27.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
MIMAGE64c0442a4851ff3495bf07d6a5642ece
அழகு குறிப்புகள்

இன்ஸ்டாகிராம் பிளாக்கர் நம்ரதா யாதவ் தரும் முகத்தை பராமரிக்க டிப்ஸ்கள் இதோ!

”நான் எண்ணெய் வழியும் முகத்தை விரும்புகிறேன்,” என்று பெண்கள் ஒருபோதும் சொல்ல மாட்டார்கள்! நான் ஒன்றும் தவறாகச் சொல்லவில்லை. குளித்து முடித்ததும், முகத்தில் ஏற்படும் புத்துணர்வு, பளபளப்பு நாள் முழுக்க நீடிக்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். ஆனால், எவ்வளவுதான், கன்ன கதுப்புகளிலும், புருவங்களிலும் மாறி மாறி மேக்அப் செய்துகொண்டாலும், நம்மையும் மீறி, முகத்தில் எண்ணெய் வடிந்து, நம்மை சோர்வுற செய்துவிடும். இதுதான், பெண்களின் முக்கிய பிரச்னை. உங்களுக்கு மட்டுமே இந்த பிரச்னை ஏற்படுவதாக, விரக்தி அடைய வேண்டாம்! இது பெண்கள் அனைவருக்கும் ஏற்படும் பொதுவான பிரச்னையாகும்.

MIMAGE64c0442a4851ff3495bf07d6a5642ece

எத்தகைய சருமமாக இருந்தாலும் சரி, அதை காலை முதல் மாலை வரை, புத்துணர்ச்சியுடன், பளிச்சென பராமரிக்கும் ஆர்வம் உங்களுக்கு இருந்தால் போதும். உங்கள் முகத்தை அழகாக மாற்றுவது எளிது. எண்ணெய் வழியும் பிரச்னையை தவிர்க்க, இதோ உங்களுக்கு சில அழகு குறிப்புகள். உறுதியாகச் சொல்கிறேன், இவை உங்களுக்கு நிச்சயமாக நல்ல பயன் தரும்:

#1. மை ஒற்றும் காகிதம் எப்போதும் கையில் இருக்கட்டும்!

உங்களது முகத்தில் ரொம்ப எண்ணெய் வழிந்தால், மை ஒற்றும் காகிதம் பயன்படுத்தி, அதை ஒற்றி எடுத்துவிடுங்கள். இந்த மை ஒற்றும் காகிதம் எப்போதும் கையில் வைத்திருப்பது நல்லது. அனைத்து அழகுப் பொருட்கள் விற்கும் கடைகளிலும் இது கிடைக்கும்.MIMAGEc6104ac87ca8356fe50782aef8302951

#2. வாரம் ஒருமுறை அல்லது 2 முறை முகத்தை எக்ஸ்ஃபோலியேட் செய்திடுங்கள்!
முகத்தை நன்கு சுத்தம் செய்ய மறந்துவிடாதீர்கள். உங்கள் முகத்தில் எண்ணெய் வழிவதால், எந்நேரமும் அதனை பேப்பர் வைத்து துடைத்துக் கொண்டே இருக்கனும் என்பது அவசியமில்லை. அதற்குப் பதிலாக, முகத்தை சுத்தம் செய்ய உதவும் பொருட்கள் நிறைய மார்க்கெட்டில் கிடைக்கப்பெறுகின்றன. அவற்றை வாங்கி பயன்படுத்தலாம். முகத்தை எக்ஸ்ஃபோலியேட் செய்வதால், முகத்தின் இறுக்கம் மறைந்து, தளர்வு ஏற்படும். இதுதவிர, முகத்தில் உள்ள எண்ணெய்பசை, அழுக்குகள் அகன்றுவிடும். இந்த வைத்திய முறையை மிக மெதுவாகச் செய்ய வேண்டும். கடுமையாகச் செய்தால், ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

#3. முகத்தில் இலகுவான, எண்ணெய்-இல்லாத மாஸ்ச்சுரைஸர் தடவலாம்

முகத்தில் எண்ணெய் வழிவதை கட்டுப்படுத்த, இலகுவான, எண்ணெய் பசையற்ற மாஸ்ச்சுரைஸரை தடவுங்கள். இதை மறந்துவிடவேண்டாம்.

