நாம் தினமும் பொதுவாக காலை எழுந்தவுடன் குளித்து நமது உடலை புத்துணர்ச்சியாக்குவது வழக்கம். அவ்வாறு தினமும் குளிக்கும் நமக்கு பொதுவாக உடல் குளித்தல் மற்றும் தலைக்கு குளித்த என்று இரண்டு வகையாக பிரித்து குளிக்கும் பழக்கம் இருக்கும். பொதுவாக குளித்தல் என்பது தலைக்கு குளிப்பது மட்டும் ஆகும்.
உடல் நலம் பாதிக்கப்படும் பட்சத்தில் மற்றும் குளிர் காலங்களில் குளிரை தாங்க முடியாத நபர்கள் அவர்களின் உடல் நலனிற்க்கேற்ப தலைகுளியல் மற்றும் உடற்குளியலை மேற்கொள்வார்கள். மேலும்., நாம் தினமும் உறங்கி எழுந்தவுடன் சூரிய உதயத்திற்கு முன்னதாக குளிக்கும் வழக்கத்தை வைத்திருந்தால் நமது உடலானது நல்ல புத்துணர்ச்சியுடனும்., ஆற்றலாகவும் இருக்கும்.
இதன் காரணமாகவே தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் கண்டிப்பாக குளிப்பது அவசியம். இதுமட்டுமல்லாது இரவில் குளித்த பின்னர் உறங்குவதன் மூலமாக உடல் வெப்பம் மற்றும் மன அழுத்தம் குறைந்து நமது உடலானது பாதுகாக்கப்படுகிறது. இதற்கு அடுத்தபடியாக நாம் தினமும் கோடை காலத்தில் குளிக்க வேண்டிய முறைகளில் எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது உபயோகம் செய்யும் சீயக்காய் பொடி தயார் செய்வது எப்படி என்பது குறித்து இனி காண்போம்.
சீயக்காய் பொடியை தயாரிப்பது எப்படி:
சீயக்காய்- 1 கிலோ.,
செம்பருத்திப்பூ- 50 எண்ணம் (Nos).,
பூலாங்கிழங்கு – 100 கிராம்.,
காய்ந்தஎலுமிச்சை தோல் – 25 எண்ணம்.,
பாசிப்பருப்பு – 1/4 கிலோ.,
காய்ந்த நெல்லி – 100 கிராம்.,
கார்போக அரிசி – 100 கிராம்…
தயாரிக்கும் முறை:
மேலே உள்ள அனைத்து பொருட்களையும் வெயிலில் நன்றாக காய வைத்து., மிக்ஸியில் அரைத்த எடுத்து கொள்ளவும். எண்ணெய் தேய்த்து குளிக்கும் சமயத்தில் வெறும் நீரை மட்டும் கலந்து இந்த சீயாக்காயை தலையில் தேய்த்து அலச வேண்டும்.
நீர் இருக்கும் பட்சத்தில் சாதம் வடித்த கஞ்சியை உபயோகபடுத்த விரும்பும் பட்சத்தில் சாதம் வடித்த கஞ்சியை சீயக்காய் தேய்த்து குளிக்க உபயோகம் செய்யலாம். இதன் மூலமாக உரோமத்திற்கு தேவையான நல்ல வளர்ச்சி., இளநரை பிரச்சனைகள் நீங்கும். இதுமட்டுமல்லாது பொடுகு மற்றும் அரிப்பு பிரச்சனையில் இருந்து விலக்கம் கிடைக்கும்.