தினமும் தலை சீவும்போது கொத்து கொத்தாக முடி உதிர்கிறதா? இதனை நினைத்து அதிக மன வேதனை அடைகிறீர்களா? உங்கள் முடி உதிர்வதைத் தடுக்கும் ஒரு பொருள் உங்கள் வீட்டு சமயலறையில் உள்ளது. ஆம், உங்கள் கூந்தல் உதிர்வதைக் கட்டுப்படுத்தும் அந்த சிறப்பான பொருள் எது என்று தெரியுமா? அது பூண்டு.
இந்திய சமையலில் மிகவும் பிரபலமான ஒரு உணவுப்பொருள் பூண்டு. உணவின் சுவையை அதிகரிக்கும் பூண்டு, மிக அதிக ஊட்டச்சத்து மதிப்பைக் கொண்ட ஒரு உணவுப்பொருள். முடி உதிர்வைக் கட்டுப்படுத்த சிறப்பான முறையில் செயல்புரிகிறது பூண்டு. பூண்டில் உள்ள சில குறிப்பிட்ட பண்புகள் முடி உதிர்வைக் கட்டுப்படுத்துகின்றன.
பூண்டை இதோட கலந்து தேய்ச்சா முடி கிடுகிடுனு வேகமா வளருமாம்… ட்ரை பண்ணுங்களேன்…
பூண்டு எவ்வாறு வேலை புரிகிறது?
பூண்டில் உள்ள சில குறிப்பிட்ட தன்மைகள் காரணமாக, முடி உதிர்வைக் கட்டுப்படுத்தும் ஒரு முக்கிய மூலப்பொருளாக பூண்டு திகழ்கிறது. அவை,
. பூண்டில், ஜின்க், சல்பர் மற்றும் கால்சியம் போன்ற சில முக்கிய மூலப்பொருட்கள் இருப்பதால், முடி உதிர்வதை எதிர்த்து போராட உதவுகிறது.
. பூண்டு , நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருப்பதால், தலை முடி உதிர்விற்கு காரணமான கிருமிகளையும் பாக்டீரியாக்களையும் அழிக்க உதவுகிறது
. பூண்டில் உள்ள செலெனியம் என்னும் கூறு, இரத்த ஓட்டத்தை ஊக்குவித்து, முடி வளர்ச்சியைத் தூண்டுகிறது.
. முடியின் வேர்க்கால்களை சுத்தம் செய்து, அடைப்பைப் போக்குகிறது, இதனால் முடியின் வலிமை அதிகரிக்கிறது.
. தலையில் உள்ள பொடுகைப் போக்கவும் பூண்டு சிறந்த தீர்வைத் தருகிறது.
பூண்டை இதோட கலந்து தேய்ச்சா முடி கிடுகிடுனு வேகமா வளருமாம்… ட்ரை பண்ணுங்களேன்…
பூண்டு மற்றும் தேங்காய் எண்ணெய்
கூந்தல் ஆரோக்கியத்திற்கு, தேங்காய் எண்ணெய் பல்வேறு நன்மைகளை வாரி வழங்குகிறது. பூண்டுடன் இணைந்து தேங்காய் எண்ணெய், முடி உதிர்வை எதிர்த்து போராடுகிறது. இரண்டு பல் பூண்டை எடுத்து சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
தேங்காய் எண்ணெய்யை மிதமாக சூடாக்கி, அதில் பூண்டைச் சேர்க்கவும். இந்த கலவையை உங்கள் தலையில் நன்றாக மசாஜ் செய்து தடவவும். அரை மணி நேரம் இந்த எண்ணெய் உங்கள் தலையில் ஊறியவுடன், வழக்கமான ஷாம்பூ பயன்படுத்தி தலையை அலசவும்.
பூண்டை இதோட கலந்து தேய்ச்சா முடி கிடுகிடுனு வேகமா வளருமாம்… ட்ரை பண்ணுங்களேன்…
பூண்டு மற்றும் தேன்
பூண்டுடன் தேன் சேர்த்து முடி உதிர்வுக்கான சிகிச்சையில் பயன்படுத்தலாம். 8 பல் பூண்டை எடுத்து மசித்து, இரண்டு ஸ்பூன் அளவிற்கு சாறு எடுத்துக் கொள்ளவும். இந்த சாற்றில் ஒரு ஸ்பூன் அளவு தேன் சேர்த்து கலக்கவும். இந்த கலவையை உங்கள் தலையில் உச்சி முதல் நுனி வரை தடவவும்.
பிறகு 20 நிமிடங்கள் ஊற விடவும். 20 நிமிடம் கழித்து, வழக்கமான ஷாம்பூ கொண்டு தலையை அலசவும். ஒரு வாரத்தில் இரண்டு முறை இந்த தீர்வைப் பின்பற்றுவதால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.
பூண்டை இதோட கலந்து தேய்ச்சா முடி கிடுகிடுனு வேகமா வளருமாம்… ட்ரை பண்ணுங்களேன்…
இஞ்சி மற்றும் பூண்டு
ஒவ்வொரு வீட்டின் சமயலறையில் காணப்படும் மற்றொரு பொதுவான பொருள் இஞ்சி. இஞ்சியுடன் பூண்டை சேர்த்து, முடி உதிர்வதைக் குறைக்கலாம். 2 மிதமான அளவு இஞ்சித் துண்டுகளை எடுத்துக் கொள்ளவும். 8 பூண்டு பற்களை எடுத்துக் கொள்ளவும். இரண்டையும் நன்றாக மசித்துக் கொள்ளவும். இஞ்சி பூண்டு விழுது தயாரித்து ஒரு புறம் வைத்துக் கொள்ளவும்.
தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றுள் ஏதாவது ஒரு எண்ணெய்யை எடுத்து ஒரு பேனில் ஊற்றி சூடாக்கவும். இந்த எண்ணெயில் அரைத்து வைத்த விழுதைச் சேர்க்கவும். இந்த விழுது பழுப்பு நிறமாக மாறும் வரை சூடாக்கவும். பிறகு இந்த கலவையை ஆற விடவும். இந்த கலவை முற்றிலும் ஆறியவுடன், இஞ்சி பூண்டு விழுதை எண்ணெயில் இருந்து பிரித்து எடுக்கவும்.
பூண்டை இதோட கலந்து தேய்ச்சா முடி கிடுகிடுனு வேகமா வளருமாம்… ட்ரை பண்ணுங்களேன்…
எப்படி பயன்படுத்துவது?
பிறகு இந்த எண்ணெய்யை தலைமுடியில் தடவி, மென்மையாக மசாஜ் செய்து, அரை மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு வழக்கமான ஷாம்பூ கொண்டு தலையை அலசவும். வாரத்திற்கு ஒரு முறை இந்த செய்முறையைப் பின்பற்றவும்.
தொடக்கத்தில் பூண்டை தலைமுடிக்கு பயன்படுத்தும்போது லேசான எரிச்சல் ஏற்படலாம். ஒருவேளை அதிக எரிச்சல் ஏற்பட்டால், அதனைப் பயன்படுத்துவதை நிறுத்திக் கொள்ளவும். பூண்டு எண்ணெய்யை நேரடியாக தலையில் தடவுவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.