்றா சொல்வீர்கள்?
2. லிப் பாம் அல்லது லிப் ஸ்டிக்: உங்களது தினசரி வாழ்க்கை முறைக்கு கவர்ச்சியான ரெட் அல்லது நளினமான பிங்க் என தினம் ஒரு வண்ணம் சேர்க்க தவறாதீர்கள். டிண்டட் லிப் பாம் உங்களது உதடுகளை வெண்ணை போன்று ஈப்பதத்துடன் வைத்திருப்பதுடன் உங்களது நாளுக்கும் உற்சாகம் கூட்டிடும். அது மட்டுமா, அதன் சுவை உங்களுக்கு விருப்பமான ஸ்ட்ராபெரீஸ் அல்லது வேறு பழங்களின் இனிமையை நாள் முழுக்க நினைவூட்டியபடி இருக்கும் இல்லையா?
3. அருமையான நறுமணம்: உடலுக்கும் உள்ளத்துக்கும் புத்துணர்வூட்டும் நல்ல பெர்ஃப்யூம் அல்லது பாடி மிஸ்ட் கண்டிப்பாக அவசியம் தானே? அதன் அருமையான சுகந்தம் உங்களுக்கு மட்டுமன்றி உங்களுக்கு அருகில் உள்ளவர்களுக்கும் புத்துணர்வூட்டும். உங்களது வருகையை அனைவருக்கும் அறிவிக்கும் மெல்லிய தென்றலாக அது இருக்கும் என்பதை சொல்லவும் வேண்டுமா!
4. கன்சீலர்: உங்களது அழகுக்கு பொலிவை சேர்க்கும் சூப்பர் ஹீரோ இது என்று சொன்னால் அது மிகையாகாது! பருக்கள், வடுக்கள், கறைகள் மற்றும் கண்ணுக்கு கீழே உள்ள கருவளையங்கள் ஆகியவற்றுக்கு உங்களது சருமத்துக்கு பொருத்தமான கன்சீலர் விடை கொடுத்துவிடும். ஒரு குவிக் டச்சப், கலைந்த மேக்கப் மற்றும் பொலிவற்ற நிறத்தை உடனடியாக விரட்டிவிடும்
5. ஃபவுண்டேஷன்: ஒழுங்கற்ற ஸ்கின் டோன் உங்களது அழகினை குறைப்பதாக நீங்கள் நினைத்தால், சரும நிறத்துக்கு ஏற்ற ஒரு நல்ல ஃபவுன்டேஷனை வாங்கி பயன்படுத்த தயங்காதீர்கள். ஆனால் நேச்சுரலான தோற்றத்தை அது கொடுக்க வேண்டும், எனவே உங்களது சரும நிறத்துக்கு பொருத்தமான ஃபவுண்டேஷனை தேர்ந்தெடுப்பது மிக அவசியம்.
6. காம்பேக்ட் அல்லது பிரஸ்டு பவுடர்: கன்சீலர் மற்றும் ஃபவுண்டேஷனை பயன்படுத்திய பிறகு லேசாக காம்பேக்ட் பவுடரை அதன் மேல் பூச மறக்காதீர்கள். புத்துணர்வினை கொடுத்ததற்காகவும் எண்ணெய் பசையற்ற சருமத்துக்காகவும் உங்களது முகம் கண்டிப்பாக நன்றி சொல்லும்.
7. டே க்ரீம்: பொலிவற்ற, உயிரற்ற சருமம் உங்களை வாட்டுகிறதா? ஆலோவேரா அடங்கிய டே க்ரீமை பயன்படுத்துங்கள். இயற்கையான கற்றாழை அடங்கிய Lakme 9 to 5 Naturale டே க்ரீம் உங்களது பேக்கில் கண்டிப்பாக இடம் பிடிக்க வேண்டிய ஒன்றாகும். அது உங்களது சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்து எந்த சூழலிலும் அதனை உலர விடாமல் காக்கிறது. அது மட்டுமன்றி, சூரிய ஒளியால் சருமம் பாதிப்படையாமல் க்ரீமில் உள்ள SPF 20 PA++ காப்பதுடன் ஆபத்தான யூவி கதிர்களின் பாதிப்பினையும் குறைக்கிறது. உங்களது சருமத்தின் இயற்கையான பொலிவு மற்றும் ஜொலிப்பினை இதனை தொடர்ச்சியாக பயன்படுத்துவதன் மூலம் பெறலாம்.
இறுதி ஆலோசனை
சரி, உங்களில் எத்தனை பேர் இந்த பட்டியலில் இருக்கும் பொருட்களை உங்கள் பேக்கில் வைத்துக் கொண்டுள்ளீர்கள்? உடனே உங்கள் மேக்கப் பையை எடுத்து இந்த அத்தியாவசிய மேக்கப் பொருட்களை அதில் வைத்துக்கொள்ளுங்கள். இந்த அவசியமான மேக்கப் பொருட்களை கைக்கு அடக்கமான உங்களது பேக்கில் வைத்துக் கொண்டு ஸ்டைலாக ஆபீசுக்கு நடை போடுங்கள். எந்த சவாலையும் சந்திக்கும் தன்னம்பிக்கையை அது கண்டிப்பாக அளிக்கும்.