#4. மேக்அப் போடும் முன்பு பிரைமர் தடவுவது அவசியம்:

பிரைமர் தடவுவதால், முகத்தின் எண்ணெய்பசை உடனடியாக உறிஞ்சப்படுகிறது. உங்களுக்கு மென்மையான, வெல்வெட் போன்ற முகம் கிடைக்க, இது உதவும். லேக்மி ஆலி டே கிரீம், அக்வா ஜெல்லை பிரைமராக பயன்படுத்தி, கன்ன கதுப்புகள், நெற்றி உள்ளிட்ட பகுதிகளில் தடவுங்கள். இது நாள் முழுக்க முகம் பளபளப்புடன் இருக்க உதவும். இதுதவிர, முகத்தில் உள்ள ஓட்டைகள், பள்ளங்கள், தழும்புகள் போன்றவற்றை, இது மறைத்து, மேக்அப்பை எடுத்துக் காட்ட உதவும்.MIMAGEaaab42aaf4081037edc4d3799110d73d

#5. நிறம் உள்ள மாஸ்ச்சுரைஸர்/பிபி கிரீம் பயன்படுத்துங்கள்

வெயில் நேரங்களில், நமது முகம் மிகவும் களைப்படையும். இந்த உணர்வு எனக்கும் புரிகிறது. இதன்போது அதிகமான மேக்அப் செய்திருந்தால், அதுவும் உருகி, நமது முகத்தில் உள்ள துளைகளை அடைத்து, சுவாசிக்க விடாமல் பிரச்னை உருவாக்க நேரிடும். இது மேலும், எண்ணெய் அதிகமாக வழியும் நிலையை ஏற்படுத்திவிடும். இதை தவிர்க்க, நிறம் உள்ள மாஸ்ச்சுரைஸர் அல்லது பிபி/சிசி கிரீம்களை பயன்படுத்துங்கள். இவை மிக இலகுவாக இருக்கும் என்பதுடன், முகம் முழுக்க எளிதில் பரவக்கூடியது. இதுமட்டுமா? இவை சன்ஸ்கீரினாகவும் பயன்படக்கூடியவை என்பது மறந்துவிடாதீர்கள்!

#6. மேட்/ஆயில்ஃப்ரீ முகப்பூச்சை தேர்வு செய்யுங்கள்

மாஸ்ச்சுரைஸர் தேவை குறைந்து, அதிகமான மேக்அப் பூச்சு தேவைப்படும் நாட்களில், சரியான முகப்பூச்சு செய்வது நலம். ஆயில்-ஃப்ரீ அல்லது மினரல் பவுடர் கலந்த பவுண்டேஷனை தேர்வு செய்திடுங்கள். இவை அதிக எண்ணெய் வழியும்போது, பஞ்சு போல அதனை உறிஞ்சி, முக பளபளப்பை பாதுகாக்க உதவும்.

#7. நைட் கிரீம்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்!

படுக்கை நேரத்திலும், மேக்அப் விசயத்தில் சற்று கவனம் செலுத்துவது நலம் என்றே சொல்வேன். அதாவது, நீங்கள் தினமும் கிரீம் பயன்படுத்திவந்தால், லோஷன் வகையான பொருட்களை, படுக்கும் முன்பு, தடவிக் கொள்ளுங்கள். நீங்கள் லோஷன் விரும்பி எனில், ஹைட்ரேட்டிங் சீரம் பயன்படுத்தி பாருங்கள். அதேபோல, லோஷன் தடவும் முன்பு, எங்கே தடவுகிறோம் என்பதில் கவனம் தேவை. மறந்தும்கூட மூக்கின் மீது தடவ வேண்டாம். அங்குதான் நிறைய எண்ணெய் சுரப்பிகள் உள்ளன. அவற்றை தொல்லைப்படுத்திட வேண்டாம்!

