26.6 C
Chennai
Sunday, Nov 17, 2024
அழகு குறிப்புகள்சரும பராமரிப்பு

பனிக்கால சரும பாதுகாப்பு முறைகள்

Homemade-Facial-For-Smooth-Skinசாதாரண காலத்திலேயே பொடுகு பெரும் பிரச்சனைதான். அதிலும், குளிர் காலத்தில் கேட்கவே வேண்டாம். இதற்கு, மிக முக்கியமான காரணமே, இன்றைய பெண்கள் தலையில் எண்ணெய் வைக்காமல் விடுவதுதான். இதனால் தலைக்குள் இருக்கும் சருமம் வறண்டுவிடும்.

இந்த பிரச்சனை போக்க இரண்டு டீஸ்பூன் நல்லெண்ணெயில் அரை டீஸ்பூன் மிளகு போட்டுக் காய்ச்சி இறக்கவும். எண்ணெய் இளஞ்சூடாக இருக்கும்போதே, தலையில் தடவி, 10 நிமிடம் மசாஜ் செய்த பின்னர் நன்றாக வாரிக்கொள்ள வேண்டும். 30 நிமிடங்கள் கழித்து, ஒரு டீஸ்பூன் கடலை மாவு, ஒரு டீஸ்பூன் வெந்தயத்தூள் போட்டுக் கரைத்து, தலையில் லேசாகத் தேய்த்து நன்றாக அலசிக் குளிக்க வேண்டும்.

• கை, கால்களில் தோல் வறண்டு, லேசாக நகம் பட்டுக் கீறினால்கூட, வெள்ளை வெள்ளைக் கோடுகளாகத் தெரியும். இதைப்போக்க… ஏடுடன் இருக்கும் பாலில், ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெயை விட்டு, கரண்டி அல்லது ‘விப்பர்’ கொண்டு நன்றாக அடித்துக்கொள்ள வேண்டும்.

இந்தக் கலவையைக் கை, கால்கள், கழுத்து என எல்லா இடங்களிலும் தடவி வைத்திருந்து, சாதாரண சோப் போட்டுக் குளிக்க வேண்டும். இதை குளிர் காலங்களில் தினமும் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

• 30 வயதின் தொடக்கத்தில் தோலில் சுருக்கம் அதிகமாகத் தெரியும். பால் சம்பந்தப்பட்ட பொருட்களைக்கொண்டு, இந்தச் சுருக்கத்தைப் போக்கலாம். பால், தயிர், வெண்ணெய் என ஏதாவது ஒன்றைச் சிறிதளவு எடுத்து, நன்றாக அடித்துக்கொள்ள வேண்டும்.

அதை அப்படியே சுருக்கம் உள்ள கை, கழுத்து, முகம் போன்ற இடங்களில் தேய்த்து, 10 நிமிடம் கழித்துக் குளிக்கலாம். அல்லது ஒரு ஸ்பூன் நல்லெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, இரண்டு உள்ளங்கைகளையும் பரபரவெனத் தேய்த்து, முகம், கழுத்து, கை, கால்களில் தடவி வைத்திருந்து, வெறும் தண்ணீர் ஊற்றிக் கழுவலாம். இதனால், பனியால் சருமம் பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்படும்.

• ஆலிவ் எண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் மூன்றையும் கலந்து வைத்துக்கொள்ளவும். குளிக்கும்போது, முதலில் உடலில் தண்ணீரை விட்டுக்கொண்டு, பிறகு இந்த எண்ணெய்க் கலவையைத் தேய்க்க வேண்டும். முதியவர்களின் சருமம் மிகவும் வறண்டு இருப்பதால், எண்ணெயை முதலில் தடவக் கூடாது. தண்ணீரை உடலில் ஊற்றிய பின் தடவினால், எண்ணெய் சமமாகப் பரவும்.

• 35 வயதினருக்கு, தேஙகாய்ப்பால் மிகச் சிறந்தது. தலையில் தேய்த்துக் குளித்தால், கூந்தல் மிருதுவாக இருக்கும். தலையில் அரிப்பு, பொடுகு மறையும். உடம்பில் தேய்த்துக் குளிக்கும்போது, சருமத்தில் சுருக்கம் மறைந்து, பொன்போல மினுமினுக்கும்.

Related posts

ஆஸ்துமா நோயினை முழுவதும் கட்டுக்குள் கொண்டு வர ஹெர்பல் ஜூஸ்!..

sangika

பனிக்காலத்தில் ஆரோக்கியமும் அழகும்!

nathan

ஆயில் சருமத்திற்கான அழகு குறிப்புகள்

nathan

மஞ்சள் பூசும் பழக்கம் உண்டா?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…ஷேவிங் செய்யாமல் வேக்சிங் செய்வதற்கான காரணங்கள்!!!

nathan

பாத வெடிப்பு நீங்க

nathan

உங்க வாயை சுத்தி அசிங்கமா கருப்பா இருக்கா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

சொந்த ஊர் திரும்பிய முதியவருக்கு நடந்த கொடுமை..! என்ன பைத்தியக்காரான்னு சொல்றாங்க சார்’!..

nathan

உதட்டின் மேல் மீசை போல் வளரும் முடியை போக்கு இயற்கை வைத்தியம் !!!

nathan