#8. பவுண்டேஷனுக்கு பிறகு தேவையான அனைத்தையும் பூசிக் கொள்ளுங்கள், அப்போதுதான் ஆயில்ஃப்ரீயாக இருக்க முடியும்.

வேறு எதுவும் மேக்அப் தடவ நீங்கள் முடிவு செய்தால், ஆயில்-ஃப்ரீ வகையறாவை தேர்வு செய்யுங்கள். அவற்றை விருப்பம்போல முகத்தில் தடவி, பளபளப்பான மற்றும் எண்ணெய் பசை இல்லாத முகத்தை பெற்றிடுங்கள்.

#9. முகம் கழுவ ஷைன்கன்ட்ரோல் வகை கிளீன்சர் பயன்படுத்துங்கள்

நான் சொல்வதை நம்புங்கள். அதிகப்படியான எண்ணெய்பசையை அகற்ற இது உதவும்.

#10. உங்களது டயட்டில் மிகவும் கவனம் தேவை

முகத்தில் கன்ன கதுப்புகள், நெற்றி உள்ளிட்ட பகுதிகளில், அதிகமாக எண்ணெய் வடிய முக்கிய காரணம், ஜி&டி, மெர்லோட் அல்லது சிங்கிள் மால்ட், ஹாட் பீட்சாஸ் உள்ளிட்டவைதான். அவை இரத்தக்குழாயை விரிவடையச் செய்து, அதிக வியர்வை சுரக்கச் செய்கிறது. இதனால், முகத்தில் கூடுதலாக, எண்ணெய் வழிய தொடங்கும்! உங்களால் இந்த உணவுப்பழக்கத்தை முற்றிலுமாக தடுக்க முடியாவிட்டாலும், கேரட், பப்பாளி, கீரைகள், மற்றும் வைட்டமின் ஏ நிறைந்த உணவுகளை அதிகம் டயட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனால், எண்ணெய் வழிவது குறைந்துவிடும்.

இவ்வளவுதான். முகத்தில் எண்ணெய் வழிவதை குறைத்து, நாள் முழுக்க பளபளப்பாக தோன்ற இந்த 10 விசயங்களைத்தான் நீங்கள் செய்ய வேண்டும்!
இந்த குறிப்புகளை, அழகை விரும்பும் அனைத்துப் பெண்களிடமும் பகிர மறந்துவிடாதீர்கள்.

மேற்கண்ட பரிந்துரைகள், நம்ரதா யாதவ், ஃபேஷன் & லைஃப்ஸ்டைல் பிளாக்கர் நம்மிடம் பகிர்ந்துகொண்டவை.

Related posts

உக்ரைன் சுற்றுலா பயணிகளிடையே கருத்து மோதல்! (Video)

nathan

கழுத்தில் கறுமை மறைய…

nathan

உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க இவற்றை செய்யுங்கள்…..

sangika

தொடையில் உள்ள கருமையைப் போக்க ,beauty tips in tamil

nathan

நீங்கள் அறிய வேண்டியவை SPF மற்றும் டே க்ரீம்ஸ் பற்றி

nathan

தேவையற்ற ரோமங்களை வீட்டிலேயே இதற்கான இயற்கையான அழகு சிகிச்சைகளை மேற்கொள்ளலாம்.

nathan

குஷ்புவுக்கு டஃப் கொடுக்கும் நமீதா…

nathan

எல்லா வகையான சருமத்தினரும் பயன்படுத்தும் அழகு தரும் நலங்கு மாவு…

nathan

குளிர்காலத்தில் உதட்டை எப்படி பராமரிக்கணும் தெரியுமா?

nathan